Thursday 10 July 2014

இதுவல்லவோ உண்மையான வெற்றி!












உலகம் முழுதும் கால் பந்து ஜுரம் அடித்துக் கொண்டிருக்கிறது.  எத்தனை எத்தனைப போட்டிகள் ! சுவாரஸ்யமாகத் தானிருக்கிறது  அத்தனைப் போட்டிகளும். இந்தப் போட்டிகளால் என்ன லாபம் என்று தோன்றலாம்.

 விளையாட்டின்  மூலமாக நாடுகளிடையே நட்புறவு வளரும் என்றே பெரும்பான்மையாக சொல்லப்படுகிறது.  ஆனால் அது  உண்மையில்லை என்பது  போல் தான் இப்பொழுது நடக்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.


நம்மில் பலர் ஆவலுடன் பார்க்கும் கிரிக்கெட்டையே  எடுத்துக் கொள்வோமே! இந்தியா பாகிஸ்தான் போட்டி நடந்தால் அதை  விளையாட்டாகவா நாம் பார்க்கிறோம்.  அறிவிக்கப்படாத  போர்  அல்லவா அந்த விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது?  விளையாடுபவர்கள் மட்டுமல்ல   பார்க்கும் நாமும் தான்  பிபி  எகிற நகம் கடித்துத துப்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சென்ற  உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா, இலங்கையை வென்ற அன்று நம் மீனவர்கள் பலர்   இலங்கை ராணுவத்தினரால்  கைது செய்யப் பட்டார்கள் என்ற செய்தி அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.

ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளின் போதும் விரும்பத்தகாத சமபவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்பொழுது நடக்கும் கால்பந்தாட்டப் போட்டிகள் மட்டும் இதற்கு  விதிவிலக்கா ?  போட்டிகளைப் பார்க்கும் போது "இது கால் பந்தாட்டப் போட்டியா? அல்லது காலால் மனிதர்களையே பந்தாடும் போட்டியா என்கிற சந்தேகம்   வருகிறது . போட்டிகள் நடக்கும் போதே ஸ்டரெச்சரில் வீரர்களை தூக்கிக் கொண்டு செல்வது வேதனை அளிக்கிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் பிரேசில் நாட்டு வீரர் ஒருவரின் முதுகெலும்பு  அப்பளம் நொறுக்கியது போல் நொறுங்கியிருப்பது  எத்தனை வேதனைக்குரியது.

இப்படிப்பட்ட  நிகழ்வுகளை  காணும் இளைய தலைமுறையினர்   சக விளையாட்டு வீரர்களை  காயப்படுத்துவது  விளையாட்டின் ஓர் அங்கமே என்று கணிப்பதற்கு  வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமேயல்லாமல் ,    வெற்றிக் கோப்பையை கைப்பற்றி விட எந்த எல்லைக்கும் போகலாம்  என்கிற மனோபாவமும் வளரலாம். இந்த  பயம் நம் எல்லோர் மனதிலும்  இருப்பது உறுதி.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் , கடுங்கோடையில்  மழை பெய்வது போல் ஜில்லென்று ஒரு செய்தி படித்தேன். அதைப் பகிர்கிறேன். பலருக்கு இது தெரிந்திருக்கலாம் .

ஸ்பெயினில்  புர்லாடா (Burlada)  என்னும் ஊரில்  நடந்த  cross country ஓட்டப் பந்தயத்தில் இவான் Iván Fernández Anaya என்கிற ஸ்பெயின் நாட்டு வீரரும்     Abel Mutai   என்கிற கென்யா  வீரரும்  கலந்து கொண்ட போட்டி அது.கென்யா நாட்டு வீரர் முதலாவதாக   வந்து வெற்றி பெறப் போகிறார் என்பது உறுதியானது.  தீடீரென்று  அவர் ஓட்டம் தடை பட ஆரம்பித்தவுடன்  சுற்றி நின்ற கூட்டம்  சற்றே குழம்பி  பார்த்துக் கொண்டிருந்தது. தான் வெற்றிக்  கோட்டைத் தாண்டி வெற்றிப் பெற்று விட்டதாக  தவறுதலாக எண்ணிய திரு. Mutai   தன் ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் . கூடியிருந்த  மக்களுக்குப் புரிய  ,அவர்கள்   அவருடையத் தவறை ஸ்பானிஷ் மொழியில்  அவரைப் பார்த்து சொல்லி யும் மொழிப் புரியாததால்   அவருக்குப் புரியவில்லை.

பின்னாலேயே  இரண்டாவதாக வந்துக் கொண்டருந்த திரு. இவான் அந்த சந்தர்ப்பத்தை  உபயோகித்து   ஓடி  வெற்றி  பெற  அருமையான வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை அவர் உபயோகிக்கவில்லை. கென்யா வீரருக்கு சைகை மூலமாகவே அவர் தவறை உணர்த்தி தன வேகத்தைக் குறைத்து கென்யா வீரர் வெற்றி பெற செய்திருக்கிறார்.

இப்படியும் விளையாட்டு வீரர் இருக்கிறார்கள் . என்னை ஆச்சர்யபடுத்திய செய்தி இது.இது நடந்தது 2012இல்.
அவரை நம் செய்தியாளர்கள் விட்டு விடுவார்களா என்ன?அவரகள்  அவரை இது பற்றிக் கேட்டதற்கு,

"I didn't deserve to win it. I did what I had to do. He was the rightful winner. He created a gap that I couldn't have closed if he hadn't made a mistake. As soon as I saw he was stopping, I knew I wasn't going to pass him."  என்று சொல்லியிருக்கிறார்.

அதன் தமிழாக்கம் ," கென்யா வீரருக்கும்  எனக்கும் நல்ல இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. அவர் தவறுதலாக தான் வெற்றி இலக்கை தொட்டு விட்டதாக எண்ணிய காரணத்தால் தான் நான் அவரை எட்டிப் பிடித்தேன். உண்மையான வெற்றியாளர் அவர் தானே. நான் என்ன செய்திருக்க வேண்டுமோ அதைத்தான் செய்தேன். " என்கிறார திரு.இவான்  தன்னடக்கத்தோடு.

அவருடைய செய்கை அவரை உலகறிய செய்து விட்டது.உண்மையின் மகிமையே அது தானே!. முதல் பரிசை , போட்டியை நடத்தியவர்கள்  கென்யா வீரருக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால் உலகமே அவரைப் புகழ்ந்து தள்ளி விட்டது. இதுவல்லவோ உண்மை வெற்றி.

 அந்த அற்புதக் காட்சி   இதோ





வெற்றி முக்கியமே ஆனால் உண்மையாக இருப்பது  அதை விட முக்கியம்.
 உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இந்த செய்தியைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

image courtesy--google.
video courtesy--youtube.

34 comments:

  1. //வெற்றி முக்கியமே ஆனால் உண்மையாக இருப்பது அதை விட முக்கியம்.//

    நிகழ்ச்சியும் உதாரணமும் அழகாகக் சொல்லி விளக்கியுள்ளீர்கள். போட்டிகள் ஆரோக்யமான முறையில் உண்மையாகவேதான் நடக்க வேண்டும். அதுதான் முக்கியம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோபு சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  2. உண்மையிலேயே பெருந்தன்மையானவரே....பதிவிற்க்கு நன்றி சகோதரி.
    நேரமிருப்பின் எனது பதிவு ''எனக்குள் ஒருவன்'' காண்க...
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் உங்கள் பாராட்டிற்கு. அவசியம் உங்கள் பதிவைப் படிக்கின்றேன்.

      Delete
  3. மனம் நெகிழ வைத்த காட்சி..
    தன்னடக்கம் என்றும் தாழ்வு அடைவதில்லை.
    திரு. இவான் அடைந்ததும் மகத்தான வெற்றியே..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துரை சார்.

      Delete
  4. "நல்லா விளையாடுறவங்க ஏன் இப்படி "சில்லி" நடந்துக்கிறாங்க?" "எவ்ளோ பெரிய மனுஷன் இவரு, கோர்ட்க்கு வந்துட்டா ஒர் சாதாரண விளையாட்டில் ஏன் இப்படி அசிங்கமாப் பொய் சொல்றாரு?" னு என்னோட விளையாடுறவங்களை, (ஒரு சில மிகத் திறமையானவர்களும்கூட இப்படி நடந்துக்குவாங்க) பார்த்து அடிக்கடி யோசிப்பேன்! வெற்றி ஒண்ணுதான் இவர்களுடைய கண் மூடித்தனமான இலக்கா? னு இன்னும் ஆச்சர்யப் பட்டு ஒரு சிலரிடம் (சிக்கியவர்களிடம் :) சொல்லிக்கொண்டும் இருக்கிறேன். அப்படிப் பட்ட எனக்கு, இப்படி ஒரு செய்தி எவ்வளவு ஆறுதல் தரும்னு ஒரு டீச்சருக்கு நான் விளக்க வேண்டியதில்லை. நான் அறியாத இந்நற்செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிங்க, மிஸஸ் ராஜலக்ஷ்மி! :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி வருண். உங்கள் மனதிற்கு ஆறுதல் தரும் செய்தியைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.

      Delete
  5. சிறந்த பதிவு
    வரவேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  6. அருமையான விளக்கத்துடன் கூடிய
    காணொளி மிக மிக அருமை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  8. வெல்டன் இவான்... அரிய செய்தியை அறியத் தந்தமைக்கு நன்றி. வால்ஷ் நினைவுக்கு வருகிறார்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  9. வெற்றியடைந்தால் கிடைக்கும் பணமும் புகழும் தரும் போதையை மீறி நேர்மையாக நடந்ததால் வென்று விட்டார் அந்த இரண்டாமிடத்தில் வந்த வீரர். எங்கேயும் நேர்மையாக இருக்க வேண்டுமென்பது வலியுறுத்தப்பட வேண்டியது. உண்மையில் இதைப் படித்து வருகையில் எனக்கும ஸ்ரீராம் போல கர்ட்னி வால்ஷ்தான் நினைவுக்கு வந்தார்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி பால கணேஷ் சார்.

      Delete
  10. திரு. இவான் அவர்களின் சிறப்பை என்னவென்று சொல்வது...? குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஒரு பாடம்...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  11. முற்றிலும் அறியாத ஒரு செய்தியைத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா மேடம்.

      Delete
  12. அருமையான பகிர்வு.இறுதியில் கூறிய உதாரணமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி ஸாதிகா.

      Delete
  13. செய்திப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி பாலு சார்.

      Delete
  14. அந்த கென்ய வீரர்தான் உண்மையான விளையாட்டு வீரன்! அருமையான செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  15. போட்டி என்று வந்துவிட்டால் எல்லோரையும் உதறித்தள்ளிவிட்டு முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் இப்படியானவர்களும் இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டும் பதிவு. மிக்க நன்றி

    ReplyDelete
  16. தங்களின் இந்த 99வது பதிவுக்குப்பாராட்டுக்கள்.

    வெற்றிகரமான தங்களின் அடுத்த 100வது பதிவினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்போதே அதற்கான என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    //இதுவல்லவோ உண்மையான வெற்றி!//

    என்ற தங்களின் இந்தத் தலைப்பு தங்களின் அடுத்த வெற்றிகரமான 100வது பதிவுக்கும் பொருத்தமாக அமையட்டும் என வேண்டுகிறேன்.

    என்றும் அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  17. "மென்"னையும், "ஜென்டில்மென்"னையும் இது மாதிரியான நிகழ்வுகளே வேறு படுத்தி காட்டுகின்றன..

    ஐ.பி.எல் போல, FIFA வும் ஒரு Entertainer தான் அம்மா.. அதில் நேர்மையையும், SPORTSMANSHIP ATTITUDE-ஐயும் காண்பது அரிது..

    ReplyDelete
  18. இந்தப் பெருந்தன்மை எல்லாருக்கும் வருவதில்லை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. வெற்றி முக்கியமே ஆனால் உண்மையாக இருப்பது அதை விட முக்கியம்.
    உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இந்த செய்தியைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. //

    நல்ல கருத்தை சொன்னீர்கள் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு கண்டிப்பாய் இந்த செய்தியை சொல்வேன்.
    வெற்றி மட்டும் முக்கியமில்லை என்பதை எப்போதும் குழந்தைகளுக்கு வலியுறுத்தவேண்டும்.
    என் டேஷ்போர்ட் இந்த பதிவை காட்டவில்லை, ஸ்ரீராம் பதிவின் மூலம் வந்தேன், ஸ்ரீராமுக்கும், உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  20. இதைத்தான் 'விளையாட்டு வினையாகும்' என்று சொல்கிறார்களா! காணொளியும், செய்தியும் சுவையாக உள்ளன.

    ReplyDelete
  21. எத்தனை பெரிய மனது அவருக்கு......

    விளையாட்டிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் அவருக்கு நிச்சயம் வெற்றியை ஈட்டித் தரும்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்