Wednesday 28 November 2012

ஆணிற்கு பெண் சரி நிகர் சமம்

மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாற்றலாகும் வங்கி மேலாளரின்    மனைவி நான்.  மாற்றலாகிப் போகும் ஊர்களின் பாஷை புரிந்து,கலாச்சாரம் தெரிந்து   நாங்கள் அவ்வூருடன் ஒன்றுவதற்குள் திரும்பவும் மூட்டைக் கட்டத்
தொடங்கிவிடுவோம் .

எங்கேயா?

அடுத்த ஊருக்குத்தான்.

அப்படித்தான் ,கர்நாடகாவில் ' தாவண்கெரெ ' என்ற ஊருக்கு வந்தோம்.

அங்கு 'அவுட் அன்ட் அவுட்' கன்னடா தான் பேசியாக வேண்டும்.பெங்களூரில் சில வருடங்கள் குப்பைக் கொட்டி விட்டுத் தான் இங்கு வந்தோம்.அங்கு நாங்கள் குடியிருந்தது 'அல்சூர்'க்கு மிக அருகில்.அதனால்  தமிழை வைத்தே ஓட்டி விட்டேன்.இப்பொழுது மாட்டிக் கொண்டேன்.

ஒரு வாரம் சத்தமில்லாமல் போனது.யாரிடமாவது பேசினால் தானே!
அட்டைப் பெட்டியைப் பிரிக்கவும் சாமான்களை அடுக்கவும் சரியாயிருந்தது.

அன்று என் கணவர் ஆபிஸ் சென்றதும்  வீட்டு பெல் அடித்தது.   பார்த்தால் பக்கத்து வீட்டுப் பெண்மணி.   கதவைத் திறந்ததும் சினேகமாக சிரித்தார்.
நானும் சிரித்து வைத்தேன்.  அதற்குப் பிறகு என்னமோ கன்னடாவில் "பட பட" வென்று மூச்சு விடாமல் பொரிந்து தள்ளினார்.
எல்லாவற்றிற்கும் என் பதில் ஒரு தலையாட்டல் ,அசட்டுத்தனமாய் ஒரு
ஹி........ஹி........ஹி.........தான்.(ஏதாவது புரிந்தால் தானே)

நடுவில்" எஜமானரு", ஆபிஸ் என்று சொன்னது புரிந்தது.
பயந்து போனேன்.நம்மை வீட்டில் சமையல் வேலை செய்பவர் என்று புரிந்துகொண்டாரோ. எஜமானர் ஆபிஸ் போய் விட்டாரா? என்று கேட்கிறார் என்று மட்டும் புரிந்தது.
என் மாமியார் என்னை விட அதிர்ந்து போய்விட்டார் போலிருக்கிறது.
என்னைக் காட்டி "என் மருமகள்" என்று ஜாடையால் புரிய வைக்க முயன்றார்.
புரிந்தது மாதிரி அப்பெண்மணி சிரித்து வைத்தார்.

இரண்டு நாட்கள் சென்றிருக்கும். அந்தப் பெண்மணி மட்டுமல்ல எதிர் வீட்டினரும்  "நிம் எஜமானரு எல்லி?" என்று கேட்க
நான் அதிகமாக குழம்பினேன்.

யாரிடமாவது என் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனம் நிலை கொள்ளாமல் அலைந்தது.

என் மகள் ,"உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர்க்கு நீ ஆயிரம் பொன் பரிசு என்று அறிவித்து விடு" என்று கிண்டலடித்தாள்.

நல்லவேளையாக சீக்கிரமே ஒரு தமிழ் குடும்பத்துடன் நட்பானோம்.
ஆரம்பக்கட்ட  குசல விசாரிப்புகளுக்குப் பிறகு என் மில்லியன் டாலர்
சந்தேகத்தை கேட்டேன்.

அதற்கு அவர்கள் பெரிதாக சிரித்து விட்டு,"எனக்கும், வந்த புதிதில், உங்களைப்
போல் தான் சிறிது குழப்பமாக இருந்து.  நமது வீட்டுக்காரரைத் தான் கன்னடாவில்'எஜமானர்' என்று குறிப்பிடுவார்கள் " என்றார்.

'ஆணிற்கு பெண் சரி நிகர் சமம் ' என்று நினைக்கும் பாரதி படைத்த புதுமைப்பெண்ணாய் இருக்க நினைக்கும் எனக்கு அவர் சொன்ன பதில் ஒரு ஆறுதலாய் இருந்தது.

ஒரு வார்த்தை,
வேறு வேறு மொழி,
வெவ்வேறு அர்த்தம்.

அனைத்தும் புதுமை,
அவ்வளவும் இனிமை.18 comments:

 1. நான் இன்னிக்குதான் உங்க பக்கம் வரேன் நானும் கூட பாஷை தெரியாமல் பட்ட அவதிகளை காமெடி கலந்து என் பழய பதிவுகளில் சொல்லி இருக்கேன் மலரும் நினைவுகள் எனும் தலைப்பில் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அம்மா,
   என்னுடைய வலைத் தளத்திற்கு வருகை புரிந்து கருத்துரை வழங்கியதிற்கு நன்றி.

   ராஜி.

   Delete
  2. இன்னொன்று சொல்து மறந்து விட்டேன்.
   word verification நீக்கி விட்டேன்.யோசனை தெரிவித்தமைக்கு நன்றி.

   ராஜி

   Delete
 2. நகைச்சுவை மிக்க நல்லதொரு அனுபவப் பகிர்வு.

  // "நிம் எஜமானரு எல்லி?" //

  ;))))) அஹ்ஹஹ்ஹா

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  VGK


  பின்குறிப்பு:

  தங்களுக்கு பின்னூட்டமிட ஆசையாக நான் வரும்போது word verification என்று ஒரு ந்ந்தி குறுக்கே வருகிறது. இதை வராமல் தடுத்து விடவும்.

  தொடர்ந்து இது வருமானால் பின்னூட்டக் கருத்தளிக்க வருபவர்களுக்கு, மிகுந்த எரிச்சல் ஏற்படும். யாருமே கருத்துக்கூற மாட்டார்கள்.

  தயவுசெய்து அதை நீக்க ஏற்பாடு செய்யுங்கோ.

  VGK

  ReplyDelete
 3. Replies
  1. நந்தியை இப்பொழுது எடுத்து விட்டேன்.
   தங்களின் வழி காட்டுதலுக்கு நன்றி.

   ராஜி.

   Delete
  2. நந்தியை இப்பொழுது எடுத்து விட்டேன்.
   தங்களின் வழி காட்டுதலுக்கு நன்றி.

   ராஜி.//

   Good. Noted.
   Thanks a Lot.
   vgk

   Delete
 4. ராஜி,

  தங்கள் அனுபவத்தை நகைச்சுவையுடன் எழுதுவது நல்லாருக்கு. தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சித்ரா,

   உங்கள் பாராட்டுக்கு நன்றி.

   ராஜி

   Delete
 5. ஒரு வார்த்தை,
  வேறு வேறு மொழி,
  வெவ்வேறு அர்த்தம்.

  ரசனையான பதிவு ...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ராஜராஜேஸ்வரி.
   உங்கள் பாராட்டுக்கு நன்றி.

   ராஜி

   Delete
 6. Replies
  1. sir,
   vanakkam.
   thankyou for visting my blog and posting your comments.

   raji

   Delete
 7. ஒரு வார்த்தை,
  வேறு வேறு மொழி,
  வெவ்வேறு அர்த்தம்.

  அனைத்தும் புதுமை,
  அவ்வளவும் இனிமை.//

  அருமையாக சொன்னீர்கள். எல்லாம் இனிமைதான்.
  முன்பு தொலைக்காட்சியில்தமிழ் சேனல்கள் அவ்வளவு இல்லாதக்காரணத்தால் எல்லா மொழி படங்களும் பார்ப்போம். அதனால் கொஞ்சம் பிற மொழிகளுடன் பழக்கம் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரிதான். வேற்று மொழி படங்களை பார்ப்பதற்கு இப்பொழுதெல்லாம் நமக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை தான்.

   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

   அன்புடன்,
   ராஜி.

   Delete
 8. தாவண்கெரே பெண்ணே தோசை ரெசிப்பி போடுங்களேன்,ப்ளீஸ்! ;)

  நானும் ஒரு நாலு மாசம் பெங்களூரில் இருந்தேன், ஆனா அது 2007, ஆட்டோ ட்ரைவர்-காய்கறிக்காரர் முதக்கொண்டு எல்லாருமே தமிழ்ல பேசினாங்க. அதனால் மொழிப்பிரச்சனை தெரியலை! :)

  ReplyDelete
  Replies
  1. மஹி,

   அது என்ன தாவணகெரே "பெண்ணே தோசை."ஒரு வருடம் அங்கு இருந்திருக்கிறேன்.
   நீங்கள் எதைக் குறிப்பிடுகிறிர்கள் என்று எனக்குப் புரியவில்லை.ஒரு வேளை ராகி தோசையை சொல்கிறிர்களா ? சொல்லுங்கள் .தெரிந்ததை எழுதுகிறேன்.

   நன்றி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

   ராஜி

   Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்