Thursday, 28 August 2014

நான் செய்த கச்சேரி !









தலைப்பைப் பார்த்து  யாரும் பயந்து விட வேண்டாம் . பாட்டுக்கும்  எனக்கும்  கொஞ்சம் தூரம். (கொஞ்சம் தான் )அதனால் நான்  பாடவில்லை. பாடவும் மாட்டேன்.
 இது வேறு....தொடர்ந்து படியுங்கள் .......

 பதிவுகள் எழுதத் தொடங்கிய போது , எனக்கு என் தளத்தை  சுற்றி வரவே நேரம் போதவில்லை. எழுதினேனோ  இல்லையோ, அலங்காரத்திற்கு  மிகவும் முக்கியத்துவம் கொடுத்தேன். அதான்......ஒவ்வொரு காட்ஜெட்டை சேர்ப்பதும் , நீக்குவதுமாக இருந்தேன்.  சில நாட்களுக்கு   என் தளத்தையே  சுற்றி வந்தவள் பின்னர் பலருடைய  தளங்களுக்கு  சென்று வர ஆரம்பித்தேன்.

அப்பொழுது  தான் அறிமுகமானது வலைச்சரம்.  வலைச்சரத்தில்  முதலில் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஒரு சில வார்த்தைகள்  மட்டும் வேறு கலரில் இருக்கிறதே என்கிற ஆச்சர்யம் தான் முதலில் வந்தது. பிறகு சில நாட்கள் கழித்துத தான் புரிந்தது அது அந்தந்த தளங்களுக்கு  செல்லும் லிங்க் என்று .

 
தினம் காலைக் காப்பி குடித்துக் கொண்டே லேப்டாப்பைத் திறந்து  யாராவது எனக்குப் பின்னூட்டம் எழுதியிருக்கிறார்களா  என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.( நான் பதிவு எழுதினாலும், எழுதாவிட்டாலும் ) நீங்கள் சிரிப்பது எனக்குத் தெரிகிறது.

 அட....இரண்டு பின்னூட்டம் காத்துக் கொண்டிருகிறதே! (நான் ஒன்றுமே எழுதாவிட்டாலும்  எனக்குப் பின்னூட்டம் இடுகிறார்களே  என்று ஒரே பெருமை தான்.). முதலில் பின்னூட்டத்தைப் படி  என்று மனசாட்சி சொல்ல யார் கருத்து என்று படித்தால் ...... திரு. ரூபன், திரு, திண்டுக்கல் தனபாலன்  இருவரும் என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருந்ததாக  சொல்லியிருந்தார்கள் .

அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்று வலைச்சரத்தில் நான்.... என்று ஒரு பதிவே போட்டு விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதற்குப் பிறகு பலமுறை அறிமுகபடுத்தப்பட்டேன்.

ஒருவருடம் உருண்டோடியது. ஒரு நாள் திரு. சீனா ஐயா  என்னை மெயிலில் தொடர்பு கொண்டு  ஒரு வாரத்திற்கு ஆசிரியர் பணி  ஏற்க  சொன்னபோது ,  தயக்கமாயிருக்க  பிறகு பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.

மீண்டும் என்னை ஒரு சில வாரங்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட போது ,
மறுக்க முடியவில்லை. என்னை நம்பி  அவரே வலிச்சரத்தைக்  கொடுக்கும் போது  நமக்கென்ன வந்தது என்று என் அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்து விட்டேன்.

அதன் இணைப்புகள் இதோ.
  1. அரட்டையின் அறிமுகம். 
  2. அரட்டைக் கச்சேரி --2
  3. அரட்டைக் கச்சேரி --3
  4. அரட்டைக் கச்சேரி--4 
  5. அரட்டைக் கச்சேரி--5
  6. அரட்டைக்கச்சேரி --6
  7. அரட்டைக் கச்சேரி  நிறைவு

எல்லாம் சரி. நீ எழுதியது இருக்கட்டும் . யார் படித்தார்கள் என்று கேட்காதீர்கள். விதி யாரை விட்டது. வலைச்சர வாசகர்கள் அவ்வளவு பேரும் படித்திருக்கிறார்களே !

படித்து விட்டார்களே எதற்கு இந்தப் பதிவு  என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஒரு வேளை.. ....நீங்கள் படிக்காமல்  இருந்தால்........ விட்டு விடுவேனா  உங்களை.
உங்கள்  பார்வைக்குத்  தான் இந்தப் பதிவு.  நீங்கள் படிக்காமல் தப்பித்து விடக் கூடாதல்லவா? அந்த நல்ல எண்ணம் தான். 






15 comments:

  1. ஆஹா இப்படிக்கூட பதிவு போடலாமா ? நான் 7 நாட்களும் தொடர்ந்து வந்தேன் அம்மா இறுதி நாளில் என்னையும் அறிமுகப்படுத்தி இருந்தீர்கள். ஆகஸ்ட் 30 எனது '' மௌனமொழி'' கவிதையை கண்டிப்பாக காணவும் அன்று எனது வாழ்வின் முக்கியமான நாள்.

    ReplyDelete
  2. அட இப்படியும் பதிவு தேத்தலாமோ...
    தெரியாமப் போச்சே அம்மா.....

    ReplyDelete
  3. மகிழ்ச்சியும் சந்தோஷமும். எங்கள் ப்ளாக்கின் மூன்று வெவ்வேறு பதிவுகளை அங்கே சுட்டிக் காட்டியிருந்தீர்கள். நன்றியும்!

    ReplyDelete
  4. எனக்கும் தங்களைப்போலவே பாட்டுக்கச்சேரிகளில் அவ்வளவாக முழு ஈடுபாடு இல்லைதான் என்றாலும் தினமும் தங்களின் ஏழு அரட்டைக் கச்சேரிகளுக்கும் தவறாமல் [சுண்டலுக்காகவாவது] நான் வந்தேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  5. தங்களின் மூன்றாம் நாள் கச்சேரியில் என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தினைப்பற்றியும் நிறைய சொல்லியிருந்தீர்கள்.

    //பல்சுவை வித்தகர் மிகப் பிரபலமான பதிவர் வைகோசார், கோபு சார் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள். விமரிசனப் போட்டி ஒன்று வைத்து நடத்தி அதற்கு சன்மானமும் வழங்கும் மிகப்பெரிய மனதுக்காரர் இவர்.

    அடை ரெசிபியை இதைவிடவும் அருமையாக யாராவது சொல்ல முடியுமா என்று படித்துப் பார்த்து சொல்லுங்கள்.

    மஹா பெரியவரைப் பற்றியதொடர் ஒன்று எழுதியிருக்கிறார். அதில்அன்னதான மகிமைப் பற்றிப் படித்து தான் பாருங்களேன்.

    இவருடைய தேடி வந்த தேவதை கதையைப் படித்துப் பாருங்கள். அவருடைய சமூக அக்கறை வெளிப்படும்.

    போட்டி வைத்து சன்மானம் வழங்குவதே பெரிது. அதிலும் வித்தியாசமான போட்டிக்குள் போட்டி ஒன்றை வைத்திருக்கிறார்.அதற்கும் பரிசு தந்து விட்டார்.
    முடிந்தால் இவருடைய விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறுங்கள். //

    அவற்றிற்கு மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

    தங்களின் இந்த என்னைப்பற்றிய அறிமுகம் வலைச்சரத்தில் 92வது அறிமுகமாகும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது சமீபத்தில் அது 100ஐ எட்டிவிட்டது. http://gopu1949.blogspot.in/2014/08/100.html

    மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இனிய ‘விநாயகர் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  6. ஆஹா! அருமை.
    வலைச்சரத்தில் என்னையும் அறிமுகபடுத்தி இருந்தீர்கள் சிறப்பாக.
    அரட்டைகச்சேரி முடிந்தவுடன் ஊருக்கு போனேன்.
    இன்னும் ஊர் விடவில்லை போக வேண்டும். பதிவுகள் நிறைய படிக்க வேண்டி உள்ளது.

    ReplyDelete
  7. உங்களுக்கு மார்க்கெடிங் டெக்னிக் நன்கு வளர்ந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. வணக்கம் அம்மா.
    வினாயக சதுர்த்தி வாழ்துக்கள்.
    என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    பாடுவதை பற்றி எழுதி உள்ளீர்கள். பாடுவது என்பது மற்றவர்களுக்கு அல்ல. நம் மகிழ்ச்சிக்காக தானாகவே வெளிப்படும் "புனல்" ( அப்படி சொல்லலாம் என் நினைக்கிறேன்). ஆகையால் நன்றாகவே கச்சேரி செய்யுங்கள்.

    ReplyDelete
  9. இனிய ‘விநாயகர் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

    வலைச்சரக்கச்சேரி அருமை.!

    ReplyDelete
  10. அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!.
    என்னையும் அறிமுகம் செய்து வைத்ததை நினைவு கொள்கின்றேன்..
    தங்களின் அன்பினுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  11. நான் வலைச்சரத்தில் வேறு யாருக்கும் தொடர்ச்சியாக ஏழு நாட்களும் கருத்துரை எழுதியது இல்லை. நீங்கள் ஆசிரியராக இருந்த ஏழுநாட்களுக்கும் நான் கருத்துரை எழுதியது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. மீண்டும் நினைவில் தந்ததற்கு நன்றி!
    த.ம.2

    ReplyDelete
  12. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அம்மா ! காலில் அறுவைச் சிகிச்சைகள் மாறி மாறி நிகழ்த்தப்பட்ட
    நிலையில் உள்ளேன் ஆதலால் அதிகமாக வலைத் தளத்தில் கருத்துரைகளை
    இட முடியாமல் போய்விட்டது .இப்போது ஓரளவு குணமடைந்த நிலையில் உள்ளேன் .
    விரைவில் எல்லோரது தளத்திற்கும் முடிந்த அளவு கருத்திட காத்திருக்கின்றேன்
    தங்களின் இயல்பான பேச்சுநடை என் உள்ளத்தைக் கவர்ந்து இழுகின்றது அம்மா!
    அயர்வின்றி தங்களின் ஆக்கங்கள் வலைத் தளத்திலும் வலம் வரட்டும் .மிக்க
    நன்றி பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியரா இருந்தீங்களா !! நல்லவேளை, உங்களின் இந்தப் பதிவை நீங்கள் எழுதாமல் இருந்திருந்தால் எனக்குத் தெரியாமலே போயிருக்கும். அல்லது தெரிய நீண்ட நாட்கள் ஆகியிருக்கும். நேரம் கிடைத்ததும் போய் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். இப்போதே ஆர்வமாக இருக்கிறது.

    ReplyDelete
  15. மிகச் சுவாரஸ்யமான பதிவு
    வல்லவனுக்கு புல்லுமாயுதமென்பதற்கு
    இந்தப் பதிவு அருமையான அத்தாட்சி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்