இன்று காலை என்னவர்,காபியோடு, பேப்பரைக் கையில் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். அரசியல் நிலவரங்களை படித்து விட்டு, குளிக்கக் கிளம்பினார்.
நானும் என்னுடைய சமையல் வேலைகளில் மூழ்கி விட்டேன்.
சிறிது நேரத்தில் அவர் குரல் கேட்டது,,"ராஜி! இன்றைய நியூஸ் பேப்பர் பாத்தியா?"
"நீங்க தானே படிச்சீங்க ... இப்ப என்னைக் கேக்குறீங்க...."
" கிடைக்கலையே. நான் பாட்டிற்கு படிச்சிட்டிருந்தேன். டிபன் சாப்பிடனும்னுக்கற உன்னோட நச்சரிப்பு தாங்காம தான் அப்படியே போட்டுட்டு போனேன். இப்ப பாரு...." சொல்லிட்டு முணுமுணுப்பது காதில் விழுந்தது.
" என்ன அங்கே முணுமுணுப்பு?" குரலில் என் கோபம் தெரிந்தது.
"எல்லாத்துக்கும் நான் தான் காரணமா? பேப்பரைக் காணோம்னாலும் நான் தானா? " அலுத்துக் கொண்டு நானும் பேப்பர் சேஸங்கில் (paper chasing) இறங்கினேன்.
சோபாவுக்கடியில்...குனிந்து பார்த்தில் முதுகு பிடித்துக் கொண்டது தான் மிச்சம்..
டீபாய்க்கடியில் இருக்கா?..... இல்லை
பெட் மேல இருக்குமோ?
ம்ஹூம்.....கிடைக்கவேயில்லையே!
இதென்னடா? நம்ம வீட்டு ஹாலில் இருக்கும் நியூஸ் பேப்பரை யார் திருடுனது?
அப்படி ஒரு நடு நிலை செய்திகளா அதில் போடுகிறார்கள்? திருடிப் படிக்க...... நினைத்துக் கொண்டேன்.
"ஆமாம் நான் இவருக்காக தேடுகிறேன். இவர் சத்தத்தையே கானோமே ! " பேப்பர் தேடுவதை விட்டு விட்டு இவரை தேடினேன்.
"எங்க இருக்கீங்க?"
பதில் வரவில்லை.
இதென்ன பெரிய அரண்மனையா என்ன....."யாரங்கே! மன்னர் எங்கே " என்று கேட்க....
முதலில் இவர் என்ன செய்கிறார்னு பாப்போம். நம்மளை பேப்பர் தேடவிட்டுட்டு இவர் பாட்டுக்கு ஃபேஸ் புக், ட்விட்டர் என்று நன்பர்களுடன் அளவளாவ போயிருப்பாரோ.... நினைத்துக் கொண்டே தேடினால்.... அவரோ என் கிச்சன் அலமாரியைத் தேடிக் கொண்டிருந்தார்.
"இங்கே என்ன பண்றீங்க ?"
'ஒரு வேளை மாவு சலிக்க எடுத்திட்டியோன்னு நினைச்சேன்."
"ரொம்பத் தான்....ஆனாலும் ...." முகத்தை நொடித்துக் கொண்டு, "பாவமாய் தனியாய்த் தேடுகிறீர்களேன்னு கூடத் தேடினால், எனக்கே வேட்டு வைக்கிறீர்களா? என்னால் இனிமேல் பேப்பர் சேஸிங் செய்ய முடியாது" என்று சொல்லி விட்டு என் சமையலைத் தொடர்ந்தேன்.
எல்லா வேலையும் முடித்து விட்டு, வீடியோ எடிட்டிங் டேபிளிற்கு வந்தேன்.
பேப்பர் என்னாச்சுன்னு கேக்கிறீங்களா? அது அவ்ளோ தான்.விடுங்க....
மசால் வடை வீடியோவை எடிட் செய்து முடித்து விட்டு, அவரிடம் வீடியோவைக் காட்டினேன்.
பாத்து முடித்து விட்டு,
"சொன்னால் கோபம் வருது ராஜி உனக்கு. பேப்பரை நீ தான் எடுத்திருக்கே ."சொன்னார் என்னவர்.
" திரும்பவுமா? என்னால் தேடல்லாம் முடியாது. வீடியோவைப் பாருங்கன்னு சொன்னா திரும்பவும் பேப்பரிலிருந்து ஆரம்பிக்காதீங்க." அலுத்துக் கொண்டேன்.
" நானும் அதையே தான் சொல்றேன். பேப்பரை எங்க வச்ச?. வீடியோவில் பேப்பர் இருக்கு பாரு." சொன்னவுடன் தான் நினைவிற்கு வ்ந்தது.
"ஸ்ஸ்ஸ்ஸ்..... ஆமாம் இல்ல.... தலையில் அடித்துக் கொண்டேன்.
அவசர அவசரமாக உள்ளே சென்று ,சட்டென்று நியூஸ் பேப்பரை எடுத்து அவர் கையில் தினித்தென்.
என்னையே முறைத்துக் கொண்டி இருந்தார் அரை நிமிடம் வரைக்கும்.
" இதெல்லாம் எனக்குப் புதிதா என்ன? " நினைத்துக் கொண்டேன்.
சரி,,,, உன்னையும், அவரையும் பாடாய் படுத்திய மசால் வடை...இல்லை இல்லை... பேப்பர் எப்படி வீடியோவில் மாட்டியது என்கிறீர்களா?
நீங்களே பாருங்கள். இங்கே click செய்து பாருங்கள் .Rajisivams Kitchen.
அப்படியே "Subscribe" பட்டனை தட்டி விடுங்கள். நீங்கள் செய்வீர்கள் என்று தெரியும். ஒரு 'Gentle Reminder' தான்.
என் சேனலில் மணக்கும் சாம்பாரிலிருந்து இனிக்கும் பாயசம் வரை எது வேண்டுமானாலும் கிடைக்கும்.
நாங்கள் 'facebook' வாசிகள் மட்டுமே என்ரு சொல்பவர்கள் இங்கே என் ரெசிபிக்களைப் பார்க்கலாம். https://www.facebook.com/rajisivams/
நன்றி.
ஆஹா..அற்புதம்.காணொளியும்..சொல்லிச் சென்ற விதமும் ..வாழ்த்துக்கள்
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை காணுவதில் மகிழ்ச்சிங்க, ராஜலக்ஷ்மி!
ReplyDeleteவாங்க... வாங்க...
ReplyDeleteமீண்டும் அசத்துங்க...