தலைப்பைப் பார்த்து மார்கெட்டிற்குப் போய் பரிசு வாங்கி வந்ததைப் பற்றி எழுதுகிறாள் என்று நினைத்து விட வேண்டாம் மார்கெட்டை மையமாய் வைத்த கதையின்விமரிசனத்திற்கு க் கிடைத்த பரிசு.
திரு. வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்தும் விமரிசனப் போட்டியில் மூன்றாவது முறையாக பரிசு கிடைத்துள்ளதைப் பற்றிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி.
விமரிசனத்திற்கு கொடுக்கப்பட்ட கதை " காதலாவது, கத்திரிக்காயாவது. "
இதோ லின்க் http://gopu1949.blogspot.in/ 2014/02/vgk-05.html.
இந்தக் கதைக்கு நான் எழுதிய இரண்டாம் பரிசு பெற்ற விமரிசனம் கீழே.. இந்தப் பரிசை திரு.அர்விந்த் குமார் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சியடைகிறேன். விமரிசனம் இதோ......
கத்திரிக்காய்களுக்கு நடுவில் காதலும், கரை புரண்டோடும் என்று விளக்கும் அழகிய காதல் கதை. ஆசிரியருடைய " வங்கிக்காதல் "கதை போலவே இந்தக் கதையிலும் வில்லன் என்று யாரையும் நடுவில் கொண்டு வராமல் கதை எழுதிய கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஒரு கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதே வில்லனின் செயல்கள் தான். ஆனால் வில்லனே இல்லாமல் அதே சமயத்தில் கதையை தொய்வு இல்லாமல் எழுதியிருக்கும் நடை ஆச்சர்யப்பட வைக்கிறது.
இந்தக் கதையில் பரமுவும், காமாட்சியும், நாயகன் நாயகிகள். வில்லன் என்பது பரமுவின் உள்ளுணர்வு மட்டுமே. பரமு தன காதலை சொல்லாமல் விட்டு விடுவானோ என்கிற எதிர்பார்ப்பை ஏகத்துக்கு அதிகமாக்கிக் கொண்டே போய், இறுதியில் அவன் காதலை வெளியிட வைத்து கதையை முடித்திருப்பது நல்ல விறுவிறுப்பு.
காமாட்சி , மற்றும் பரமு இருவருமே நாம் தினசரி சந்திக்கும் மனிதர்கள்.. அவர்கள் இருவருடைய எண்ணங்கள் எல்லாம் மிக உயர்ந்தவை. காமாட்சியின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியும், அதைக் கண்டு பயந்து பரமு தன காதலை தன மனதிற்குள் பூட்டி வைத்து விடுவதும் அதற்குச் சான்று. இருவரும் ,ஒழுக்கத்தில்,குணத்தில் ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்கிறார்கள் என்றே சொல்லலாம்.எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பரமு , காமாட்சிக்கு உதவுவது அவன் காதலினால் தான் என்று நமக்குத் தோன்றுகிறது.. ஆனால் அது உதவும் மனப்பான்மை அதிகமாக இருப்பதனால் தான் என்பதே என் கணிப்பு.. அதை தன் கதையில் அவர் சொல்லியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.
பரமுவை நமக்கு அறிமுகப்படுத்தும் போது அவனை ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தி இருப்பது, ஆசிரியரின் எழுத்தார்வத்தைக் குறிக்கிறது.
காமாட்சி தானாகட்டும், தன்னுடைய நெடுநாளைய ஆசையான சேலை, நகை வாங்குவதற்காக சேர்த்து வைத்த பணத்தை,, பரமுவின் உடல் நலத்திற்காக செலவிடுவது நெகிழ்ச்சியளிக்கிறது.அங்கே காமாட்சியின் கருணையும், காதலும் வெளிப்பட்டு விட்டது.
பரமு விபத்தில் சிக்கும் வரை, காமாட்சிக்கு பரமு மேல் காதல் உண்டா இல்லையா என்று வாசகர்களை யூகிக்க வைக்கும் கதாசிரியர் , ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற அவசரத்திலும், பரமுவை நன்கு கவனித்துக் கொண்டதாக சொல்லும் போதும் தான் காமாட்சியின் காதலை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார் .பெண்ணின் இந்தத் தற்காப்பு குணத்தை மனதில் வைத்துக் கதை புனைந்து யதார்த்தை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
"இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தி விடக் கூடாதா .".. என்கிற வாசகர்களின் ஆர்வத்தை எகிற வைக்கிறார் ஆசிரியர்.
பரமுவும் குணமாகி , வங்கி வேலையும் கிடைத்து , இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் போது அப்பாடி...என்றிருக்கிறது.
எனக்கு இந்தக் கதையில் ஒரு சின்னக் குறை. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதை வெளிப்படையாகச் சொல்லி கதையை முடித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். அதனால் என்ன?
பரமு-காமாட்சி இருவருக்கும் விரைவில் திருமணம் முடிந்து, வங்கியில் மிகப்பெரிய பதவியை பரமு எட்டிப் பிடித்து, கண்ணிற்கு அழகாய் இரு குழந்தைகள் பிறந்து , பல்லாண்டுக் காலம் இந்தக் குடும்பம் எல்லா செல்வமும், நலமும் பெற்று நீடுழி வாழ என் ஆசிகள் பல!
பாராட்டுக்கள் கோபு சார் !
--------------------------------------------------
பரிசுக்கு என் விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும், வாய்ப்பளித்த கோபு சாருக்கும் நன்றி.
image courtesy-----google.
மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
ReplyDeleteமேலும் இதே போட்டியில் தாங்கள் பல்வேறு பரிசுகள் வாங்கிக்குவிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இன்னும் 34 வாய்ப்புகள் அல்லவா உள்ளன.
தொடர்ந்து எழுதி அனுப்புங்கோ, ப்ளீஸ்.
தனிப்பதிவு வெளியிட்டு கெளரவித்ததற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வைகோ சார்.
Delete//பரிசுக்கு என் விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும், வாய்ப்பளித்த கோபு சாருக்கும் நன்றி.//
ReplyDeleteநடுவர் அவர்கள் சார்பிலும் என் வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.
- VGK
நன்றி வைகோ சார்.
Deleteசிறப்பான விமர்சனத்தை எழுதித் தாங்கள் பெற்ற பரிசிற்குப்
ReplyDeleteபாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மா .மேலும் மேலும்
வெற்றிகள் வந்து சேரட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டிற்கும் நன்றி அம்பாளடியாள்.
Deleteஐயாவின் தளத்தில் வாசித்தேன்... விமர்சனம் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா...
manam niraintha vaazhththukaL Rajalakshmi Madam.
ReplyDeleteநன்றி கீதா மேடம்.
Deleteமூன்றாவது முறையாக பரிசு கிடைத்துளளதற்கு இனிய வாழ்த்துகள்..
ReplyDeleteஅருமையான விமர்சனத் திறமைக்குப் பாராட்டுக்கள்..!
உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டிற்கும் நன்றி ராஜராஜேஸ்வரி.
Deleteவாழ்த்துக்கள், ராஜி! (காதில் புகை!) :)
ReplyDeleteகாதில் புகையுடன் வாழ்த்தியதற்கு நன்றி ரஞ்சனி.
Deleteமீண்டும் தங்களுக்கு பரிசு கிடைத்துள்ளமைக்கு இனிய நல்வாழ்த்துகள்!..
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி துரை சார்.
Deleteவாழ்த்துக்கள், ஹும்....பரிசு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது ! எனக்கு(காதில்) வந்த புகையை இங்கு பெய்த மழை வந்து நிறுத்திவிட்டது.
ReplyDeleteதெளிவான விமர்சனம். உங்கள் விருப்பப்படியே அவர்கள் திருமணம் முடித்து நீடூழி வாழ நானும் வாழ்த்துகிறேன்.
உங்களுக்கும் காதில் புகையா......அதோடு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சித்ரா.
Deleteதிரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், (வரிசை எண் .5 ) இரண்டாம் பரிசினை வென்றசகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி சார்.
Deleteவிமரிசனப் போட்டிய்ல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். இனி அடுத்து மீதிக்கதை போட்டிதானே...?
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி பாலு சார்.
Deleteசிறப்பான விமர்சனம். வை.கோ. அவர்களின் தளத்திலேயே படித்தேன்.....
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்......
வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட்ஜி.
Delete