வழக்கம் போல் இன்றும் இரவு ஒன்பது மணிக்கு டின்னர் கடையை முடித்து விட்டு கணினியைத் திறந்து மெயில் செக் செய்ய உட்கார்ந்தேன்.
மிகவும் மெதுவாக ,என் பொறுமையை சோதித்தப் பிறகு தான் மெயில் ஓபன் ஆனது. எல்லாம் இந்த ரோடு தோண்டுபவர்கள் உபயம் internet slow down .
unread பகுதியில் பார்த்தால் அமரிக்கையாய் ஒரு மெயில்
From Rasi என்றிருந்தது. தன் மகன் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்கிறாள், என்று நினைத்துக் கொண்டே மெயிலை ஓபன் செய்தேன்.
நல விசாரிப்புகளுக்குப் பிறகு, தன் கணவரின் பிறந்த நாளைப் பற்றி சொல்லியிருந்தாள் . வரும் ஏப்ரல் 8ந்தேதியன்று அவருக்குப் பிறந்த நாள் என்றும் , அதற்குத் தான் அருமையான பரிசொன்றும் அவருக்காக வைத்திருப்பதாகவும் சொன்னாள் . ஒவ்வொரு வருடமும் ஏதாவது பரிசு வாங்கிக் கொடுப்பது எனக்கும் தெரியும். அதை மாதிரித் தான் என்று நினைத்தேன். தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
ஒரு சஸ்பென்ஸ் வைத்திருந்தாள் . அடுத்த மெயிலில் அதைப் பற்றிய விவரங்கள் இருப்பதாக சொன்னாள் .
சஸ்பென்ஸ் ஆயிற்றே! தெரிந்து கொள்ளவில்லையென்றால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது.உடனே அடுத்த மெயிலைப் பார்த்தேன்.
அது என்னவோ to Vishnu என்றிருந்தது. cc இல் என் பெயர்.
இது என்ன என்ற குழப்பத்துடன் திறந்தால் ' பிரியமானவருக்கு " என்று ஆரம்பித்திருந்தது.
கவனக் குறைவாக cc இல் என் பெயர் வந்து விட்டதோ என்ற நினைப்புடன் மெயிலை மூடினேன். , டீப்பாயில் பூனைக் குட்டியாய் படுத்திருந்த போனை எடுத்து ராசியின் நம்பரை விரல்களால் ஒற்றி எடுத்தேன்.மறு முனையில் ராசி . எடுத்தவுடன் " படித்து விட்டாயா? " என்றாள் .
"நீயென்ன லூஸா? உன் கணவருக்கு எழுதிய மெயிலில் எதற்கு என்னை cc இல் சேர்த்தாய்?அது சரி. அவருக்கு மெயில் அனுப்ப வேண்டிய அவசியமென்ன? அவரும் உன்னுடன் தானே அங்கிருக்கிறார்? " என்றேன்.
"ஆமாமாம் . அவர் இங்கு தானிருக்கிறார்.உணர்ச்சிகளின் ஆதிக்கத்தினாலோ, தயக்கத்தினாலோ, எதுவோ ஒன்று போயேன் , சொல்ல விடாமல் தடுக்கும் விஷயங்களை அழகாக கோர்வையாக எழுதி விடலாம் இல்லையா? " என்றாள் .உண்மைதானே என்றது மனம்.
" நீயும் படித்துப் பார். இது ஒன்றும் அந்தரங்கமான காதல் கடிதம் இல்லை."
அவள் சொன்னாலும் கொஞ்சம் தயக்கத்துடனேயே படிக்க ஆரம்பித்தேன். ஆனால் போகப்போக இதுவல்லவோ காதல் கடிதம் என்று தோன்ற ஆரம்பித்தது.
நீங்களும் கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்.
ராசியின் கடிதம் இப்படி செல்கிறது.
" நான் உங்கள் கரம் பற்றிய பொது எனக்கு 19 வயது தான். அந்த வயதிற்கே உரிய immaturity என்னிடம் fevicol போட்டு ஒட்டிக் கொண்டிருந்தது எனலாம் .அதனால் சில சங்கடங்கள் .
என்னை அமர வைத்து, உங்கள் தரப்பு நியாயங்களை எனக்கு அழகாய் சுட்டிக் காட்டியது மட்டுமல்லாமல் இன்றளவும் கடைபிடிப்பது என்னை சார்ந்தவர்களிடையே உங்களை எங்கோ உயரத்தில் வைத்திருக்கிறது . சில உறவுகள் என் மனதை நோகடித்து வேடிக்கைப் பார்த்த போது கூட "இது எல்லோர் வீட்டிலும் உள்ளது தான். யார் உன்னைப் புண்படுத்தினாலும் நான் உன்னை என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டேன் "என்று எனக்கு இமாலய நம்பிக்கை கொடுத்து உற்சாகப் படுத்தியது, எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.
வீடு என்றாலே வாசற்படி இருக்கத்தானே இருக்கும். அதை பெரிது படுத்தாமல் இருக்கும் மனநிலையை உண்டாக்கியது நீங்கள் . மாமியார், மருமகள் மாற்று சிந்தனைகளை நீங்கள் எப்பவுமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பார்ப்பதற்கு நீங்கள் என்னவோ அம்மாவை சப்போர்ட் செய்கிறார் போல் தோன்றினாலும் என்னை விட்டுக் கொடுத்ததேயில்லை.
என்னைத் திருமணம் செய்தபோது நான் B.Sc., இரண்டாம் வருடத்தில் இருந்தேன். உங்களுக்கோ வேலையில் உடனே ஊர் மாற்றல். நீங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் ,நான் பாதியிலேயே தான் பட்டப் படிப்பை விட்டேன்.
ஆனால் நான் மீண்டும் படிப்பைத் தொடர ஆரம்பித்த போது உங்களின் ஒத்துழைப்பைக் கண்டு நான் அசந்து தான் போனேன் என்று சொல்ல வேண்டும். அதற்கு பிறகு நான் வெற்றிகளாகத் தான் குவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.
பெயருக்கு பின்னால் பல பட்டங்கள். அருமையான பள்ளியில் ஆசிரிய உத்தியோகம். அன்பான குழந்தைகள் . அழகாய் கொண்டு சென்றீர்கள் குடுமபத்தை. பொறுப்பான உத்தியோகம். தலைமை வேறு.அந்த அதிகாரம் எதனாலும் நீங்கள் வழி தவறியதில்லை. நேர்மை ஒன்றே லட்சியமாக பனி புரிந்ததைப், பார்த்து வளர்ந்த நம் பெண்ணும் பிள்ளையும் அப்படியே அவர்கள் வாழ்விலும் கடைபிடிக்கிறார்கள்.. அன்று நம் மருமகள் என்னிடம், " என்ன மாமி உங்கள் பிள்ளையை இப்படி ரூல்ஸ் ராமானுஜமாக வளர்த்து இருக்கிறீர்கள்." என்று பெருமையாகக் குறைபட்டுக் கொண்டபோது , நான் சொன்னது," அவனுக்கு எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை. நாங்கள் வாழ்ந்ததைப் பார்த்து வளர்ந்திருக்கிறான்."என்றேன்.
நம் பொருளாதாரமும் வளர்ந்தது. கார் ,பங்களா, விமானப் பயணம் எல்லாமே சாத்தியமாயிற்று உங்களால் எனக்கு.அது மட்டுமா? பல் மாநிலங்கள், பல மொழிகள் ,பலகலாசாரங்கள் எல்லாமே அறிமுகமாயிற்று. wife eats half the cake என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் உங்களால், சமுதாயத்தில் எனக்கு மரியாதையும் கிடைத்தது.
எனக்குத் தைரியத்தை கொடுத்து வந்தது நீங்கள் தான். எத்தனை பெரிய விஷயமானாலும் "trial costs nothing" என்று ஊக்குவித்து எந்த ஒரு சவாலையும்
எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை என்னுள் வளர்த்தது நீங்கள் தான் .
எந்த சவாலையும் எதிர் கொள்ளும் தைரியம் என்னுள் இப்போது இருப்பது உண்மை தான்.
ஆனால், உங்கள் உடல் நிலை சற்றே பாதிக்கப் பட்டபோது,ஹாஸ்பிடலில் பெண்,பிள்ளை,பேரன்,பேத்தி எல்லோரும் என்னை சுற்றி இருந்தும் நான் அனாதை ஆனது போல் இருந்தேன்.மீண்டும் நீங்கள் வீட்டிற்கு வந்தபிறகு தான் நான் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தேன்.
இன்று உங்களுக்கு பிறந்த நாள். உங்களை வாழ்த்துவதோ , பரிசு தருவதோ
எதுவுமே எனக்கு சரியாகத் தோன்றவில்லை.அதற்குப் பதிலாக இந்த மெயில்.
சற்றே திரும்பிப் பார்க்கிறேன். ஓடிய 36 வருடங்களும் அவ்வளவும் இனிமை .
வரப் போகும் வருடங்களிலும் இந்த இனிமைத் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
இத்தனை அருமையான ,சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றியை எப்படி சொல்வது?
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அத்தனையிலும் உங்களையே என் கணவராக அடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்."
ராசியின் கடிதம் முடிந்தது.என்னையறியாமல் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பதில் எழுதினேன்.
" இந்த இனிய தம்பதிக்கு வாழ்த்துக்கள் " என்று மட்டுமே என்னால் டைப் அடிக்க முடிந்தது.
நீங்களும் உங்கள் எண்ணங்களை , வாழ்த்துக்களை, அல்லது ஆசீர்வாதத்தை சொல்லி விட்டுப் போங்களேன். ராசி மகிழ்வாள்.
Paatti Stories இல் இப்பொழுது Sage Narada and a cup of oil.
image courtesy---google