எனக்குத் திருமணமான புதிது.அப்போது எனக்கு சமையல் அரையும் குறையுமாய் தான் தெரியும்.
அப்போது ஒரு நாள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம். என் கணவருக்கு சகோதரி முறையாக வேண்டும் அவர்.
குசல விசாரிப்பெல்லாம் முடிந்த பின், காபி போட உள்ளே சென்றவரை நானும் தொடர்ந்தேன். டைனிங் டேபிளின் மேல் வாழைப்பூ ஒன்று பாதி ஆய்ந்த நிலையில் இருந்தது. காபி போட்ட பின்பு வாழைப்பூவை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தார் அக்கா.
அப்பொழுது அவருக்கு பக்கத்து வீட்டில் இருந்து அழைப்பு வரவே எழுந்து போய் விட, நான் அரிவாள் மனையை எடுத்து வாழைப்பூவை நறுக்கி நீரில் போட்டுக் கொண்டிருந்தேன்."சகோதரன் மனைவி கை வேலையில் கெட்டிக்காரி" என்று நல்ல பெயர் எனக்கு வராதா என்கிற ஆசையில் நறுக்கஆரம்பித்தேன்.
எல்லாமே நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. சட்டென்று நறுக்க முடியாமல் திணறினேன் 'என்னவோ நறுக்க விடாமல் தடுக்கிறதே ' ....ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நறுக்க முயற்சிக்கும் போது ," அடடா .... கள்ளனை எடுத்து விட்டு நறுக்கி வை ராஜி " சொல்லிக் கொண்டே வந்தார் அக்கா. .
இவர் என்ன சொல்கிறார்?
" கள்ளனா ?" எங்கே என்று சுற்று முற்றும் பார்த்தேன்.
ஒன்றும் புரியாதவளாய், மீண்டும் நறுக்க முயற்சிக்கவும்,அக்கா , " ராஜி...ராஜி... கள்ளனை எடுக்க சொன்னது வாழைப்பூவிலிருந்து. நீயோ சுற்று முற்றும் தேடுகிறாய். உன் உள்ளம் கவர்ந்த கள்வனை சொன்னேன் என்று நினைத்து விட்டாயோ " என்று என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டினார்..
இன்று சட்டென்று அந்த சம்பவம் நினைவில் வந்து மோதியது. என் " Rajisivams Kitchen"channel இல் வாழைப்பூ வடை செய்முறை சொல்லும் போது நானும் கள்ளனைப் பற்றி சொல்லியிருக்கிறேன். சேனல் டைரக்டராயிருக்கும் என்னவர், " எல்லாம் நேரம் ராஜி. நீ கள்ளனைத் தேடியது எனக்கல்லாவா தெரியும்." என்றார்.
இதோ வீடியோ உங்கள் பார்வைக்கு.
இதை ' Like', 'Share' & 'Subscribe' செய்ய மறக்க வேண்டாமே ....ப்ளீஸ் ...
நன்றி !

நினைவுகள் ஒரு சந்தோஷமே...
ReplyDeleteகல்யாணம் ஆன புதிதில் சின்னப்பெண்ணான நீங்கள் கள்ளனை நீக்காமல் வாழைப்பூ நறுக்கியதை என்னால் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
ReplyDeleteவாழைப்பூ முழுவதையுமே மடலுடன் சேர்த்து நறுக்கித்தள்ளி விட்டீர்களோ என நான் நினைத்து பயந்தே விட்டேன். :)))))
வாழைப்பூ வடை செய்முறை காணொளி சூப்பர்.
அது உள்ளே சாமர்த்தியமாய்
ReplyDeleteஒளிந்து கொண்டிருப்பதால்
அந்தப் பெயர் என நினைக்கிறேன்
எனக்கும் பிடித்த வடை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாழைப்பூ வடை மிகவும் பிடித்தமானது..
ReplyDeleteஅதன் துவர்ப்பு உடலுக்கு நல்லது..
வாழ்க நலம்..
இந்தப் பிரயோகம் கேரளத்தில் என்று நினைக்கிறேன்
ReplyDeleteஅருமையான மலரும் நினைவுகள்.
ReplyDeleteசுவையான வாழைப்பூ வடை.
பகிர்வுக்கு நன்றி.
அருமை
ReplyDelete