Tuesday 25 December 2012

லால்குடி



லைப்திவில்  ணிமேதை  பிறந் நாளன்று  பலருடைய  பதிவுகளைப்
படித்தேன்.நான்  மட்டும்  எழுதாமல்  மிஸ்  பண்ணிவிட்டேன்  என்று  குறையாய்  இருந்தது.

 அதனால்   என்ன  ?  ஆருத்ராவை  மிஸ்  பண்ணாமல்    எழுதுவோமே  என்று  உட்கார்ந்தேன்.


ஆருத்ராவைப் பற்றி   எல்லோருக்கும்  தெரியும்.
பிறகு  என்ன  எழுதுவது?
எனக்குத்   தெரிந்தது  எல்லாம் ,  திருவாதிரை  கூட்டும்   களியும்  தான்.

அதை   ஒன்றும்    நான்  சரியாக  செய்வதில்லை   என்பது என்  கணவரின்   குற்றச்சாட்டு.
என்ன   தான்   பார்த்து  , பார்த்து ,   செய்தாலும்   அவரிடமிருந்து    வரும்    பதில்.
களி என்றால்  எங்கம்மா செய்வது தான்.
ஆருத்ரா  தரிசனம்   என்றால்    எங்கள்   ஊர்(லால்குடி)  சப்தரிஷீஸ்வரர்
தரிசனம்   தான்.

களி  செய்வதில்  என்   தோல்வியை  ஒப்புக்  கொண்டேன்.(வேறென்ன  செய்வது?)
சப்தரிஷீஸ்வரரையாவது   தரிசனம்  செய்யலாமே  என்று  நினைத்தேன்.
ஆருத்ரா  அன்று  லால்குடி  போவதற்கு   இன்னும்   அமையவில்லை.

வேறொரு சமயம்   என் துணைவருடன்   லால்குடி   சென்றேன்.

லால்குடி  பாடல் பெற்ற  ஸ்தலம்
தமிழ்நாட்டிற்கு  தலை  காட்ட  மறுக்கும்  காவேரி  பாயும்  (?) ஊர்  திருச்சி. அங்கிருந்து  சுமார் இருபது  கிலோமீட்டர்  தூரத்திலிருக்கிறது  லால்குடி.

திருத்தவத்துறை  என்றும்  பாடல்களில்  குறிப்பிடப்படுவதுண்டு.

திருச்சியிலிருந்து   லால்குடி  செல்லும் வழியெல்லாம்   இரண்டு   பக்கமும்
பச்சை  பட்டுக்  கம்பளம்   விரித்தது   போல்,   கண்ணிற்கு   விருந்து  தான்!   விவரிக்க   வார்த்தைகளே   இல்லை.

வழியில்   வண்டியிலிருந்த படியே   அரங்கனின்   கோபுரத்தைப்   பார்த்து    கன்னத்தில்    போட்டுக்   கொண்டோம்..

சிறிது  நேரத்தில்   லால்குடி   வந்தடைந்தோம்.

முதலில்   கொஞ்சம்   சாப்பிட்டு விட்டு   செல்லலாம் என முடிவு  செய்தோம்.(கோவிலிற்கு  நடந்து  செல்ல   தீர்மானித்திருந்தேன்.) அதனால்   லைட்   டிபன்,  காபி.

ஒரு தோசை   சாப்பிட்டு  முடித்ததும்  சர்வர்  இன்னும்   ஒன்று  சாப்பிடுங்கள்  என்று   உபசரித்து   என்னை   அசத்தினார்.

அவர்   செய்தது  பிஸினஸ்  தான்  .
ஆனால் இவரைப்   போன்ற (  முதலாளிக்கும்   விசுவாசமாய்,  சாப்பிட  வருபவர்களையும்   வினயமாய்   உபசரிக்கும்)  சர்வர்களை  சென்னையில்  பார்ப்பது  அரிதினும்   அரிது.

என்  ஆச்சர்யத்தை,  என்  கரம்  பிடித்தவர்  ஒரு  பெருமிதத்தோடு  பார்த்தார்.
(அவர் ஊர்,  சர்வர்   ஆயிற்றே.)

சிறிது   தூரம்  நடந்ததும்   சப்தரிஷீஸ்வரர்   கோயில்  கோபுரம்  தெரிந்தது.

வணங்கியபடியே   உள்ளே  சென்றோம்.

முதலில் தென்பட்டது  அழகிய  திருக்குளம்.

என்ன அழகு!!  என்ன ஒரு அழகு!!
( ப்ளாஸ்டிக்  கவர்  எதுவும்  மிதக்கவில்லை)

இங்கு தான்  சப்தரிஷிகளும்  மீன்களாய்  பிறந்து,  ஈஸ்வரனை  பூசித்து    சாப   விமோசனம்  பெற்றார்கள்  என்கிறது     ஸ்தல  புராணம்.

படிகளில் சில மணித்  துளிகள்   அமர்ந்திருந்து,  நீரை எடுத்து  தலையில் தெளித்துக் கொண்டு  ஈஸ்வரனை  தரிசிக்கச்  சென்றோம்.

அழகான  சிறிய  லிங்க  வடிவில்  காட்சி  அளிக்கிறார்.
வேண்டிய  வரம்  அளிக்கும்  வரப்பிரசாதி.

கூட்டம்  இல்லாமல் ,நெரிசலில்   சிக்காமல்,  எட்டி  எட்டி  கழுத்து வலிக்க  பார்க்காமல் , நிம்மதியாக , தீப  ஆராத்தியில்   கண்  குளிர  இறைவனை  தரிசித்தோம்.

'காதலாகி  கசிந்து  கண்ணீர்  மல்கி ' சிவனை  வேண்டிக்  கொண்டு  அவன்
மனையாளை   ,சிவகாம  சுந்தரியை    தரிசிக்க  சென்றோம்.

அம்பாளின்  மற்றொரு  பெயர்   ஶ்ரீ மதி.

அவளுடைய  கடைக்கண்  பார்வைக்காக  வேண்டினேன்.

கோவிலை வலம் வந்தோம்.

வலம்  வரும் போது  ஆருத்ரா மண்டபம்  அருகில்   வந்தோம்.

இங்கு தான்  திருவாதிரைக்கு  முதல்   நாள்  இரவு  நடராஜர்   விக்கிரகத்துக்கு
அபிஷேகம்  ஆரம்பமாகும் .

முதல் நாள்   மாலையிலிருந்தே   லால்குடியின்  வள்ளல்  திரு.LNP   அவர்களின்   உறவினர்  இல்லத்திலிருந்து   பால்.,   நெய்,    தயிர்,    தேன்,
கூடை   கூடையாக   பூ,   பெரிய  கிண்ணம்  கிண்ணமாக   சந்தனம், கூடை கூடையாய்  பலவகைப்  பழங்கள்  கோவிலுக்கு   வந்து சேரும்.

லால்குடியிலிருந்தும்,  பக்கத்து  கிராமங்களிலிருந்தும்   மக்கள் கூட்டம் கோவிலில்  அலை   மோதும்.
சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்து  வரும்   மக்கள்  கூட்டத்தால்  லால்குடி  மூச்சுத்  திணறும்.
எள் போட்டால்  விழ  இடமிருக்காது.

முதல்  நாள் இரவு   10.30  மணிக்கு   ஆரம்பமாகும்  நடராஜர்   அபிஷேகம்  மறுநாள்    காலை  நாலு  நாலரை  வரை  நடக்கும்.

அதற்குப்  பிறகு தீப  ஆராதனை முடிந்து  மாலை  சுவாமி  ஒய்யாரமாய்   வீதியுலா  வருவார்.  

இந்த , பரம்பரை   மண்டகப்படி,   வழி    வழியாக  இன்றும்  எந்தக்  குறைவுமில்லாமல்   நடப்பதாக  அறிந்து   கொண்டேன்.

பத்து நாட்கள்  முன்பிருந்தே,    தினமும்  மாலையில்,    ஆடல்,  பாடல், உபன்யாசம்., பல்வேறு  கலைநிகழ்ச்சிகள்    என்று  ஊரே களை கட்டும்.   

இதற்கெல்லாம்     காரணம்  அந்தக்  காலத்திலேயே  திரு.  G.K  போன்ற  அரங்காவலர்களின்   நல்ல  வழி நடத்தல்  தான்    என அறிந்து  கொண்டேன்.

பிறகு   கோவிலின்   நூற்றாண்டைக்  கடந்த  ஸ்தல  விருட்சம்,ஜுரஹேஸ்வரர்  சந்நதி,   ஈஸ்வரனை   வைத்த  கண்  எடுக்காமல்  பார்த்துக்  கொண்டேயிருக்கும்   ஒன்றிற்கு  இரண்டாய்  நிற்கும்    நந்திகள்,சப்தரிஷீஸ்வரர்களின்  சந்நதி, அர்த்தநாரீஸ்வரர்   எல்லாம்  பார்த்து விட்டு   வெளியே  வர  மனமில்லாமல்   வந்தோம்.

ஆருத்ராவைப்  பற்றி  என் கணவர் கூறியதையெல்லாம்  நான்  அந்த  ஆருத்ரா  மண்டபத்தில்   நேரே  நடப்பது போல் உணர்ந்தேன்.

எப்படியும்  இந்த  வருடம்  அந்த இறைவனின்  ஆருத்ரா தரிசனத்திற்கு  சென்று விட வேண்டும்  என்றிருந்தேன்.

ஆனால்  நான் மட்டும்  நினைத்தால் போதுமா?

எல்லாம் வல்ல  ஈசன்  அல்லவா  அதை   தீர்மானிக்க வேண்டும்.

அதனால்  காத்திருக்கிறேன்..........

அவன்  அருள்  பெற!!

                              நமச்சிவாயம்  வாழ்க!   நாதன் தாள்  வாழ்க!




பி.கு....டம்  இணைத்திலிருந்து  எடுத்து.       


21 comments:

  1. கோவிலின் நூற்றாண்டைக் கடந்த ஸ்தல விருட்சம்,ஜுரஹேஸ்வரர் சந்நதி, ஈஸ்வரனை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கும் ஒன்றிற்கு இரண்டாய் நிற்கும் நந்திகள்,சப்தரிஷீஸ்வரர்களின் சந்நதி, அர்த்தநாரீஸ்வரர் எல்லாம் பார்த்து விட்டு வெளியே வர மனமில்லாமல் வந்தோம்./

    சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்க்ள..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பராட்டிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

      நன்றி,

      ராஜி

      Delete
  2. ///அதனால் காத்திருக்கிறேன்..........

    அவன் அருள் பெற!///

    காத்திருப்பவர்கள் விரும்பியதை நிச்சயம் பெறுவார்கள்.

    உங்களின் எழுத்து நடை அழகாக இருக்கிறது

    இன்றுதான் உங்கள் வலைதளத்திற்கு முதன் முதலாக வருகிறேன். நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்

    முடிந்தால் ஃப்ளோவர் கெட்ஜெட் சேர்க்கவும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் , அருமையான பின்னூட்டத்திற்கும்,அடுத்தடுத்து என் வலைத் தளத்திற்கு வருகை புரியப் போவதற்கும் மிக்க நன்றி.

      உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்கள் என்னை ஊக்குவிக்கின்றன.

      நன்றி.
      ராஜி

      Delete
    2. // ஃப்ளோவர் கெட்ஜெட்//
      இது எனக்குப் புரியவில்லை.முடிந்தால் விளக்குங்களேன் ப்ளீஸ்..(நேரம் இருக்கும்போது)

      ராஜி

      Delete
  3. //ஆருத்ரா தரிசனம் என்றால் எங்கள் ஊர்(லால்குடி) சப்தரிஷீஸ்வரர்
    தரிசனம் தான்//

    நீங்களும் திருச்சி தானா? சந்தோஷம். ;)))))

    ஆருத்ரா தரிசனத்திற்கு லால்குடி மிகவும் பிரபலம் தான்.

    >>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,

      உங்கள் வருகைக்கும், அருமையான பின்னூட்டதிற்கும் நன்றி.

      நான் சென்னைப் பெண்மனி. என் கணவர் தான் திருச்சி.
      லால்குடி ஆருத்ரா அபிஷேகம் பார்க்க வேண்டும் என்று மிக ஆவல்.

      நன்றி.

      ராஜி.

      Delete
  4. //திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் வழியெல்லாம் இரண்டு பக்கமும்
    பச்சை பட்டுக் கம்பளம் விரித்தது போல், கண்ணிற்கு விருந்து தான்! விவரிக்க வார்த்தைகளே இல்லை.//

    திருச்சியிலிருந்து லால்குடிக்கு இடைப்பட்ட வாளாடி என் அம்மா பிறந்து வளர்ந்த ஊர்.
    அடுத்து வரும் மாந்துறை எங்கள் குல தெய்வங்களில் ஒன்று [கிராம தேவதை]
    அடுத்து வரும் ஆங்கரை எங்கள் அப்பா தாத்தா முதலிய மூதாதையர்களின் ஊர்.

    மேலும் சில விபரங்கள் “பெயர் காரணம்” என்ற என் பதிவினில் எழுதியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

    மாந்துறை கோயிலைப்பற்றி கீழ்க்கண்ட பதிவினில் அருமையாக எழுதியுள்ளார்கள்.

    http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_31.html

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள்வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

      திருச்சிகாரர்களுக்கே உரிய அள்விட முடியாத ஊர் பாசத்தை உங்கள் பின்னூட்டத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.

      நீங்கள் குறிப்பிட்டுள்ள லிங்க்குகளுக்கு சென்று பார்த்து பின்னூட்டமிடுகிறேன்.
      நன்றி.

      ராஜி

      Delete
  5. ராஜி,

    ஆருத்ரா தரிசனம் என்றால் நினைவுக்கு வருவது கடலூர் மாவட்டத்திற்கு கிடைக்கும் அரசு விடுமுறைதான்.சிதம்பரம் இந்த மாவட்டத்தில் இருப்பதால்.அன்று லால்குடியிலும் விசேஷம் என்பதை உங்கள் பதிவின் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

    கூட்டத்திற்குப் பயந்து நானும் விசேஷ நாட்களில் கோயிலுக்குப் போவதைத் தவிர்த்துவிட்டு சாதாரண நாளில் போய் வேண்டுமட்டும் தரிசித்துவிட்டு வருவேன்.

    காத்திருங்கள்,ஈசனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,

      உங்கல் வருகைக்கும், அருமையான பின்னூட்டதிற்கும் மிக்க நன்றி.

      //காத்திருங்கள்,ஈசனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.//
      இது எனக்கு மிக்க நம்பிக்கையளிக்கிறது.

      மிக்க நன்றி.
      ராஜி

      Delete
  6. நிச்சயம் இந்த முறை உங்களுக்கு
    அங்கு செல்ல வாய்ப்பும் கிடைக்கும்
    எங்களுக்கு படங்களுடன் நல்ல பதிவும் கிடைக்கும்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.
      இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைக்க வாழ்த்தியதற்கும் நன்றி.

      ராஜி

      Delete
  7. மார்கழி மாதம் திருவாதிரை அன்று வரும் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம். நாங்கள் சின்ன வயதில் திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருக்கும்போது ஸ்வாமிக்கு அன்று அதிகார நந்தி வாகனம். வீதி உலா வருவார்.

    என் மாமாவுக்கும் (அம்மாவின் தம்பி) அன்று பிறந்தநாள். அம்மா இரண்டிற்கும் சேர்த்து திவாதிரைக் கழியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.

    பழைய நினைவுகள் முட்டி கோதிக் கொண்டு வருகின்றன, உங்கள் பதிவைப் படித்த பின்!
    ஆருத்ரா தரிசனத்தின் போது எங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் ராஜி!

    ReplyDelete
    Replies
    1. சப்தரிஷீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் போது நம் எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.

      என்னுடைய இந்தப் பதிவு உங்கள் பழைய இனிய நினைவுகளை மலர வைத்ததற்கு மகிழ்ச்சி.
      வருகைக்கும்,அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      ராஜி

      Delete
  8. ஆருத்ராவைப் பற்றி என் கணவர் கூறியதையெல்லாம் நான் அந்த ஆருத்ரா மண்டபத்தில் நேரே நடப்பது போல் உணர்ந்தேன்.//
    மனகண்ணில் ஆருத்ரா தரிசனம் பார்த்து விட்டீர்களா !
    அருமையான பக்தி.
    அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. கோமதி,

      என்னுடைய பழைய பதிவுகளுக்கும் கருத்து கூறியதற்கு
      நன்றி.
      ராஜி

      Delete
    2. Thanks Friend. My native is lalgudi but i miss the my native. i am living in chennai this is for very busy city

      Delete
    3. Thanks Friend. My native is lalgudi but i miss the my native. i am living in chennai this is for very busy city....
      my husband proposed for love in the temple . so my life started in the temple.

      Delete
    4. Thankyou madam for visiting my blog and writing your comments.Iam also happy that my blog kindled your sweet memories.
      I pray Lord Saptharisheeswarar for The good health and prosperity for you and your family.
      Thankyou.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்