Tuesday, 24 September 2013

நடுவிலே கொஞ்சம் நேரத்தைக் காணோம்

ரொம்பவும்  மகிழ்ச்சியில் இருந்தீர்களா? அப்பாடி........ மூன்று  வாரங்களாக இவள் இம்சையிலிருந்து  தப்பித்து  விட்டோம் என்று  .அப்படியெல்லாம் விட்டு விடுவேனா  என்ன? 

உங்கள் நினைப்பில் ஒரு லாரி மண்.   

இதோ வந்து விட்டேனே.......... ஆனால் இப்பொழுது உங்களிடம் ஒரு உதவி கேட்கத் தான் வந்திருக்கிறேன்.  யாராவது நான் கேட்பதை எனக்கு தேடித் தந்து விடுங்கள். அப்புறம்  நான் இந்தப் பதிவுலகம் பக்கம் வந்து உங்களை இம்சிக்கவே மாட்டேன்.

 It is a promise......o.k.

விஷயத்திற்கு வருகிறேன்.........

நான் நழுவ விட்ட ஒன்றைத் தேடி தருவீர்களா?....

என்ன " பணமா ?"
இல்லை.

பதவியா?
அப்படிஎன்றால்........

நகை நட்டு  ஏதாவது?..........
நகையாவது  நட்டாவது   அதெல்லாம்  எப்படி இருக்கும்?

பின் எதைத் தான் நழுவ விட்டாய்? என்று சலித்துக் கொள்கிறீர்களா?

சில மணி நேரங்களைத்  தொலைத்து விட்டேன்.

"என்ன உளறல் இது  "  நினைப்பது எனக்குக் கேட்கிறது.

கொஞ்சம் பொறுமையாக என் கதை கேட்டு ஒரு தீர்வு சொல்லுங்களேன்.
சென்ற திங்கட்கிழமை  இரவு  சுமார் பதினோரு மணிக்கு  அமெரிக்காவை விட்டுப்  புறப்பட்டேன்  . கவனமாகப் படியுங்கள்.   சரியா.......

எங்கே விட்டேன்.

இரவு பதினொரு  மணிக்கு  அமெரிக்காவிலிருந்து புறப்பட்டேனா.........

சுமார் பதின்மூன்று மணி நேர  பயணத்தில்  அபுதாபி வந்து சேர்ந்தோம்.

அங்கு  மூன்று மணி நேர ஹால்ட்.  அடுத்த ப்லைட்டிற்கு  முன்னால் 
Duty Free Shop இல்  சாக்லேட்ஸ் வாங்கிக் கொண்டு  , பொருட்களும், ரசீதும் ஒத்துப் போகிறதா  என்று ஒரு தடவைக்கு இரு தடவை செக் செய்து கொண்டு வெளியேறினேன். 

கேட்டிற்கு வந்தோம் . சென்னை ப்ளைட்டைப் பிடித்தோம்.  
ஐந்து மணி நேரப் பிரயாணத்தில்  சென்னை வந்தடைந்தோம். 

அளவில்லா மகிழ்ச்சி. ஸ்வீட் சென்னையை விட்டு விட்டு  இவ்வளவு மாதங்களாகி விட்டதே!

பெட்டிகளை கன்வேயர் பெல்டிலிருந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். .
 ஹோட்டல் சங்கீதாவிலிருந்து வந்த பொங்கல் நெய்யின் மணமும், கம கம  சாம்பார் மணமும் , எங்களை உள்ளே இழுத்து கொண்டது.

என்ன தான் ஸ்டார் ஹோட்டல்  சாப்பாடு  விமானத்தில்  பரிமாறப் பட்டாலும் 
நம் பொங்கல் சாம்பாருக்கு  ஈடாகுமா? 

பட படவென்று பொங்கலும், வடையும் ,வயிற்றுக்குள் அடைக்கலமாயின.

பிறகு தான்  நான் ஒரு நிதானத்திற்கு வந்தேன்.

" மணி என்ன ?"--இது நான்.

மணி இப்ப காலை ஆறு மணி "-- அவர்.

என்னதிது  ? குழப்பத்துடன் அவர் அமர்த்திய டாக்சிக்குள் 
யோசனையுடன் அமர்ந்தேன்.

"இன்று புதன் கிழமை " என்று மேலும் குழப்பினார்.

குழம்பிய  மனதுடன் வீட்டில் நுழைந்தேன்.
நான்கு மாதத் தூசியை மேக்கப்பாய்  போட்டுக் கொண்டிருந்த வீட்டை  கொஞ்சமாய் சுத்தம் செய்து  குளித்து  நிமிர்ந்தால் ,  மணி இரண்டைக் காட்டியது.

மீண்டும் சரவண பவன்  அண்ணாச்சி  எங்கள் வயிற்றுக்கு உணவளித்து புண்ணியம் கட்டிக் கொண்டார்.

அங்கே தான் என் குழப்பத்தை ஆரம்பித்தேன்.

சாம்பாரை சாதத்துடன் பிசைந்து கொண்டே ," மொத்தமாக நாம் பிரயாணம் செய்த நேரம்  வெறும் 21 மணி நேரமே.  அப்படியானால்   , திங்கட்   கிழமை கிளம்பிய  நாம் செவ்வாய்   இரவே யல்லவா சென்னை வந்திருக்க வேண்டும்.ஆனால் நாம் வந்திருப்பதோ புதன்  காலை தான். "

" அப்படியானால் அந்த  சுமார்  அரை நாள் எங்கே போனது.
எங்கே நழுவ விட்டேன். அபுதாபியிலா..இல்லை அமெரிக்காவிலேயே விட்டு விட்டேனா....இல்லை  ..duty free shop லியா........."என்று கேட்டதற்கு

" நீ கொஞ்சம் பசி மயக்கமும், பிரயாணக் களைப்புமாக ஜெட் லேகிங்கில் இருக்கிறாய். நீ நேரத்தை  Greenwich line  அருகில் தான் விட்டு விட்டாய் . மறந்து விட்டாய் "என்றார் என்னவர்.

Greenwich Line  இப்படி   witch ஆகவே மாறி சூனியம் வைத்து  என் நேரத்தைப் பறித்துக் கொண்டதே!

நேரம் பொன்னானது  அல்லவா".

அதனால் யாராவது  நான் நழுவ  விட்ட நேரத்தை தேடிக் கொடுப்பீர்களா?

எனக்கு யாரும் உபதேசம் செய்ய வேண்டாம். Greenwich line, one day gain, one day loss போன்ற  டெக்னிகல் சமாசாரங்களைக் கேட்டு கேட்டு என் காது புளித்து விட்டது.

எனக்கு வேண்டியது  நான் நழுவ விட்ட நேரம் அவ்வளவு தான். யாராவது 
இங்கிருந்தே  அதைத் தேடிக் கொடுத்தாலும் சரி, இல்லை Greenwich line தாண்டிப் போகிறவர்களாவது ,என் நேரத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாலும் சரி. நான் சந்தோஷப் படுவேன்.....

நான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மறக்க மாட்டேன்.......  

நான் தொலைத்த நேரம் எங்கே? எங்கே? எங்கே?


image courtesy----google.51 comments:

 1. ரொம்பவே குழம்பி ரொம்ப ரொம்பவே குழப்பிட்டீங்க.தொடரும் உங்கள் அரட்டைகளுக்காக காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸாதிகா . ரொம்ப குழப்பி விட்டேனா?
   நன்றி உங்கள் வருகைக்கும், என் அரட்டைக்காக காத்திருப்பதற்கும்.

   Delete
 2. ஹா ஹா, நீங்கள் தவறவிட்ட அரை நாள் திரும்பவும் ஊருக்குப்போகும்போது கிடைத்துவிடும்.... இதில் எந்த விச்சும் இல்லை, டெக்னிக்கல் சமாச்சாரமும் இல்லை....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார், உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்கும்.

   Delete
 3. தேடி பார்க்குறேன். கிடைச்சா கண்டிப்பா தரேன்

  ReplyDelete
  Replies
  1. தேடினீங்களா? கிடைச்சுதா ராஜி? வரவா, வந்து வாங்கிக்கவா?
   நன்றி ராஜி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

   Delete
 4. இது விக்கிரமாதித்தனுக்கு
  வேதாளம் போட்ட புதிரா இல்லை இருக்கு
  எனக்கென்னவோ உங்கள் நேரம் உங்களைவிட்டுப் போயிருக்க
  சான்ஸே இல்லை ,நல்லா தேடிப்பாருங்க
  சூட்கேஸில்தான் எங்கேயாவது இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. புதிரெல்லாம் ரமணி சார். தொலைத்தது நிஜம். சூட்கேசை தலைகீழாக கொட்டி தேடியாகி விட்டது. விடுங்கள். என் சோகம் என்னோடு..
   நீங்கள் வந்து யோசனை தெரிவித்ததற்கு நன்றி ரமணி சார்.

   Delete
 5. ஒரு நிமிடம்... இதோ லென்சைத் தேடி எடுத்துக் கொண்டு வருகிறேன்.. கண்டுபிடிச்சுடலாம்! :))))

  ReplyDelete
  Replies
  1. நான் ஒன்று தேடித் தர சொன்னால் நீங்கள் லென்ஸ் முதலில் தேடுகிறேன் என்று சொல்கிறீர்கள். லென்ஸ் கிடைத்ததா........ என்னமோ போங்கள்.... ஸ்ரீராம் சார்.
   நீங்கள் எப்ப லென்ஸ் தேடி...... என் நேரத்தைத் தேடி.........உஸ்...ஹப்பா............
   ஆனாலும், வந்து தேடித் தருவதாக உத்திரவாதம் கொடுத்தற்கு நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 6. திரும்பவும் அமெரிக்கா போறப்ப உங்க நேரம் திரும்பவும் கிடைச்சுடும்னு தோணுது! சுவையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ் சார், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்......
   மீண்டும் வருக!

   Delete
 7. எங்கே? எங்கே? எங்கே?

  என்று உங்களை நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன். என் தொடரின் பகுதி-51 முதல் உங்களைக்காணுமே என்று. சும்மா தமாஷுக்கு எழுதியுள்ளேன். மெதுவா வாங்கோ போதும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வைகோ சார்...... உங்கள் தொடரில் இன்னும் இரண்டு தான் பாக்கி இருக்கிறது கருத்திட.அதுவும் இன்றைக்கு எழுதிவிடுவேன்.
   வருகைக்கு நன்றி சார்.

   Delete
 8. //என்ன தான் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு விமானத்தில் பரிமாறப் பட்டாலும்
  நம் பொங்கல் சாம்பாருக்கு ஈடாகுமா? //

  ஒருக்காலும் ஈடாகாது. ;)))))


  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வைகோ சார். எந்த ஊருக்குப் போனாலும் நம் சாப்பாடு மாதிரி ஆகாது.
   நாக்கு செத்து விடுகிறது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   உங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோபு சார்.

   Delete
 9. உங்களுக்கு நேரம் போச்சா? எனக்கு இதே போன்ற சம்பவத்தில் நேரம் கிடைத்தது.

  மதியம் என் கெடிகாரத்தில் மிகச்சரியாக 12 மணி. திருச்சியிலிருந்து விமானம் கிளம்பியது. 12.30க்கு திருவனந்தபுரம் அங்கு அரை மணி ஹால்ட்.

  பிறகு மிகச்சரியாக 1 மணிக்கு கிளம்பிய விமானம் என் கெடிகாரத்தில் மாலை 5 மணிக்கு ஷார்ஜா விமான நிலையத்தில் என்னை இறக்கிவிட்டது.

  ஆனால் அங்கு ஓர் அறிவிப்பு ”ஷார்ஜா இண்டர்னேஷனல் விமான நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. ஷார்ஜா நேரம் பிற்பகல் மிகச்சரியாக 3.30 ஆகும்” என்ற அறிவிப்பு. எனக்கு ஒன்றரை மணி நேரம் கூடுதலாகக் கிடைத்தது. என் கெடிகாரத்தை என் மகன் 5 மணியிலிருந்து 3.30க்கு திருப்பி வைத்துக்கொள்ளச் சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்களுக்கு இப்போ நஷ்டம். எனக்கு அன்று இலாபம்.

  இதுபோல உங்கள் நேரத்தை பலரும் அவர்களுக்கு ஆதாயமாக அடைந்திருக்கலாம்,

  எதற்கும் நம் வடிவேலு ‘கிணற்றைக்காணும்’ என்று போலீஸில் புகார் கொடுத்தது போல நீங்களும் ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வாங்கோ. ;)))))

  ReplyDelete
  Replies
  1. இப்ப புரிந்து விட்டது. உங்களிடம் தான் நான் தொலைத்த நேரம் இருக்கிறது. எப்ப வரட்டும் நேரத்தை வாங்கிக் கொள்ள?
   வேறு யார் யாரிடம் இருக்கிறதோ தெரிய வில்லையே!
   உங்கள் வருகைக்கும், என் நேரம் உங்களிடம் பத்திரமாக இருக்கிறது என்று ஒத்துக் கொண்டதற்கும் நன்றி கோபு சார்.

   Delete
 10. காணாமல் போன நேரம் பற்றி எதுக்கும் ஒரு கருத்தரங்கு வைச்சு, முடிவு எடுத்துடலாம்னு யாராவது அறிக்கை விட்டுடப் போறாங்க! :)

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. எங்கே,.......எங்கே...... கருத்தரங்கு. முடிவில் சொல்லி விடுவார்களா எங்கே என் நேரம் என்று வெங்கட்ஜி.
   நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

   Delete
 11. நானும் அதே கேசு தான். அமெரிகாவிலேந்து வந்த போது
  பாதி நாள் தொலைஞ்ச்சுடுத்து அப்படின்னு இன்சூரன்ஸ்
  க்ளைம் பண்ணினேன்.
  அவங்க முதல்லே போலீஸ் ஸ்டேசனுக்கு போயி, எப். ஐ. ஆர்.
  பைல் பண்ணிட்டு வாங்க. அப்படின்னாங்க..

  சரி அப்படின்னுட்டு அங்கன போனா, கீழ்பாக்கத்துக்கு ஒரு டாக்சி
  புடிச்சு கைலே விலாசத்தை கொடுத்து அனுப்பினாக.

  அங்கே போய் இறங்கி பார்த்தா...

  அடே ...ராஜலக்ஷ்மி அம்மாவா..
  எங்க இங்கன வந்தீக...

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. இந்த தொலைஞ்சு போன பாதி நாள் கணக்கு, day light கன்பியூசன் காரணமாக எனது உடல் ஒரு மாசத்துக்கு என்னை பிரட்டி போட்டு விட்டது.

   ஒரு காரணம் நான் சாப்பிடும் மாத்திரைகள். அவை நேரம் தவறி போய் விடுகின்றன.

   ஒரு இரண்டு நாட்கள் தொடர்ச்சியாகத் தூங்குவது தான் இதற்குத் தீர்வு என்று என்னிடம் சொன்னார்கள்.

   சுப்பு தாத்தா

   போன பின்னூட்டம் ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. purely in lighter vein.
   I am sorry if anything hurt u there.

   Delete
  2. Nothing hurts me. I enjoyed your comment. You need not feel for it sir. I shall come and reply afterwards in Tamil

   Delete
  3. உங்கள் நகைச்சுவையான பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன் சார். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது. இப்பொழுது உங்கள் உடல் நலம் ஒ.க். தானே. ஆனாலும் இந்த ஜெட்லேகிங் மிகவும் பாடாய் படுத்துகிறது.

   நன்றி சுப்பு ஐயா , உங்கள் மீள் வருகைக்கும், நகைச்சுவையான பின்னூட்டதிற்கும்

   Delete
 12. திரும்பிப் போகும்பொழுது கிடைத்து விடும், அப்போ கூட்டிக் கழிச்சு பாத்தா கணக்கு சரியா இருக்கும் :)
  நல்ல பதிவுங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிரேஸ்! உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்., பாராட்டிற்கும்.
   மீண்டும்,மீண்டும் வருக!

   Delete
 13. நீங்க திரும்பி அங்கே போகும் போது அந்த நெரம் கையில் கொடுக்கப்படுமே..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

   Delete
 14. நீங்க தொலைச்சதை நாந்தான் எடுத்து வைத்திருக்கிறேன் நீங்கள் அமெரிக்கா வரும் போது நான் தருகிறேன், நிங்கள் வரும் வரை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன் அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. பத்திரம் MTG ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு புது விருந்தினரை உபசரிப்பதில் என் நேரத்தை எங்காவது தொலைத்து விடப் போகிறீர்கள். நான் அடுத்த வருடம் அமேரிக்கா வரும் போது வாங்கிக் கொள்கிறேன்.

   Delete
 15. இப்படி எல்லாம் பாவமா முகத்தை வச்சுகிட்டு புலம்பித்தள்ளினா நாங்க கண்டுபிடிச்சு கொடுத்திடுவோமா என்ன? 'கரகாட்டக்காரன்' பட ஸ்டைல்ல‌ சொல்லணும்னா நீங்க இங்க வரும்போது கெடச்சுதில்ல,அந்த நேரத்தைத்தான் இப்போ நழுவ விட்டிருக்கீங்க.அப்போ மட்டும் சத்தம் போடாம சேத்து வச்சுகிட்டு, இப்போ மட்டும் புலம்பினா என்ன அர்த்தம்?

  நலமுடன் வீடு போய் சேர்ந்ததில் மகிழ்ச்சி.நானும் இப்போதான் வீடு வந்து சேர்ந்தேன்.பதிவைப் படித்துவிட்டு பதில் போடாமல் இருக்க முடியவில்லை. பயணம் கலிஃபோர்னியாவுக்குள்ளேயே என்பதால் எனக்கு புலம்பும் அவசியமில்லாமல் போய்விட்டது.முடிந்தால் மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா!

   அதெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டேன். இப்பத் தொலைந்ததற்கும், அப்ப கிடைத்ததற்கும் சம்பந்தமேயில்லை சித்ரா.
   எனக்கு என் நேரம் வேண்டும்,. அவ்வளவு தான்.முடிந்தால் தேடுங்கள்.
   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சித்ரா.

   Delete
 16. என்ன தான் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு விமானத்தில் பரிமாறப் பட்டாலும்
  நம் பொங்கல் சாம்பாருக்கு ஈடாகுமா? //

  நம் பொங்கல் சாம்பார் போல ஆகாது தான்.
  தொலைச்ச இடத்தில் தானே தேட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி.

   Delete
 17. //நீங்க இங்க வரும்போது கெடச்சுதில்ல,அந்த நேரத்தைத்தான் இப்போ நழுவ விட்டிருக்கீங்க.அப்போ மட்டும் சத்தம் போடாம சேத்து வச்சுகிட்டு, இப்போ மட்டும் புலம்பினா என்ன அர்த்தம்?// இதையேதான் நானும் சொல்லவந்தேன், சித்ராக்கா முந்திகிட்டாங்க! :)

  சிலநாட்களா உங்க பதிவுகளைக் காணமே என்றதும் நினைச்சேன், ஊருக்கு கிளம்பிட்டீங்களோ என! ரெஸ்ட் எடுத்துகிட்டு சீக்கிரம் எழுதுங்க.

  ReplyDelete
  Replies
  1. மகி,
   சித்ராவிற்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும். முதலில் கிடைத்ததை நான் செலவழித்து விட்டேன். இப்ப தொலைத்ததை தேடிக் கொடுங்கள் என்று சொல்கிறேன்..
   நன்றி மகி உங்கள் வருகைக்கும், என் எழுத்தை எதிர்பார்ப்பதற்கும்.

   Delete
 18. உங்கள் இம்சை எங்களுக்கு தொடர்ந்து வேண்டும், ஆதலால் நீங்கள் தொலைத்த நேரத்தை நான் கண்டு எடுத்து விட்டாலும் குடுக்கும் மன நிலையில் இல்லை! உங்கள் இம்சை தொடரட்டும் :)

  ReplyDelete
 19. உங்கள் இம்சை எங்களுக்கு தொடர்ந்து வேண்டும், ஆதலால் நீங்கள் தொலைத்த நேரத்தை நான் கண்டு எடுத்து விட்டாலும் குடுக்கும் மன நிலையில் இல்லை! உங்கள் இம்சை தொடரட்டும் :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.....மகா ..என் எழுத்துக்கு இப்படி ஒரு விசிறியா.......
   நன்றி மகா உங்கள் வருகைக்கும்,உங்களின் பாராட்டிற்கும்.

   Delete
 20. இருங்க.. நானும் பொங்கல், சாம்பாரை சாப்பிட்டு நல்லா தூங்கி எந்திரிச்சு வந்து தேடி சொல்றேன்....

  ReplyDelete
  Replies
  1. சாப்பிட்டாகி விட்டதா உஷா பொங்கலும், சாம்பாரும்.
   காத்திருக்கிறேன் உங்களுக்காக .......... எதற்கா? வந்து தேடித் தருவதாக வாக்களித்ததற்கு நன்றி உஷா.....

   Delete
 21. // நான் தொலைத்த நேரம் எங்கே? எங்கே? எங்கே? //

  இதற்கான விடை JULES VERNE எழுதிய “ உலகைச் சுற்றி வர எண்பது நாட்கள் ( AROUND THE WORLD IN EIGHTY DAYS ) என்ற நூலின் கடைசியில் இருக்கிறது. படித்துப் பார்க்கவும். முழு கதையையும் படியுங்கள். அப்போதுதான் உங்கள் கேள்வியின் சுவாரஸ்யம் புரியும். படித்த பின்னர் உங்கள் விமர்சனத்தைப் பதிவாக எழுதவும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன நாவல் நான் பள்ளியில் non-detailed ஆகா படித்த நினைவு. இன்னொரு முறை படித்தால் ஆயிற்று. படித்து விட்டு நீங்கள் சொன்னபடி பதிவிடுகிறேன் தமிழ் சார். நன்றி உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும்.

   Delete
 22. வழியில் அந்த நேரம் உங்களைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றது.. நீங்கள் திரும்பிச் செல்லும் போது அது தானாகவே உங்களிடம் சேர்ந்து கொள்ளும்!.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. இதற்குத் தான் சொல்வது பத்திரமாக வரவேண்டும் என்று. பாருங்கள் நானும் நேரமும், ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டிருக்கிறோம்.
   அருமையாய் தேடிக் கண்டுபிடித்ததற்கு நன்றி துரை சார்.

   Delete
 23. ஓ, இப்போது தான் முதல் முறையாக அமெரிக்கா போய் வருகிறீர்களோ? –கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து

  ReplyDelete
  Replies
  1. அமெரிக்காவிற்கு பெரும்பாலும் வருடம் தோறும் சென்று வருபவள் . இது என்னுடைய பத்தாவது விசிட். ஆனால் ப்ளாக் எழுத ஆரம்பித்த பின் இதுவே முதல் விசிட் .
   மேலும் இது நகைச்சுவைப் பதிவு. சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
   நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

   Delete
 24. எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.ஒருவன் தன் மோதிரத்தை வீதியில் இருட்டில் எங்கோ தொலைத்து விட்டானாம் அங்கெல்லாம் தேடிக் கிடைக்காததால் தெரு விளக்கு அடியில் வெளிச்சத்தில் தேடினானாம். தொலைத்த் இடத்தில் தேடுவதை விட்டு விட்டு..........!

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 25. நடுவுல கொஞ்சம் நேரத்தக் காணோம்
  சரி விடுங்க. திரும்பிப் போகையில சரியாகிடும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாண்டியன், உங்கள் வருகைக்கும், அருமையான தலைப்பை நினைவு படுத்தியதற்கும்.. இந்தப் பதிவின் தலைப்பைப் பாருங்கள் .மாற்றி விட்டேன். உங்கள் உபயத்தில்.......
   நன்றி.

   Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்