Sunday, 19 April 2015

"வலை"யைக் காப்பாற்றுவோம்!
google image 

" ராசி  இங்கே பார் உன் ஆட்டம் க்ளோஸ்." காலையில் ராசியின் சூடான காபியை குடித்துக் கொண்டே  விஷ்ணு  கத்தினார்..

ராசிக்கு ஒன்றும் புரியவில்லை. தனக்கும் காபியை  கலந்து கொண்டு வந்து விஷ்ணு அருகில் அமர்ந்து பேப்பரில் எட்டிப் பார்த்தாள். பேப்பரில் என் பேர் வந்திருக்கிறதா? எதற்கு இவர் இப்படிக் கத்துகிறார்.. பதிவுலகில் ஓரளவிற்கு  என்னைத் தெரியும். பேப்பரில் வரும் அளவிற்கு நான் பிரபலமாகி விட்டேனா? என்ன செய்தோமோ தெரியவில்லையே! இது தான் விபரீத ராஜயோகம்  என்பதோ   என்று நினைத்துக் கொண்டே ,விஷ்ணுவைப் பார்த்து,

" எங்கே என் பெயர் வந்திருக்கு? "

" அவ்வளவு ஆசையா உனக்கு ? உன் பேர் பேப்பரில் வேற வரணுமா? இப்ப தானே சொன்னேன் உன் ஆட்டம் க்ளோஸ்னு "

" சொல்றதை கொஞ்சம் புரியும்படியா  சொன்னாத் தானே ."

 "நல்லாவே புரியும்படியா சொல்றேன்."

" நேற்று உன் தோழி  சுருதி வீட்டில் என்ன சாம்பார்? " விஷ்ணு கேட்க

" வெண்டைக்காய் சாம்பாரும் சேப்பங்கிழங்கு   ரோஸ்டும் " பதில் சொன்னாள்  ராசி.

எப்படித் தெரியும்?

நாங்க தான் " Whats app, viber, facebook " எல்லாத்திலேயும் இருக்கோமே. ஒன்றில் அவளை  ஆன்லைனில் காட்டலைனா  இன்னொரு  சோஷியல் நெட்வொர்க்கில் பார்த்துக்  கேட்டு விடுவோமே."

" அதற்குத் தான்  வேட்டு என்கிறேன். "

" எப்படி? "

" இனிமேல் இதுக்கெல்லாம் காசு "

" என்ன உளறுகிறீர்கள்? அதெல்லாம் ஒன்னும் இருக்காது. "

" நிஜமாத்தான் ராசி. "

" Whats app, facebook, skype, viber, facetime  எல்லாத்தையும் உபயோகிக்க வேண்டுமானால் இனிமேல் பணம் கட்ட வேண்டியிருக்கும் . நான் சொல்லவில்லை. நம்  Trai  அமைப்பை  ISP (Internet service providers)  கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ."

" அட......ராமா....! "

" கூப்பிடு ,ஸ்ரீராமனை , அவர் தான் இதெயெல்லாம் சரிபடுத்தியாகனும்.
இன்னும் இருக்கு . உனக்கு வயிற்றில் புளி  கரைக்கும் செய்தியை சொல்கிறேன்."

" இன்னுமா....?. "

" ஆன்லைனில்  வாங்கித் தள்ளுகிறாயே  அவர்களும் இனிமேல் காசு கேட்பார்கள். "

" யாரு ...Flip Kart, Jabong, Askme Bazaar......etc போன்றவர்களா? "

" நாம் என்ன இலவசமாவா  வாங்குறோம்.அதான் credit card இல்லைனா   COD அப்படித் தானே வாங்குகிறோம்.  காசு கொடுத்து தானே வாங்கறோம்."

இரு ராசி உனக்கு புரிய வைக்கிறேன்.

" நீ எப்படி இணையம் வருகிறாய் ? internet  வழியாகத் தானே "

" ஆமாம் . நம் வீட்டில் தான் ஏர்டெல் கனெக்ஷன் இருக்கிறதே ."

" கரெக்டா பாயிண்டிற்கு வந்துட்டியே  ராசி. லேப்டாப்பை திறந்தவுடன்  எந்த சைட்டிற்குப் போகிறாய் ? உதாரணத்திற்கு  " google " என்று வைத்துக் கொள்வோமே. google எந்த ISPஇல், எந்த பேக்கேஜில்   வாங்கினால் கிடைக்கும் என்று பார்த்து  கனெக்ஷன் வாங்க வேண்டும்  இல்லையென்றால் எதை எடுத்தாலும் googleஇடம்  பஞ்சாயத்திற்கு செல்கிறோமே  அது நடக்காது."

இதே சட்டம் தான் flipkart, jabong எல்லாவற்றிற்கும் .


" Flipkart , amazon, jabong  போன்றவைகளும்  இது போல் ஒரு குறிப்பிட்ட   ISP இல் நீ இன்டர்நெட் கனெக்ஷன் வாங்கினால் தான் கிடைக்கும் . ஏன்னா  அவர்கள் அந்த ISPயுடன் உடன்படிக்கையில் இருப்பார்கள்.  "

" என்ன பெரிய உடன்படிக்கை ? எல்லாம் பணம் படுத்தும் பாடு. " அலுத்துக் கொண்டாள்  ராசி.

 " அப்படின்னா  ஓசை படுத்தாமல் ஆன்லைனில் வாங்கும் பொருட்களின் விலை ஏறுமே ."

"  இந்தப் பக்கம் இன்டர்நெட் கணெக்ஷனிற்குப்  பணம் . அந்தப் பக்கம் வாங்கும் பொருட்களுக்குக் கூடுதல் காசு. இதைத்  தான்  மத்தளத்திற்கு இரு பக்கமும் இடிஎன்று சொல்வதோ?என்னமோ போங்கள் " என்று சொல்லி விட்டுத்  திரும்பியவள்,

" ஆமாம் ... பொழுதுக்கும் பாட்டுக்கும்  உட்கார்ந்து உங்கள் நண்பர்களுடன் அரட்டை  அடிக்கிறீர்களே  அதற்கு ஒன்றும் ஆகாதா ?"

"அதான்....சிட்டுக் குருவி  தூது போவதைத் தான் சொல்கிறேன்."

" சிட்டுக்குருவி தூதா ....ஓ  ட்விட்டரைத் தானே சொல்கிறாய்? அதற்கு மட்டும் விதி விலக்கா என்ன " என்று விஷ்ணு சொல்லி விட்டு நண்பர்களுடன் வம்படிக்காமல் எப்படி இருப்பது  என்கிறக் கவலையில் ஆழ்ந்தார்.

" போச்சு ..... பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் எல்லாம் போச்சா ? " கவலையில் ஆழ்ந்தனர்  ராசி விஷ்ணு தம்பதி.

 " குக்கூ ...... " நீண்ட விசில் சத்தம் விஷ்ணுவின் செல்பேசியிலிருந்து .

" ரமேஷிடமிருந்து  செய்தி வந்திருக்கு என்று சொல்லிக்கொண்டே whatsapp செய்தியைப் படிக்க ஆரம்பித்தார் விஷ்ணு."

" ராசி இங்கே பார் நம்முடைய  வலையை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்ற ஒரு உபாயம் இருக்கிறதாம்  . ரமேஷ் செய்தி அனுப்பியிருக்கிறார். "

என்னவாம் ?
"ஒரு பெட்டிஷன் போட வேண்டுமாம். இது வரை இரண்டு லட்சத்திற்கு மேலான இணையப்  பயனீட்டாளர்கள்   கையெழுத்து இட்டுள்ளார்கள். நாமும் போட்டு விடலாமா ராசி. "

ஆஹா ... எங்கே  போட வேண்டும் .

" இதோ இங்கே தான்  Net Neutrality petition . "

" இன்னும் விவரம் தெரிய வேண்டுமென்றால் http://savethe internet.in க்ளிக் செய்து படிக்கலாமாம் . அங்கேயும்  TRAI க்கு நம் கருத்துக்களைப் பதியலாமாம். "

எதற்கும் படித்துப் பார்த்து விட்டே கையெழுத்திடுவோம்  என்று தீர்மானித்தனர் ராசி விஷ்ணு தம்பதிகள்.

ஆமாம். ... இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் பெட்டிஷன் போட்டாச்சா.?
சீக்கிரம் பெட்டிஷன் போடுங்கள் ,TRAI ற்கும் உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.  விரைந்து  செயலாற்றுவோம். 

எல்லோரும்  ஒன்று கூடினால்   கண்டிப்பாக "வலை"யைக்  காப்பாற்றி விடலாம்.

வாருங்கள்.....ஒன்று கூடுவோம் ! வலையைக் காப்பாற்றுவோம்.!

11 comments:

 1. ஜெயிப்போமோ இல்லையோ.... நான் என் கடமையைச் செய்து விட்டேன். இது கூட இன்னும் நான்கைந்து தினங்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று நினைக்ஙிறேன்.

  ReplyDelete
 2. என் பேரன் அவனது ஆங்கில வலைத்தளத்தில் இது பற்றி எழுதி இருக்கிறான்
  http://vibhumanohar,blogspot.in நான் பெடிஷனில் சேர்ந்து விட்டேன்

  ReplyDelete
 3. இரு நாள் முன்பே தகவல் அனுப்பியாகி விட்டது... என்ன ஆகுமோ...?

  ReplyDelete
 4. Actually, we already pay for internet service.

  After doing on-line banking, paying check through on-line we feel we save the "postage". Are we REALLY saving money? NOPE!! How much we pay for the "internet service" every month? It is much more than what we pay for the postage.

  The fact is it is NOT that we are using whatsapp, google FREE either! We already pay for it as "internet service fee"! We just dont realize it.

  Honestly, we can do more constructive things than what we are doing in FB, whatsapp and all if there is no internet and phone.

  You can not exercise in ON_LINE, right?

  You can not JOG or go for a walk on-line, right?

  You can not breathe fresh air in online right?

  I am a kind of a guy who likes to use my "loss" and get a benefit out of it. OK, fb, whatapp are costing me a lot. Let me stop paying for that and stop using it.I cant afford anymore. I wont die. Let me visit my friend if I dont know how to kill my time sitting on-line. Let me go for a long walk. Let me take few hours to get to beach (and watch ther real people and their problems around me) and get some fresh air. That's one approach! It is all in our mind. We can enjoy our life and spend our time in a worthy way even if there is NO INTERNET, phone, fb, wa!

  That's just a challenge, madam. That's all! :)

  ReplyDelete
 5. "வலை"யைக் காப்பாற்றுவோம்! பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. மிக எளிமையாக ராசி, விஷ்ணு பேச்சில் விளக்கி இருப்பது அருமை. நானும் படித்துப் பார்த்து விட்டு அனுப்புகிறேன்.

  ReplyDelete
 7. http://www.kaniyam.com/need-netneutrality-tamil-short-film/
  இந்த இணைப்பில் இருக்கும் குறும்படத்தை பாருங்கள். நிலைமை புரியும்.
  உங்கள் நடையில் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள், ராஜி. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. நன்றி சகோதரியாரே
  நானும் கடமையை செய்துவிட்டேன்

  ReplyDelete
 9. வணக்கம்
  அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.. செல்கிறோம்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. நல்லதே நடக்கும் என நினைப்போம். இல்லையெனில் தேவையில்லாத பல வசதிகளை குறைப்போம்!

  ReplyDelete
 11. @ஸ்ரீராம்.,@G.M Balasubramaniam,@திண்டுக்கல் தனபாலன்,@வருண்,@வை.கோபாலகிருஷ்ணன்,@Geetha Sambasivam,@Ranjani Narayanan,@கரந்தை ஜெயக்குமார்,@ரூபன்,@வெங்கட் நாகராஜ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்/. மிக தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.
  என் வேண்டுகோளுக்கு இணங்க பெட்டிஷன் போட்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

  ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்