Tuesday 24 September 2013

நடுவிலே கொஞ்சம் நேரத்தைக் காணோம்

ரொம்பவும்  மகிழ்ச்சியில் இருந்தீர்களா? அப்பாடி........ மூன்று  வாரங்களாக இவள் இம்சையிலிருந்து  தப்பித்து  விட்டோம் என்று  .அப்படியெல்லாம் விட்டு விடுவேனா  என்ன? 

உங்கள் நினைப்பில் ஒரு லாரி மண்.   

இதோ வந்து விட்டேனே.......... ஆனால் இப்பொழுது உங்களிடம் ஒரு உதவி கேட்கத் தான் வந்திருக்கிறேன்.  யாராவது நான் கேட்பதை எனக்கு தேடித் தந்து விடுங்கள். அப்புறம்  நான் இந்தப் பதிவுலகம் பக்கம் வந்து உங்களை இம்சிக்கவே மாட்டேன்.

 It is a promise......o.k.

விஷயத்திற்கு வருகிறேன்.........

நான் நழுவ விட்ட ஒன்றைத் தேடி தருவீர்களா?....

என்ன " பணமா ?"
இல்லை.

பதவியா?
அப்படிஎன்றால்........

நகை நட்டு  ஏதாவது?..........
நகையாவது  நட்டாவது   அதெல்லாம்  எப்படி இருக்கும்?

பின் எதைத் தான் நழுவ விட்டாய்? என்று சலித்துக் கொள்கிறீர்களா?

சில மணி நேரங்களைத்  தொலைத்து விட்டேன்.

"என்ன உளறல் இது  "  நினைப்பது எனக்குக் கேட்கிறது.

கொஞ்சம் பொறுமையாக என் கதை கேட்டு ஒரு தீர்வு சொல்லுங்களேன்.
சென்ற திங்கட்கிழமை  இரவு  சுமார் பதினோரு மணிக்கு  அமெரிக்காவை விட்டுப்  புறப்பட்டேன்  . கவனமாகப் படியுங்கள்.   சரியா.......

எங்கே விட்டேன்.

இரவு பதினொரு  மணிக்கு  அமெரிக்காவிலிருந்து புறப்பட்டேனா.........

சுமார் பதின்மூன்று மணி நேர  பயணத்தில்  அபுதாபி வந்து சேர்ந்தோம்.

அங்கு  மூன்று மணி நேர ஹால்ட்.  அடுத்த ப்லைட்டிற்கு  முன்னால் 
Duty Free Shop இல்  சாக்லேட்ஸ் வாங்கிக் கொண்டு  , பொருட்களும், ரசீதும் ஒத்துப் போகிறதா  என்று ஒரு தடவைக்கு இரு தடவை செக் செய்து கொண்டு வெளியேறினேன். 

கேட்டிற்கு வந்தோம் . சென்னை ப்ளைட்டைப் பிடித்தோம்.  
ஐந்து மணி நேரப் பிரயாணத்தில்  சென்னை வந்தடைந்தோம். 

அளவில்லா மகிழ்ச்சி. ஸ்வீட் சென்னையை விட்டு விட்டு  இவ்வளவு மாதங்களாகி விட்டதே!

பெட்டிகளை கன்வேயர் பெல்டிலிருந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். .
 ஹோட்டல் சங்கீதாவிலிருந்து வந்த பொங்கல் நெய்யின் மணமும், கம கம  சாம்பார் மணமும் , எங்களை உள்ளே இழுத்து கொண்டது.

என்ன தான் ஸ்டார் ஹோட்டல்  சாப்பாடு  விமானத்தில்  பரிமாறப் பட்டாலும் 
நம் பொங்கல் சாம்பாருக்கு  ஈடாகுமா? 

பட படவென்று பொங்கலும், வடையும் ,வயிற்றுக்குள் அடைக்கலமாயின.

பிறகு தான்  நான் ஒரு நிதானத்திற்கு வந்தேன்.

" மணி என்ன ?"--இது நான்.

மணி இப்ப காலை ஆறு மணி "-- அவர்.

என்னதிது  ? குழப்பத்துடன் அவர் அமர்த்திய டாக்சிக்குள் 
யோசனையுடன் அமர்ந்தேன்.

"இன்று புதன் கிழமை " என்று மேலும் குழப்பினார்.

குழம்பிய  மனதுடன் வீட்டில் நுழைந்தேன்.
நான்கு மாதத் தூசியை மேக்கப்பாய்  போட்டுக் கொண்டிருந்த வீட்டை  கொஞ்சமாய் சுத்தம் செய்து  குளித்து  நிமிர்ந்தால் ,  மணி இரண்டைக் காட்டியது.

மீண்டும் சரவண பவன்  அண்ணாச்சி  எங்கள் வயிற்றுக்கு உணவளித்து புண்ணியம் கட்டிக் கொண்டார்.

அங்கே தான் என் குழப்பத்தை ஆரம்பித்தேன்.

சாம்பாரை சாதத்துடன் பிசைந்து கொண்டே ," மொத்தமாக நாம் பிரயாணம் செய்த நேரம்  வெறும் 21 மணி நேரமே.  அப்படியானால்   , திங்கட்   கிழமை கிளம்பிய  நாம் செவ்வாய்   இரவே யல்லவா சென்னை வந்திருக்க வேண்டும்.ஆனால் நாம் வந்திருப்பதோ புதன்  காலை தான். "

" அப்படியானால் அந்த  சுமார்  அரை நாள் எங்கே போனது.
எங்கே நழுவ விட்டேன். அபுதாபியிலா..இல்லை அமெரிக்காவிலேயே விட்டு விட்டேனா....இல்லை  ..duty free shop லியா........."என்று கேட்டதற்கு

" நீ கொஞ்சம் பசி மயக்கமும், பிரயாணக் களைப்புமாக ஜெட் லேகிங்கில் இருக்கிறாய். நீ நேரத்தை  Greenwich line  அருகில் தான் விட்டு விட்டாய் . மறந்து விட்டாய் "என்றார் என்னவர்.

Greenwich Line  இப்படி   witch ஆகவே மாறி சூனியம் வைத்து  என் நேரத்தைப் பறித்துக் கொண்டதே!

நேரம் பொன்னானது  அல்லவா".

அதனால் யாராவது  நான் நழுவ  விட்ட நேரத்தை தேடிக் கொடுப்பீர்களா?

எனக்கு யாரும் உபதேசம் செய்ய வேண்டாம். Greenwich line, one day gain, one day loss போன்ற  டெக்னிகல் சமாசாரங்களைக் கேட்டு கேட்டு என் காது புளித்து விட்டது.

எனக்கு வேண்டியது  நான் நழுவ விட்ட நேரம் அவ்வளவு தான். யாராவது 
இங்கிருந்தே  அதைத் தேடிக் கொடுத்தாலும் சரி, இல்லை Greenwich line தாண்டிப் போகிறவர்களாவது ,என் நேரத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாலும் சரி. நான் சந்தோஷப் படுவேன்.....

நான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மறக்க மாட்டேன்.......  

நான் தொலைத்த நேரம் எங்கே? எங்கே? எங்கே?


image courtesy----google.Thursday 5 September 2013

ஊருக்கே ராஜாவானாலும்.........
உலகுக்கே  சட்டாம்பிள்ளையாகத் துடிக்கும் அமெரிக்காவின் முன்னாள்  ஜனாதிபதி திரு. ஆப்ரஹாம்  லிங்கன் ,ஜனநாயகத்தை வற்புறுத்தியவர்.

அவர்  தன்  மகனைப் பொருத்தமட்டில் சாதாரணத் தந்தையாகவே நடந்து கொண்டிருக்கிறார்.

அவர் தன்  மகனின் ஆசிரியருக்கு  எழுதிய கடிதத்தைப் படியுங்கள்.  அதில் அவரது  அக்கறை, பாசம், ஆதங்கம் எல்லாவற்றையும் சரிவிகிதத்த்தில் கலந்து எழுதியிருக்கிறார் என்பது எல்லோரையும் வியப்படைய வைக்கும்.
ஆசிரியருக்கு வேண்டிய மரியாதையை  கொடுத்து அழகாய் முடித்திருக்கிறார்.

அவர் கடிதத்தை தமிழாக்கம் செய்தால் , அதன்  வீர்யத்திற்கு பங்கம்  வந்து விடுமோ என்கிற பயத்தில்  அப்படியே பிரசுரிக்கிறேன்.

Abraham Lincoln's letter to his son's teacher.

He will have to learn, I know, 
that all men are not just,
all men are not true.
But teach him also that 

for every scoundrel there is a hero;
that for every selfish Politician, 

there is a dedicated leader...
Teach him for every enemy there is a 

friend,

Steer him away from envy,
if you can,
teach him the secret of
quiet laughter.

Let him learn early that 

the bullies are the easiest to lick... Teach him, if you can,
the wonder of books... 
But also give him quiet time 
to ponder the eternal mystery of birds in the sky,
bees in the sun, 
and the flowers on a green hillside.

In the school teach him 

it is far honourable to fail 
than to cheat... 
Teach him to have faith 
in his own ideas, 
even if everyone tells him 
they are wrong... 
Teach him to be gentle 
with gentle people, 
and tough with the tough.

Try to give my son 

the strength not to follow the crowd 
when everyone is getting on the band wagon... 
Teach him to listen to all men... 
but teach him also to filter 
all he hears on a screen of truth, 
and take only the good 
that comes through.

Teach him if you can, 

how to laugh when he is sad...
Teach him there is no shame in tears, 

Teach him to scoff at cynics 
and to beware of too much sweetness... 
Teach him to sell his brawn 
and brain to the highest bidders 
but never to put a price-tag 
on his heart and soul.

Teach him to close his ears 

to a howling mob 
and to stand and fight 
if he thinks he's right. 
Treat him gently, 
but do not cuddle him, 
because only the test 
of fire makes fine steel.

Let him have the courage 

to be impatient... 
let him have the patience to be brave. 
Teach him always 
to have sublime faith in himself, 
because then he will have 
sublime faith in mankind.

This is a big order,

but see what you can do... 
He is such a fine fellow, 
my son!

----------------------------------------------------------------------------------------------------------

நானும் ,என்னை  ஆளாக்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும்,ஆசிரியர் தினமான இன்று  என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

image and letter courtesy---google.

Wednesday 4 September 2013

மஞ்சு ஊரா.........மலேயாவா ?மஞ்சு ஊர் எதுவாயிருந்தால் என்ன?
மஞ்சு யார்? எதற்கு அவள்  ஊரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ?

கேள்விகள் உங்கள்  மனதில்  ரீங்காரமிடுகிறதா?

மஞ்சுவேறு யாருமில்லை என் மருமகள் தான்.( அவள் ஊரைப் பற்றிப் பதிவெழுதி, அவளுக்கு  நீ சோப் போட்டுக் கொள் .நீ உன் மருமகளிடம் நல்ல பெயர் வாங்க,.....  நாங்கள் தான்   மாட்டினோமா?என்று உங்கள் மைண்ட்  வாய்ஸ் சொல்வது கேட்கிறது)!
இதற்குள் சிலருக்கு என் பதிவின் மேல் ஆர்வம் வந்திருக்குமே! இவள் மருமகளுக்கு எப்படி சோப் போடுகிறாள் பார்க்கலாம் என்று தானே.

சக பதிவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ என் உறவினர் நிறைய பேர் படிக்கப் போகிறார்கள். அது மட்டும் உறுதி.

சரி விஷயத்திற்கு  வருகிறேன்.

காலையில் சோழன் எக்ஸ்பிரஸ் ஏறினால் பிற்பகல் 1 மணியளவில் நீங்கள் மாயவரத்தில் இறங்கி விடலாம்.அங்கிருந்து பஸ்ஸில் கோமல் சென்று  விடலாம்.
அங்கிருந்து வில் வண்டியில் (தலை அடிபடாமல் லாவகமாக உட்கார்ந்து கொண்டு) அரை மணி நேரப் பிராயணத்தில்  ஒரு அழகான பச்சை பசேல் என்று ஒரு கிராமம் இருக்கிறது.

ஓ ...... இந்தக் கிராமம்தான் மஞ்சு ஊரா

ஸ்டாப் !...... ஸ்டாப்!........ இது என் பாட்டி  ஊர்.
போகும் வழியெல்லாம்  எழில் கொஞ்சி  விளையாடும். ஊரும் மிகவும் பெரிது இல்லை. மிகவும் சின்ன ஊர். ஒரே தெரு தான். ஊருக்கு எல்லையாக இரு அழகான கோவில்கள்.

கரெக்ட்............. நீங்கள் நினைப்பது போல் பாரதிராஜா படத்தில் வரும் கிராமம் போலவே இருக்கும் இந்த ஊர். உறவினர்கள் போல் பழகும் மனம் கொண்ட மக்கள் .

ஒரு வீட்டில்  விசேஷமென்றாலும் ஊரில் யார் வீட்டிலும், அவர்கள்   சமையலறை கதவு திறக்காது.

அப்படிப்பட்ட ஊரிலிருந்து ,எங்கள் பாட்டி  சென்னையில் ,எங்கள் வீட்டிற்கு  வந்திருந்தார்.

வந்து குளித்து சுடசுட இட்லியும், சட்னியும் சாப்பிட்டு விட்டு வெளியே பால்கனி பக்கம் வந்தார்.

" இது என்ன? பணத் தோட்டமா?

 படிக்கும் நீங்கள் நான் பணத்தாலேயே தோட்டம் போட்டிருக்கிறேன் என்று நினைத்து விடப் போகிறீர்கள்........இல்லையில்லை.....(நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நினைவிலாவது நான் பணத்தால் தோட்டம் போடுகிறேன்)

" பணத் தோட்டமா........" நான்" ஆ "  வென்று வாய் திறக்க 

பின்னே இந்த கொடிக்கு என்ன பெயர்? என்றார்.

" money plant "

அதெல்லாம்  தெரியாது. இதற்கு அழகான தமிழ் பேர் " பணத்தோட்டம் " என்று சொல்லி விட்டுப் போய் விட்டார.

ராஜி. " நாளைக்கு  நல்லியிலோ ,குமரனிலோ எனக்கு  புடவை வாங்க வேண்டும் .அப்படியே சரவணபவனுக்கும் சென்று வரலாம் என்று  itineryஐ  வாயால் சொன்னார்.
சரி, நாளைக்கு என்னுடைய ராசியில் என்ன போட்டிருக்கோ தெரியலையே என்று நினைத்துக் கொண்டே படுக்கப் போனேன்.

பாட்டியின் தமிழுக்கு நாங்கள் அடிமை.
ஷெல்ப் என்பதை அலமாரி.
மேஜை, நாற்காலி, மூக்குக் கண்ணாடி, கூடம், காமிரா  அறை ,  வாளி,தாழ்வாரம்.. ,.......என்று அழகழகாய்  தமிழ் கொஞ்சும்.

கீழே உட்கார் என்பதை  தாழ  உட்கார்ந்து கொள்  என்று சொல்வது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

மறு நாள் குமரனில் புடைவை எடுத்து விட்டு அங்கு இருக்கும்,  விற்பனை ஆட்களை, தம்பி என்று அழைத்து  உறவு கொண்டாடி, பக்கத்தில், புடைவை எடுக்க வந்திருந்த ,யாரோ ஒருபெண்மணியிடம்  "எனக்கு இந்த கலர் நல்லா இருக்குமா " என்று  எந்தத் தயக்கமுமில்லாமல்  கேட்டு, ஒரு வழியாய்  MS blueவில்  அரக்கு பார்டர் போட்ட , அழகான பட்டுப் புடைவை எடுத்துக் கொண்டு விட்டார்.

எல்லோருமாக  சரவணபவனிற்கு  படையெடுத்தோம். நான், என் பையன்,பெண் ,  எல்லோருமாக.

என் அன்பிற்குரியவருக்கு , இந்த மாதிரி ஷாப்பிங் எல்லாம் ஜுஜுபி  மாதிரி. அவர் பெரிய அளவில் யோசிப்பவர். ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதைப் பற்றிய கவலையுடன், எல்லா சானல்களிலும்  வரும் செய்திகளைப் பற்றித்  தெரிந்து கொண்டிருந்தார்.

சரவணா பவனில் உட்கார்ந்து  ஜில் தண்ணியை ஆளுக்கு ஒரு மடக்குக் குடித்தோம்.அதற்குள் ஆர்டர் எடுப்பவர் வந்தார். பாட்டிக்கு தோசையும் , எங்களுக்கு வட இந்திய உணவு வகைகள்  ஆர்டர் செய்தோம்.

சர்வர் எல்லாவற்ரையும் டேபிளில் வைத்தார். பாட்டி எங்கள் பக்கம் திரும்பவேயில்லையே! இதையெல்லாம் சாப்பிட்டால் உடம்பிற்கு வந்தால் என்ன செய்வது என்கிற பயமாம்.

சாப்பிட்டு  விட்டு காபி  ஆர்டர் செய்ய.........

காபியும் வந்தது.
" காபி ரொம்ப நல்லாயிருக்கு " என்று பாட்டி சொல்லிக் கொண்டே ,"தம்பி...."
என்று கூப்பிட  என் பையன் கலவரமானான்.

" கொஞ்சம் சும்மாயிருங்களேன் பாட்டி ! " என்று நான் சொல்லி முடிப்பதற்குள் இவர் கூப்பிட்ட அந்த  சூப்பர்வைசர் கிட்டே வந்து,"ஏதாவது வேணுமா பாட்டி" என்று கேட்க,

" ஆமாம் நீ  மஞ்சு  ஊர் தானே  "என்று கேட்க  என்மகன் குழம்ப, அதைப் பார்த்து என் பெண் " களுக் "என்று சிரிக்க எனக்கோ ஒன்றுமே புரியவில்லை.

எங்களை விட  சூப்பர்வைசர் இன்னும் அதிகமாய் குழம்ப , இந்தக் குழப்பம் தீருவதற்குள் ," நீங்கள் மலேயாவா ....... "  என்று இன்னும் ஒரு  கேள்வி.

சூப்பர்வைசரோ  பாட்டியை ஒரு மாதிரி பார்க்க , நான்   ,"ஒன்றுமில்லை, உங்களை வேறு யாரோ என்று பாட்டி நினைத்து விட்டார்கள் " என்று சமாளித்தேன்.

ஆனாலும் என் பையன் முகத்தில் எள்ளும் கொள்ளும்.

வீடு வந்து சேர்ந்தோம்..
என் பெண் ஆரம்பித்தாள் .

"பாட்டி எதற்கு அவரைப் பார்த்து மஞ்சு ஊரா, மலேயாவா  என்றெல்லாம் கேட்டே  ?"

என்னவரோ  டிவியை ஆப் செய்து விட்டார். ரூபாயாவது மதிப்பாவது. அதை நம் நிதியமைச்சர் பார்த்துக் கொள்வார்  என்று நினைத்து  எங்கள்  பஞ்சாயத்தை  ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தார்,

" நான் எங்கே சொன்னேன். அந்த ஆள் தான் சொன்னார். அதைத் தீர விசாரிப்பதற்குள்  தான் நீங்கள் என்னை இழுத்துக் கொண்டு வந்து விட்டீர்களே" என்று குறைபட்டார் பாட்டி.

வாழைப்பழ ஜோக்கில்  வரும் கோவை சரளா மாதிரி    என் பெண் திரும்பவும் ஆரம்பித்தாள்,
"பாட்டி நான் கேட்ட வரைக்கும்  அப்படி ஒன்றும் சொல்லவில்லையே!பாருங்கள் கணேஷை டென்ஷன் ஆக்கி விட்டீர்கள் "- இது என் பெண்.

" நான்  தப்பா ஒன்னும் கேட்கலையேடா " என்று என் பையனைப் பார்த்துப் பாவமாக சொல்ல ,

தொடர்ந்து என்னைப் பார்த்து," நீ ஆர்டர் குடுக்கும் போது தானே சொன்னார்" என்று சொல்ல ," இது ஏதடா வம்பு "  என்று நினைத்துக் கொண்டேயிருக்கும் போது  என்னவர் ,"என்னை விட்டுவிட்டு சாபிட்டால் இப்படித்தான்" என்று பழி தீர்த்துக் கொண்டார்.(அதற்கு இதுவா நேரம்)

நீ  எனக்குத் தோசை சொல்லி விட்டு  உங்கள் ஐட்டங்கள்  சொன்னாயே , அப்பொழுது தான் அவர்," நான்,,மஞ்சு  ஊர் , மலேயா"  என்று சொல்லிக் கொண்டே தானே எழுதிக் கொண்டிருந்தார். அதை கேட்க விட்டீர்களா நீங்கள்" பாட்டி .

" ஓ " என்றான்  என் பையன் " பாட்டி அது மஞ்சு ஊருமில்லை.மலேயாவுமில்லை. " நான்.."... " மன்ச்சூரியன் " மலாய்  கோப்தா "
எல்லாம் நாங்கள் சாப்பிட்ட ஐட்டங்கள்  என்று கணேஷ் சொல்ல,

எனக்கும், என் பெண்ணிற்கும்  சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தால் கோபம்  வரும் பாட்டிக்கு. ரொம்பக் கஷ்டப்பட்டு  சிரிக்காமல் இருந்தோம்.

அது என்னவோ போங்க! ஒன்னும் புரியல  என்று அலுத்துக் கொண்டார்.அவருக்கு அது என்னமோ  நிஜமாகவே ஒண்ணுமே தான் புரியல.

ஆனால் அடுத்த  முறை போகும் போ து எனக்கும் மஞ்சூ ஊரை வாங்கித் தரனும்  என்று உறதி   செய்து கொண்டார்.

" நீ கவலயே படாதே பாட்டி மஞ்சுவுடனேயே வந்து  சாபிடலாம் "என்று நான் வாக்குக் கொடுத்தேன். 

மஞ்சு வரட்டும்  அவளையும் அழைத்துக் கொண்டு  பாட்டியையும் அழைத்துக் கொண்டு போய் மன்சூரியன்  சாப்பிட்டு விட வேண்டியது தான்.தீர்மானித்துக் கொண்டேன்.

என்பெண்ணும், பையனும், " எங்களை விட்டு விடுங்கள் . நீங்கள் ஹோட்டலுக்குப் போகும் அன்று உபவாசம் இருக்கப் போகிறோம் "என்று கோரஸ் பாடினார்கள்.


image courtesy--google.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்