Sunday, 16 June 2013

தாயுமானவன்
கடவுளால்   எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் தான்  தாயைப் படைத்தார் என்று சொல்வதுண்டு.
ஆனால் தந்தையை மறந்து விடுகிறோம் நாம் சில சமயங்களில்.

" unsung heroes " மாதிரி  ஆகிவிடுகிரார்களோ ? பல வீடுகளில் .

ஒரு குழந்தை பிறக்கும் போது  தான்  தாயும் பிறக்கிறாள். 
ஆனால்  மனைவி கர்ப்பமானதுமே  இளம் கணவன் தந்தை பொறுப்பை ஆசையாய் ஏற்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

அங்கே ஆரம்பிக்கிறது ஒரு தந்தையின் கடமை. தன மனைவியை குழந்தை போல் பாவித்து , பேணிப் பாதுகாத்து அவள் விருப்பங்களை  நிறைவேற்றுவதில் ஆரம்பிக்கிறது அவன் கடமை.

சுமப்பதை ஒரு இன்பமகவே கருதுகிறான் . குழந்தை பிறந்த பிறகு ,தாய்க்கோ
ஒரே  சீராட்டலும்,கவனிப்பும்  தான் ஆனால் தந்தையை யாருமே கண்டு கொள்வதில்லை. ஆனால் அதற்காக அவன் தன்  கடமைகளிலிருந்து  பின்வாங்குவதில்லை..

குழந்தை வளர வளர அவனுடைய  பொறுப்பும் அதிகமாகிறது.
சான்றோனாக்கும்  கடமையை    நிறைவேற்ற  ஒரு அப்பா படும் கஷ்டம் இருக்கிறதே.........

LKG அப்ளிகேஷன் வாங்குவதற்கே  நடு இரவில் "Q" வில் நிற்பதில்  ஆரபிக்கிறது.அங்கிருந்து  ,கராத்தே கிளாஸ் ,பாட்டு கிளாஸ் , கம்ப் யுட்டர் கிளாஸ் .......  கல்லூரி ,என்று தொடரும்  பணி .
தாயுடன் கூடவே  பயணிக்கிறான் .
தன மகனின்/மகளின்  வெற்றியில் .....ஆஹா.....அவன்கொள்ளும் பெருமிதம் இருக்கிறதே........சொல்லி  மாளாது  .
 மகன்/மகள் ஒரு வேளையில் அமரும் வரை தொடர்ந்து ,பின் திருமணத்தில்  முடிவது போல் தோன்றும்......

இந்தப் பொருளாதாரத் தேவைகளுக்காக  தன்னையே மெழுகுவத்தியாக்கும்
தந்தைகள்  ஹீரோக்கள் தான்.

ஆனால் தன மகனிற்கு மட்டும் அவன் ஹீரோ அல்ல பெரும்பாலான வீடுகளில்.
உண்மை தானே.........

தாயில்லாத வீடுகளில் அவன் வேலை இரட்டிப்பாகி  பருவ வயதில் நிற்கும்  மகளை  கட்டிக் காப்பாற்றி  மண  முடிக்கும்  மாபெரும்  பொறுப்பைத் தனியொருவனாக  செய்து  தாயுமாகிறான் 


எல்லா கடமைகளையும் முடித்து  விட்டு ...அப்பாடி......என்று அப்பா திரும்பிப் பார்க்கும் போது,தலை மட்டும் வெள்ளை ஆவதில்லை, கண்ணிலும் வெள்ளெழுத்து விழுந்து விடுகிறது.

எத்தனை  கடமைகள் ...........
சுமப்பதே சுகம்  என்று  குடும்பத்திற்காக மெழுகாய் உருகும்  தாயுமானவனாய்
இருக்கும்  அப்பாக்களுக்கு  என் நன்றி கலந்த வணக்கம்.

தந்தையர் தின வழ்த்துக்கள் !!!!!!!!! 

image courtesy----google
32 comments:

 1. தந்தையர் தினத்தன்று வெகு சிறப்பாக அப்பாக்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள், ராஜி!
  எத்தனையோ அப்பாக்களின் சம்பாத்தியத்தில் மனைவி குழந்தைகள் பல சௌகரியங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்; ஆனால் இவர்கள் பாவம் ஆபீஸில் உழைத்துக் கொண்டிருப்பார்கள்.

  நீங்கள் சொல்லியிருப்பது போல இளம் வயதில் மனைவி இறந்த பின் மறுமணம் பற்றி யோசிக்காமல் தாயின் கடமைகளையும் செய்து, குழந்தைகளை படிக்க வைத்து கல்யாணம் செய்து தரும் அப்பாக்கள் எந்தக் காலத்திலும் போற்றத்தக்கவர்களே!

  நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அப்பாக்களின் அருமை சட்டென்று வெளியே தெரிவதில்லை.தாய்க்கு கிடைக்கும் புகழ்ச்சி தந்தைக்கு கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன்.
   முந்தி வந்து கருத்திட்டமைக்கு நன்றி ரஞ்சனி.

   Delete
 2. //இந்தப் பொருளாதாரத் தேவைகளுக்காக தன்னையே மெழுகுவத்தியாக்கும் தந்தைகள் ஹீரோக்கள் தான்//

  நிச்சயமாக ஹீரோக்கள் தான்.

  [ஒருசிலர் மட்டும் விதிவிலக்காக ஜீரோக்களாக ஆக்கப்பட்டு விடுவதும் உண்டு].

  //ஆனால் தன மகனிற்கு மட்டும் அவன் ஹீரோ அல்ல பெரும்பாலான வீடுகளில்.உண்மை தானே.........//

  உண்மை தான். சில மகன்களுக்கு மட்டும், தந்தையானவர் ஹீரோ அல்ல வெறும் ஜீரோ மட்டுமே,
  உலகம் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.

  பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

  இனிய தந்தையர் தின வழ்த்துக்கள் !!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.
   இனிய தந்தையர் தின் வாழ்த்துக்கள்.

   Delete

 3. இன்று பொழுது விடிந்ததுமென் இரு மகன்கள், மருமகள்கள் பேரன்கள், பேத்தி என்று அனைவரிடமும் இருந்து தந்தையர் தின வாழ்த்துக்கள் கிடைக்கப் பெற்றேன். நானும் என் மகன்களை ( அவர்களும் தந்தையர்தானே ) வாழ்த்தினேன். மகிழ்ச்சி அனுபவம் பகிர்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன்!
   ஒரு சகோதரியாக நானும் வாழ்த்துகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். கொஞ்சம் லேட் தான் .ஆனால் எந்நாளும் தந்தை கொண்டாடப்பட வேண்டியவரே!
   நன்றி

   Delete
 4. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜராஜேஸ்வரி உங்கள் வாழ்த்துக்கு!

   Delete
 5. சுருக்கமாகச் சொன்னாலும்
  மிகச் சிறப்பாக தந்தையரின் சிறப்பை
  பதிவு செய்துள்ளது மனம் கவர்ந்தது
  சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார் உங்கள் பாராட்டிற்கு.
   இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.

   Delete
 6. // தன்னையே மெழுகுவத்தியாக்கும்
  தந்தைகள் ஹீரோக்கள் தான்.//
  என் பிள்ளை, பெண்கள் குழந்தைகள் ஆக இருந்த போது நான் மெழுகு வத்தியாக இருந்ததில்லை.
  தானே தாயாகவும் தந்தையாகவும் இருந்து வந்தாள் என் மனைவி.

  அதே சமயம் என் இளையவன் ஒருவன் நீங்கள் சொல்லும் மெழுகுவத்திக்கு ஒரு சிறந்த உதாரணம்
  என சொன்னால் மிகையாகாது.

  தந்தையாகத் துவங்கி, தாயாகவும் பரிணமித்து, தன்னை ஒரு மெழுகுவத்தி போல உணரா செயல்பட்டு
  இருக்கும் அவன் வாழ்க்கை தந்தையின் சிற்ப்பியல்புகளுக்கு ஓர் சிறந்த நல் இலக்கு

  மேலும், தாயைப் போற்றும் உலகு அந்த அளவுக்கு தந்தையைப்போற்று வதில்லை என்பதும் உண்மையே.

  சரவண பவனிலே தோசை சுவை என்று தான் முதல் அடியில் சொல்லுகிறோம். அதன் சுவை அந்த்
  தோசையுடன் ஆசை ஆசையாக இணையும் சட்னி சாம்பார் கூட இருக்கும்பொழுதுதான் என்பது
  அதை உண்டவன் மட்டுமே உணர முடிகிறது.

  தந்தை தாய் இருந்தால், உனக்கிந்த நிலை வருமோ அய்யா என்று சிவனைப் பார்த்து பாடிய பாட்டு ..

  தாயும் தந்தையும் இரு கண்கள். இரு கண்களும் இணைந்து செயல்படுவது, அவற்றினைக் கொண்டவனின்
  பூர்வ புண்ணியமே.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ////சரவண பவனிலே தோசை சுவை என்று தான் முதல் அடியில் சொல்லுகிறோம். அதன் சுவை அந்தத் தோசையுடன் ஆசை ஆசையாக இணையும் சட்னி சாம்பார் கூட இருக்கும்பொழுதுதான் என்பது அதை உண்டவன் மட்டுமே உணர முடிகிறது. //

   மிகவும் அருமையான உதா’ர ண ம்’. ;)))))

   வெகுவாக ரஸித்தேன், சிரித்தேன், மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா !

   Delete
  2. சுப்பு ஐயா, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
   எனக்கும் ஆதங்கமே. தாய்க்கு கிடைக்கும் போற்றுதல் தந்தைக்கு கிடப்பதில்லை. அதை எத்தனை எதார்த்தமான உதாரணத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்.
   என்னைப் போலவே வைகோ சாரும் அதை ரசித்திருக்கிறார் பாருங்கள்!

   Delete
 7. பல நாள் திட்டு வாங்கும் ஆண் ஒரு நாள் வாழ்த்து பெறும் நாள் தான் தந்தையர்தினம்.

  வாழ்த்தியர்க்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் மனைவி திட்டுவதில்லை MTG.
   தந்தை எல்லா நாளும் போற்றப்பட வேண்டியவரே!
   நன்றி.

   Delete
 8. Such beleaguered fathers deserve such encomiums. Nice tribute.

  ReplyDelete
 9. குடும்பத்திற்காக மெழுகாய் உருகும் தாயுமானவனாய்
  இருக்கும் அப்பாக்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம்.//உண்மைதான் உங்களுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு.

   Delete
 10. தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்.

   Delete
 11. தந்தையர் தினத்தன்று அருமையானதொரு பதிவு. வாழ்த்துகள் தோழி !!! தங்களுக்கு எனது இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் தோழி !!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தமிழ்முகில் .
   என்னால் உங்கள் வலைப்பூவைத் தொடர முடியவில்லை. மீண்டும் இன்று முயற்சிக்கிறேன்.

   Delete
  2. தாங்கள் எனது வலைப்பூவை தொடர்வது மிக்க மகிழ்ச்சி தோழி.தங்களது மேலான கருத்துகளையும் ஊக்கத்தையும் எதிர்நோக்குகின்றேன். நன்றி.

   Delete
  3. உங்கள் வலைப்பூவைத் தொடரும் வழி ஒருவழியாகக் கண்டு பிடித்தேன்.இனிமேல் நீங்கள் எழுதினால் எனக்குத் தெரிந்து விடும். தவறாமல் கருத்திடுகிறேன்.

   Delete
  4. மிக்க நன்றி தோழி.

   Delete
 12. தாயும் தந்தையும் இரு கண்கள். இரு கண்களும் இணைந்து செயல்படுவது, அவற்றினைக் கொண்டவனின்
  பூர்வ புண்ணியமே. //
  சுப்பு சார் சொன்னது போல் இருகண்களும் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள் தான்.
  தாயின் அருமை, தந்தையின் அருமை தெரிந்தவர்கள் வாழ்வில் எல்லாநலங்களையும் பெறுவார்கள் என்பது உண்மை.
  அருமையான பகிர்வு.
  ஊருக்கு சென்று விட்டதால் இப்போது தான் பதிவுகளை படித்து வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி .ஊருக்குப் போய்விட்டு வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் கருத்திட்டு பாராட்டியதற்கு நன்றி.

   Delete
 13. இங்கிருந்தே பதிவுகளா!! வாழ்த்துகள்.

  கடமையின் மறுபெயர்தான் அப்பா.குடும்பத்தை விட்டு வெளியிடம் சென்று அவர் படும் துன்பங்கள் சொல்லி மாளாது.

  'தன் மகனிற்கு மட்டும் அவன் ஹீரோ அல்ல பெரும்பாலான வீடுகளில்'___ சரியா சொன்னீங்க, எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

  மொத்தத்தில் மனதை உருக்கிவிட்டது கட்டுரை.அனைத்து அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சித்ரா, பெண் வீட்டிற்கு வந்திருக்கிறேன். என் வீட்டில் இருக்கும்
   வெளி வேலைகள் எல்லாம் இங்கு இல்லையே!
   அதனால் தான் முடிந்தவரை தொடர்ந்து எழுதுவோமே என்று.....

   Delete
 14. தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. தந்தையைப் பற்றி எழுதியிருப்பது சிறப்பு.

  ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்