அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-7 படிக்க இங்கேகிளிக்கவும்.
![]() | |
image courtesy-http://www.clipartlord.com |
ராசி "Tiffany Drive" இல் தன் மகன் ராஜேஷ் ,பேரன் அர்ஜுனுடனும்,நடந்து சென்று கொண்டிருந்தாள் . அமெரிக்கா வந்தப் புதிதில், "பரவாயில்லையே இங்கு வீட்டிற்கு அருகிலேயே ஒரு டிரைவ் இன் ஹோட்டல் இருக்கிறதே" என்று நினைத்துக் கொண்டிருந்தாள் .
தன் மகனிடம், "என்னடா... இந்தக் குடியிருப்பு வளாகத்திலேயே டிரைவ் இன் ஹோட்டல் இருக்கிறதே" என்று சொல்ல, முதலில் ராஜேஷிற்கு ஒன்றும் புரியவில்லை. Tiffany drive என்கிற பெயர் தான் அம்மாவைக் குழப்பியிருக்கிறது என்று பின்னர் ராஜேஷிற்குப் புரிய, அது தெருப் பெயர் மட்டுமே என்று விளக்கி சொன்னான்i
இன்று Tiffany drive வழியாக, நடந்து போகையில், இது மனதில் ஓடியதில் ராசி முகத்தில் ஒரு சின்ன புன்னகை வந்தது. சின்னப் புன்னகையுடன் நடந்தவள் எதிரே 'புசுபுசு' வென்று வெள்ளைப் பந்துருண்டை போலிருந்த நாய்க்குட்டியை, அமெரிக்கப் பெண்மணி ஒருவர், அழைத்துக் கொண்டு போனார்.
ராசியைப் பார்த்து ஹாய் சொல்லவும், பதிலுக்கு ராசியும் ஹாய் சொல்ல இப்பொழுது பழகிக் கொண்டிருந்தாள் .
ராஜேஷிடம் , " அந்த 'டாக் ' நல்ல அழகு , இல்லடா ?" என்று ராசி கேட்கவும்,
ராஜேஷோ , " கத்திப் பேசாதேம்மா . நாய் என்று சொல்லக் கூடாது. நீ இங்லிஷீல் வேறு சொல்கிறாய் "
"ஏண்டா நாயை, நாய் என்று சொல்லாமல் பின்னே எப்படி சொல்வார்கள். "
" இது அவர்கள் வீட்டு செல்லப் பிராணி அம்மா. அதற்கென்று ஒரு பெயர் இருக்கும், அதை சொல்லித் தான் கூப்பிடனும்."
"எனக்கு எப்படிடா அவர்கள் வீட்டு நாயின் பேர் தெரியும்?"
"அம்....மா நாய் என்று சொல்லாதே என்றால் எத்தனை தடவை நாய் என்று சொல்கிறாய்? தங்கள் வீட்டு செல்லப் பிராணிக்காக கோர்ட்டிற்குப் போகக் கூடத் தயங்க மாட்டார்கள் அமெரிக்கர்கள்."
"போடா நீயும் உன் அமெரிக்காவும். இம்மென்றால் சிறைவாசம்! உம்மென்றால் வனவாசம்! என்பார்கள் போலிருக்கிறது...என்னவோ போ ... நீங்களெல்லாம் எப்படித்தான் இங்கே இருக்கிறீர்களோ புரியவில்லை!"
"இந்தியாவில், எதற்கெடுத்தாலும், டிவிக்களில் " போச்சு... போச்சு .....கருத்து சுதந்திரம் போச்சு" என்று கூப்பாடு போடுகிறார்கள். அதற்கு அமெரிக்காவும் ஜால்ரா . இங்கே என்ன வாழ்கிறதாம்?. நாயை.... நாய் என்று சொன்னாலே குற்றமாம்."
அப்பொழுது , ராஜேஷ் ," அதை விடு.இங்கே பார்.... இந்த மரத்தில்......" காட்டிய இடத்தில் படம் ஒன்று ஒட்டி இருந்தது.
ராசி, கண்ணாடியை கழட்டித் துடைத்து மாட்டிக் கொண்டு,"என்னது அது? நாய் மாதிரி தெரிகிறதே." சொல்லி விட்டு 'நாய் 'என்று சொன்னதற்காக நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
"என்ன போட்டிருக்கு?"
அதில் பெரிதாக ," காணவில்லை" என்று 'நாய்' படம் ஒன்றைப் போட்டிருந்தார்கள். அதன் பெயர்,உயரம், நீளம், கலர், கடைசியாக பார்த்த இடம் நேரம் ...இத்யாதி...... இத்யாதி..... ,
கண்டுப் பிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல சன்மானம் வழங்கப்படும் என்றும் இருந்தது."
ஆச்சர்யத்தில், திறந்த வாய், மூடவில்லை ராசி.
அட........ செல்லப் பிராணி தான் என்றாலும் இப்படியா?
கூந்தல் இருக்கும் சீமாட்டி அமெரிக்கா! சீவி முடிக்கிறா, சிங்காரிக்கிறா? நமக்கென்ன வந்தது........ம்க்கும்... என்று பெரிய பெருமூச்சை விட்டு விட்டு நகர்ந்தாள் ராசி.
அன்று மாலையே ராசிக்கு இன்னும் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது .
மாலை எல்லோருமாக அங்கிருக்கும் சரவண பவனிற்கு இரவு உணவு சாப்பிட சென்றிருந்தனர்.
வரும் வழியில் ராஜேஷ் சொன்னான்," அம்மா 'மிஸ்ஸிங் பெட்' நோட்டீஸ் பார்த்து ஆச்சர்யப்பட்டாயே!. இங்கே ஒன்று காட்டுகிறேன் பார்," என்று சொன்னான்.
"என்னடா ?"
காரை ஓட்டிக் கொண்டே ," இடதுப் பக்கம் பார்." என்றான்.
" பார்லர் " என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்க " ஆமாம்! பார்லர் இருக்கு அதற்கு என்ன ?' என்று ராசி கேட்க
"யாருக்குப் பார்லர்?" என்று நன்றாகப் பார்த்து சொல் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தினான் ராஜேஷ்.
" ஆமாம்டா ' பெட் பார்லர் ' என்று போட்டிருக்கு. இங்கே என்னடா செய்வார்கள்? "என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு பெண்மணி ," வெள்ளை நாய்க்கு அங்கங்கே பிங்க் கலரில் அதன் ரோமங்களை கலரடித்துக் கொண்டு , அதன் தலையில் அழகிய' பிங்க் போ'வை சரி செய்து கொண்டே அதற்கு முத்த மாரி பொழிந்து கெண்டே வந்தார். .
அருகிலிருந்த தன் காருக்கு சென்று," பின் சீட்டைத் திறந்து , அதைக் கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி சீட்டில் விட்டு, பிரியா விடை பெற்று முன் கதவைத் திறந்து, டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து கொண்டு காரைக் கிளப்பிக் கொண்டு போனார். பார்த்துக் கொண்டிருந்த ராசிக்கு, மயக்கம் வரும் போலிருந்தது.
"எல்லாம் பணம் படுத்தும் பாடு!." நினைத்துக் கொண்டாள் ராசி.
இது நடந்தது சில வருடங்களுக்கு முன்பு.
இந்தியாவிலும், இப்பொழுது செல்லப் பிராணிகளுக்கு பார்லர்கள் அங்கங்கே முளைத்து கொண்டிருக்கின்றனவே.
அப்படி என்றால் ராசியைப் பொறுத்த வரை நாமும் பணம் படைத்தவர்கள் தானே.(LOL)
,