Sunday 25 November 2012

பிராட்பேண்ட் ரிப்பேர்


ஒரு சின்ன கற்பனை.

ஒரே ஒரு நாள் நம் இன்டர்னெட் ரிப்பேர்.
கூடவே,செல்போனும்,டிவி யும் வேலை செய்யவில்லை.
நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது.
ஒரே ஒரு நாள் தான்.அதுவும் கற்பனை தானே
என்ன ஆகும்?

 கட்ட வேண்டிய பில்கள் எல்லாம் பெண்டிங்.(EB பில் உட்பட)

போக வேண்டிய புது இடத்திற்கு வழி தேட முடியாது.(இன்டர்னெட்  map இருக்காதே)

புது மனைவி சமைக்கவில்லை.('யு ட்யூப்'  இல்லையே, எப்படி  சமைப்பதாம் என்கிறாள்).
 கணவனுக்கு ஜாலி.(இன்றைக்காவது நல்ல ஹோட்டல் சாப்பாடு சாப்பிடலாம்)

குழந்தைகள் ஹோம் வொர்க் அம்பேல்.(சில பள்ளிகளில் சில வற்றை நெட்டில் தேடியாகவேண்டும் என்கிறார்கள்)
குழந்தைகளுக்கு குஷி.

பெண் / மாப்பிள்ளை தேடுவதில் தாமதம்.
(பல வாலிபர்கள் தப்பிப்பார்கள்.)

ஈ மெயில்,  கொசு மெயில் எதுவும் இருக்காது.
(கை ஒடிந்தாற் போல)

ஆன் லைன் ஷாப்பிங் ஆஃப்

இப்படி பல சிரமங்கள்.

ஆனால்,

இன்று கணவனும், மனைவியும் மனம் விட்டு பேசிக் கொள்கிறார்கள்.ஆசைத் தீர. ஈ மெயில் கொசு மெயில் எதையும் செக் செய்ய வேண்டாம்.

குழந்தைகள் அப்பா முதுகில் 'உப்பு மூட்டை' ஏறிக் கொண்டு அம்மாவிடம்  'பஜ்ஜி செய்'  என்று அடம் பிடிக்கலாம்.

சாப்பிட்டுக்கொண்டே தாத்தா, பாட்டியிடம் ராமர் கதை கேட்கலாம்.(அதான் டிவி  இல்லையே)

தாத்தா, பாட்டியிடம் பழங்கதைகள் பேசலாம்.

நடந்து போய் பில் கட்டலாம்(தினமும் நடந்தால் டயபிடிஸ் கட்டுப்பாட்டில் இருக்கும்.இதய நோய் வராது.டாக்டர்கள் பாடு திண்டாட்டம்)

 வாக்கிங் என்று தனியாக போக வேண்டாம்(பூங்காவிற்கு வரும் காதலர்களுக்காவது  கொஞ்சம்   பிரைவசி கிடைக்கட்டுமே).

பெண்ணிற்கு மாப்பிள்ளை தேட  தூரத்து அத்தை/ மாமாவிற்கு  போன் செய்து பேசி அந்த சாக்கில் அவர்களை குஷிப்படுத்தி நாமும் குஷியாகலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் இல்லை.ஆட்டோ பிடித்து டிரைவரிடம் ஒரு ஐந்து ரூபாய்க்காக பதினைந்து நிமிடம் பேரம் பேசி புடவைக் கடைக்கு சென்று
கணவனை வெளியே இருக்கும் சேரில் உட்கார வைத்து,அழும் குழந்தையை
கையில் கொடுத்துவிட்டு நாம் மணிக் கணக்காய் புடவை செலக்ட் செய்யலாம்.

முக்கியமாக நம் கணினிக்கும், கண்ணிற்கும்,கைக்கும் ரெஸ்ட்.

பக்கத்து வீட்டு மாமியிடம் வம்பளக்கலாம்.புது ரெசிபி தெரிந்து கொண்டு
வீட்டினர்க்கு செய்து கொடுத்து அவர்கள் மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் தவிப்பதை ரசிக்கலாம்.

நிறைய படிக்க ,எழுத நேரம் இருக்கும்

சுருக்கமாக சொன்னால் தனித்தீவாக இல்லாமல் சமுதாயமாக வாழலாம்.

ஆனால்,

என்னுடைய இந்த பதிவு அச்சில் வர இன்டர்னெட் வேண்டுமே.இல்லையென்றால்
பத்திரிக்கைகளுக்கு எழுதிவிட்டு இந்த வாரம் வருமா?அடுத்த வாரம் வருமா?
அல்லது......
இன்னும் நிறைய கஷ்டங்கள்


இது போல் எத்தனை பேருக்கு என்னென்ன  முடியாதோ?

பி.கு: பட உதவி கூகுள்
           வியாபாரத்திற்கோ,லாப நோக்கிற்கோ உபயோகப்படுத்தவில்லை.
கூகுளிற்கும்(பட உதவிக்கு), என் கணவருக்கும்(எடிட்டிங்கில் உதவியதற்காக)
நன்றி.

9 comments:

 1. Ahhahaha...nice. It is difficult without internet/e-mail.

  shiva

  ReplyDelete
 2. எல்லாம் இல்லாத ஒருநாள், எல்லா டிபார்ட்மென்டையும் சபித்துக் கொண்டே பொழுதைப் போக்கி விடுவார்கள். நல்லதெல்லாம் செய்ய நேரமெங்கிருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் சரிதான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   ராஜி

   Delete
 3. ராஜி,

  நினைத்துப் பார்க்க முடியாததை எல்லாம்(அப்படி ஆகிவிட்டோம்) நீங்க நகைச்சுவையாகக் கூறியிருப்பது நன்றாக இருக்கிறது. தொடர்ந்து வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சித்ரா,
   என்னுடைய வலைத் தளத்திற்கு வருகைப் புரிந்து,பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

   Delete
 4. யதார்த்தமாக அன்றாடம் நடக்கக்கூடிய செயல்களை அழகாக நகைச்சுவையாக எழுதி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. வசிஷ்டர் வாயால் பாராட்டுகள்.
  மிக்க மகிழ்ச்சி.
  நன்றி.

  ராஜி.

  ReplyDelete
 6. தனித்தீவாக இல்லாமல் சமுதாயமாக வாழலாம்.

  நல்ல சிந்தனைகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி,

   உங்கள் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி.
   உங்களைப் போன்றவர்கள் என்னைப் போன்ற புது பதிவர்களை பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.

   ராஜி

   Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்