Saturday 29 December 2012

உபவாசமா? (உப்புமா)வாசமா?

                                                      

ன்று  என் தோழியை   அவள்   கணருடன்  கோவிலில்  சந்தித்தேன்.

நியாத்திற்கு   குண்டாகியிருந்தாள்.

எப்டியிருக்கிறாய்  என்தற்கு  குலில்  சுத்தேயில்லாமல்  

"எப்டியிருந்த  நான்  இப்டி  கிவிட்டேன்  பார்  ".

ளைப்  பார்த்து  நான்கைந்து   ருங்கள்  கியிருக்கும்.

அப்பொழுதெல்லாம்   ரொம்வும்  ஸ்லிம்  இல்லை  .  னால்  இத்னைப்     பெருத்துமில்லை

வான , அகான,  அமைதியான , தியா  குடும்பம்.

பெண்ணும் பிள்ளையும்   நல்வேலையில்   இருக்கிறார்கள்.

பெண்ணிற்கு  மாப்பிள்ளை   பார்த்துக்   கொண்டிருப்தாக   கேள்வி.

அந்   லையில்  தான்  இப்டியாகி  விட்டாளோ   என்று   ஒரு நிமிடம்   நினைத்தேன்.
லையில்   ளைக்த்   தானே   செய்வார்கள்.என்று   நான் திகைக்கும்  போதே  அவள் வர்   ரம்பித்தார்,.

உங்கள் தோழியிடம்  நீங்களாவது  கொஞ்சம்  சொல்லுங்களேன்.
மாதத்தில்  பாதிநாட்கள்  உபவாசத்திலேயே  கழிக்கிறாள்.என்ன  சொன்னாலும்  கேட்பதேயில்லை.

உபவாசம் இருந்தால்  இளைக்கத்  தானே  செய்வார்கள்.என்று  ஒன்றும் புரியாமல்  விழிக்க  

அவர் தொடர்ந்தார்.

ஒவ்வொரு  மாதமும்  ,கிருத்திகை,  பௌர்ணமி,  சஷ்டி,  என்று  ஒன்றையும்  விடுவதில்லை.

நான்  அசந்து போய்   ஆ............என்றதும்,   அவர் தொடர்ந்தார்,

'நான்  இன்னும்   முடிக்கவில்லை.
வாரா வாரம்  செவ்வாய்   வெள்ளியும்  கூட  உவாச  நாட்ளே."

எப்டி இவ்வு  நாட்கள்   சாப்பிடாமல்  இருக்க  முடிகிது?  என்று   நான்  வியந்தேன்.

தை   விபெரிய   வியப்பு    இத்னை  உவாச்த்திற்கு  பிறகும்  அள் உடம்பு   சைஸ்   எப்டி  இப்டியாது    என்று  விவினேன்.

ற்கு   அவள்   மௌனம்  சாதிக்க  அள்  வர்   உவாசம்   என்றால்  அவள்  என்ன '  அன்னா ஸாரே  'போவா  இருக்கிறாள்?

வாத்தை  உப்புமாவாமாக  அல்வா  ருக்கிறாள்..
ரிசியை  பின்னப் டுத்தி விட்டால்  வித்திற்கு  தோமில்லை  என்று  கூறி  நிறைய  எண்ணெயை  ஊற்றி   அரிசி  உப்புமா  சாப்பிடுகிறாள்.

கூவே   சர்க்ரைப்  போட்டு   ழ  ஜூஸ்  வேறு  நிறைய  குடிக்கிறாள்.
பழமா  சாப்பிட்டால்  நல்து.னால் இப்டி  சர்க்ரை  ஜூஸாகக் குடித்தால்............

து  போதாது என்று  உவாத்ன்று   பாசம்,  கேரி   என்று  தாது  
னிப்பு    கை   கண்டிப்பாக   உண்டு    நைவேத்த்திற்கு   மட்டுமல் 
ளுக்கும் தான்.

னால்  இவள் பச்சை  காய்றி  சாப்பிடுது   வெகுவாக   குறைந்து  விட்து.

னுடைய   லன்  இவள்   உடல்நிலை    பாதிக்கப்  பட்துடன்   எங்ளிமும்    ஒன்றுமில்லா  வித்திற்கெல்லாம்    எரிந்து  விழுகிறாள்.

இப்பொழுது   இவள்   யாபெடிக்  என்று   வருந்தினார்.
தையெல்லாம்  அமைதியாக  னித்துக்   கொண்டிருந்த  தோழியோ
க்கு  ஒன்றுமில்லை   இவர்   இப்படித்தான்   என்று   சர்வ  சாமா
சொன்னாள்

ளுக்கு   புரிய   வைக்க   முற்சித்தேன்.
வாசம்   அவோடு   இருந்தால்   உடலுக்கும்   திற்கும்    அளவில்லா  நற்லன்ளைக்  கொடுக்கும்  .

வை   மிஞ்சினால்   அமிர்மே   ஞ்சு தான்.
வாசம்   மட்டும்   விதிவிலக்கா  என்ன?

நான்  கூறிற்கெல்லாம்   மண்டையை   ண்டையை   ஆட்டி  விட்டுச்  சென்றாள்.
னால்   நான்  சொன்தை   சீரிசாக   எடுத்துக்   கொண்டாற்   போல்   தெரிவில்லை.

நானும்    ஒரு   ஐந்து   று   ருத்திற்கு   முன்பு ரை   ஷ்டி   விதம்   இருந்தவள்    தான்.
லை  சுற்றல்   என்று    டாக்ரிடம்    சென்ற  போது   ,
'NO   FEASTING  ,  NO FASTING'    என்று  கூறி விட்டார். 
தையும்   அளிடம்   கூறி விட்டேன்.

டாக்டர்   சொன்தை வள்   ரியாக  புரிந்து   கொள்ள   வேண்டுமே!

பி.கு.  பட உதவி  கூகுள்            

44 comments:

 1. அளவை மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு தான்.
  உபவாசம் மட்டும் விதிவிலக்கா என்ன?

  விழிப்புணர்வு தரும் பகிர்வுகள் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி,

   உங்கள் வருகைக்கும்,விரைந்து பின்னூட்டமிட்டதற்கும் மிக்க நன்றி.
   உங்களைப் போன்றவர்களின் வருகையும் பின்னூட்டமும் மிகுந்த மகிழ்ச்சியும், ஊக்கமும் கொடுக்கின்றன.

   நன்றி,
   ராஜி

   Delete
 2. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
  அளவை மிஞ்சினால் உணவு மட்டுமல்ல
  உபவாசம் கூட நஞ்சுதான்
  சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார்,

   உங்களது வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

   ராஜி

   Delete
  2. வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் உங்களின் தோழியைப் போலவே தான். ஆனால் உபவாசம் என்ற பெயரில் ஊரை ஏமாற்றுவது இல்லை.

   எனக்கு வாய்க்குப் பிடித்ததை ஒரு பிடி பிடித்து விடுவேன்.
   அதனால் என் எடை 92-93 கிலோ உள்ளது. என் உயரத்திற்கு ஒரு 80 கிலோ மட்டுமே இருக்க வேண்டுமாம். என்ன செய்வது?

   வாயைக்கட்டி வாழத்தெரியவில்லையே!

   அப்படியெல்லாம் வாயைக்கட்டி பின் எதற்காக வாழ்வதாம்.

   என் கட்சியைச்சேர்ந்த தங்கள் தோழிக்கு என் வாழ்த்துகளையும் சொல்லி கீழ்க்கண்ட என் பதிவினையும் படித்து, கவலைப்படாமல் இருக்கச்சொல்லுங்கள். கவலைப்படுவதால் காலணா பிரயோசனம் இல்லை என்பதே உண்மை.

   தலைப்பு: “உணவே வா !..... உயிரே போ !!” [நகைச்சுவை]

   இணைப்பு:
   http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

   தாங்களும் படித்து விட்டு கருத்து எழுதலாம்.

   அன்புடன்
   VGK

   Delete
  3. வைகோ சார்,

   //கவலைப்படுவதால் காலணா பிரயோசனம் இல்லை என்பதே உண்மை.//

   கவலைப் படாமல் இருக்க முடியவில்லையே சார்.
   உங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி.

   உங்கள் லிங்கிற்கு சென்று அவசியம் கருத்துரைப் பதிகிறேன்.
   கண்டிப்பாக நல்ல நகைச்சுவைப் பதிவாய் தானிருக்கும்.
   நன்றி.
   ராஜி

   Delete
 3. ராஜி,

  சிந்திக்கச்சொல்லும் கட்டுரையை உங்க நடையில்,அழகா எழுதியிருக்கீங்க. இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

  "அரிசியை பின்னப் படுத்தி விட்டால் விரதத்திற்கு தோஷமில்லை"___ 'பின்னப் படுத்திவிட்டால்',இது என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. சித்ரா,
   "அரிசியை பின்னப் படுத்தி விட்டால் விரதத்திற்கு தோஷமில்லை" என்றால் அரிசியை உடைத்துவிட்டால் அதற்குப் பிறகு உப்புமா செய்து உபவாசத்திற்கு சாப்பிட்டால் பாதகமில்லை என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
   உங்கள் பாராட்டுக்கு நன்றி.

   ராஜி

   Delete
 4. எங்கள் ஊரில் ஒரு பாட்டு உண்டு:

  ஆச்சே மனைய சுப்பம்மனிகே ஏகாதசி உபவாச - ஏனோ சொல்ப தின்தாளந்தே உப்பிட்டு, அவலக்கி பாயச!

  (பக்கத்துவிட்டு சுப்பம்மா ஏகாதசி உபவாசம் - ஏதோ கொஞ்சம் சாப்பிடுவாள் - உப்புமா, அவல் பாயசம்!)
  இந்தப் பாட்டு முழுக்க காலை, மதியம், சாயங்காலம், இரவு - வேளைதோறும் - அவள் விதம் விதமாகத் தின்னும் பண்டங்களின் பட்டியல் வரும்!

  உடல் குறைய வேண்டும் என்கிற விழிப்புணர்வு அவரவருக்கே வர வேண்டும். பிறர் சொல்லிப் புரிய வைக்க முடியாது!

  ReplyDelete
  Replies
  1. ரஞ்சனி,

   இந்தப் பாட்டு நன்றாக இருக்கிறதே! முழுப் பாட்டையும் முடிந்தால் எழுதுங்களேன்.ரசிக்கலாம்.

   உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
   ராஜி

   Delete
 5. No fating and no feasting are really golden words.Nice write.

  ReplyDelete
  Replies
  1. sir,

   Thankyou very much for your nice words.

   Thankyou,

   Rajalakshmi

   Delete
 6. கூடவே சர்க்கரைப் போட்டு பழ ஜூஸ் வேறு நிறைய குடிக்கிறாள்.
  பழமாக சாப்பிட்டால் நல்லது.ஆனால் இப்படி சர்க்கரை ஜூஸாகக் குடித்தால்...//

  பழ ஜூஸ் எல்லாம் சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்.

  விழிப்புணர்வு பதிவு.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கோமதி,

   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி .

   ராஜி.

   Delete

 7. வணக்கம்!

  நல்ல கருத்தை நவின்றுள்ளாய்! மின்னுகிற
  வெல்லும் வலையை விரித்து!

  ReplyDelete
  Replies
  1. ஐயா ,
   உங்கள் முதல் வருகைக்கும் கவித்துவமான பாராட்டுரைக்கும் நன்றி .

   ராஜி

   Delete
 8. நல்ல கருத்துள்ள பகிர்வு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

  பாராட்டுகள்......

  ReplyDelete
 9. நன்றி வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

  ராஜி

  ReplyDelete
 10. நகைச்சுவையோடு ஒரு யதார்த்தமான சங்கதியை உங்கள் பதிவு, பதிவு செய்துள்ளது.

  இந்த வகையில் விரதம் இருப்பது ஒரு வகை என்றால், மற்றொரு வகை இதை விட சுவாரஸ்யமானது... ஆபத்தானது ...

  ஒரே சமயத்தில் வயிறு புடைக்க சாப்பிடக் கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் சொன்னார் என்ற அடிப்படையில் உறவுக்கார பெண்மணி ஒருவர் டைம் செட்யூல் போட்டு என்ன செய்தார் தெரியுமா? காலை 8 மணி அளவில் ரெண்டு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி .... (பசியை அடக்குமாம்). ஆனால் உடலுக்கு திட உணவு தேவை. அதனால் சுமார் ரெண்டு மணி நேரத்தில் கொஞ்சம் களைப்பு தெரியும். சுமார் 10 டு 10.30 மணி அளவில் வெறும் ஒரு ஆறு இட்லி (சின்ன சைஸ்தான்)... கடலை சட்னி அல்லது சாம்பார்... ஒரு ஓரமா இதயம் நல்லெண்ணெய் ஊற்றி பருப்பு பொடி .... இதை சாப்பிட்டு ஏப்பம் விடுகிற நேரம் கிட்டத்தட்ட மணி 12 நெருங்கி விடும்.. அந்த நேரத்தில் நமநம என்று இருக்கும் வாய்க்கு சூடா வெஜிடபள் சூப். அதில் சுவீட்கார்ன் பெப்பர் சூப் பிரசித்தம். பிறகு மதியம் சுமார் 1.45 டு 2.15 மணி அளவில் 1 கப் சாதம் (அளவு கம்மியாம்), அதில் கொஞ்சம் நெய் ஊற்றி பருப்பு பொடி, பிறகு கீரைக் குழம்பு... ரசம்.. தயிர்.. ஆனா சாதத்துக்கு முன்னாடி கண்டிப்பா ரெண்டு அல்லது மூணு சப்பாத்தி, தொட்டுக்க தால் பிரை. மாலை சுமார் 5 மணி அளவில் குடும்பத்தினருடன் ஆசையாக ரெண்டு பன் பட்டர் ஜாம் அல்லது மீண்டும் 2 டம்ளர் ஓட்ஸ் கஞ்சி.... சுமார் 8 டு 9 மணிக்கு மீண்டும் சப்பாத்தி ... கொஞ்சம் அளவு பெரிதாக மூன்று. அல்லது தோசை. ஒரு செவ்வாழை பழம் (பெரிய சைஸ்), சுண்டக் காய்ச்சிய பால் ஒரு டம்ளர்... பிறகு படுக்கை.... நடு இரவில் திடீரென பசித்தால்.. கைவசம் மேரி பிஸ்கட் படுக்கை அறையில் இருக்கும்....

  ReplyDelete
  Replies
  1. சார்,
   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
   உங்கள் உறவுப் பெண்மனி தன உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளட்டும்.
   எப்படி இவ்வளவையும் ஒரு நாளும் சமைக்கிறார்கள்?

   பார்த்தீர்களா, நன்றி சொல்வதற்கு பதிலாக உங்கள் பின்னூட்டம் என்னைப் பின்னூட்டமிட ஆரம்பித்து விட்டேன்.

   அழகாய் பாராட்டி, கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.
   ராஜி

   Delete

 11. வணக்கம்!

  பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
  எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

  ReplyDelete
  Replies
  1. ஐயா,

   நன்றி.உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

   ராஜி

   Delete
 12. உபவாசம் உபத்ரவமாகிவிடத்தை நல்ல தான் சொல்லி இருக்கீங்க தோழி, உபவாசம் எப்படி இருக்கனும் தெரியாம இருந்த இப்படி தான் ஆகும்
  உங்களுடையா மற்ற பதிவுகளும் நன்றக இருக்கு .

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

   ராஜி.

   Delete

 13. திரு ரமணியின் பதிவு ஒன்றுக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டம் படித்தேன். என்னை நானே உணர வை என்னும் என் பழைய பதிவை நீங்கள் படித்தால் என்ன பின்னூட்டம் இடுவீர்கள் எனும் கற்பனை மகிழ்ச்சி தருகிறது என்று நான் கருத்து எழுதியிருந்தேன்.
  வாழ்த்துக்கள். உபவாசம் இருப்பவர்கள் பலகாரம் சாப்பிடலாம் என்பார்கள். பலகாரம் பல ஆகாரமாய்விடுவதுதான் நடப்பு.

  ReplyDelete
  Replies
  1. GMB சார்,

   உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
   உங்கள் கவிதையைப் படித்துக் கருத்தும் எழுதிவிட்டேன்.

   நன்றி

   ராஜி

   Delete
 14. எதார்த்தமான பதிவு

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்செல்வி.

   ராஜி

   Delete
 15. நான் ஒன்றும் பெரிய சமையல் ராணியெல்லாம் இல்லை.
  இருந்தாலும் உங்கள் தளத்திற்கு வந்து பங்கு பெறுகிறேன்.

  ReplyDelete
 16. உங்க தோழி அரிசி உப்புமாகாகவே உபவாசம் இருக்காங்களோ??

  ReplyDelete
  Replies
  1. உபவாசம் என்கிற பெயரில் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்கிறாள்.

   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சமீரா

   Delete
 17. // அப்படியெல்லாம் வாயைக்கட்டி பின் எதற்காக வாழ்வதாம்.
  கேட்பதாக இல்லை. கட்டுப்படுத்த வேண்டும். //

  மேலே வை.கோபாலகிருஷ்ணன் சார் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்! நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட பொருத்தமான படம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி .
   தொடர்ந்து வாருங்கள்.

   Delete
 18. பதிவு அருமை!! ஆனாலும் தன்னைப்பற்றிய விழிப்புணர்வு தனக்குத்தானே ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டும். அது இல்லாத போது அடுத்தவர் சொல்லும் நல்லவைகளை மனதில் பதிய வைத்துக்கொள்ளவாவது மனப்பக்குவமிருக்க வேண்டும்! இவை இரன்டும் இல்லாதவர்களிடம் நாம் எத்தனை சொன்னாலும் அது விழலுக்கிரைத்த நீர் தான்!

  ReplyDelete
  Replies
  1. ஆம். நீங்கள் சொல்வது உண்மை தான். நான் சொன்னது அவளுக்கு உரைத்ததோ என்னவோ? நாம் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்று செய்துவிட்டேன்.
   நன்றி உங்கள் வருகைக்கு, கருத்துக்கு.

   Delete
 19. சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. இந்த பதிவை பகிர்வதன் மூலம் நானும் எனக்கு வாய்ப்பளித்த இந்த நாட்டுக்கு எனக்களித்ததின் ஒரு பகுதியை திருப்பித் தந்துவிட்டேன் என்ற மனநிறைவு அடைகின்றேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 21. வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள் அன்பரே

  ReplyDelete


 22. உங்கள் பின்னூட்டத்தை எங்கள் ப்ளாக் வலையில் பார்த்தேன்.

  கூடவே உங்கள் பெயரும் என் அண்ணியின் பெயருடன் ஒத்துப்போயிருந்ததால், உங்கள் வலைக்குச்
  சென்று பார்க்கலாம் என்று கூகிளில் பார்த்தால்,

  உப்புமா வாசமா உபவாசமா என்று எடுத்த எடுப்பிலேயே நகைச்சுவை மிளிர்ந்தது.

  அத்துடன் ஒரு பத்து அல்லது பதினைந்து வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்தது.

  நானும் என் மனைவியும் அம்பத்துரிலிருந்து என் அண்னன் வீடு மயிலாப்பூருக்குச் சென்றிருந்தோம்.
  அடுத்த நாள் அங்கு ஏதோ ஒரு ஃபங்ஷன்.

  அன்று இரவு என் அண்ணி எங்களிடம் , நீங்கள் இரவு என்ன சாப்பாடா, டிஃபனா என்று கேட்டார். தொடர்ந்து
  இன்னிக்கு செவ்வாய்க்கிழமை, உங்கள் அண்ணா இன்னிக்கு உபவாசம், அதனாலே நானும் உபவாசம் ,
  என்றார்.

  என் மனைவி முந்திக்கொண்டு, அதெல்லாம் உபவாச சமாசாரம் எல்லாம் எங்களுக்கு சரிப்படாது. எங்களுக்கு
  இந்த மாதிரி பட்டினி உபவாசங்களில் நம்பிக்கையும் அவ்வளவா கிடையாது என்றோம்.

  அப்படியா, நீங்கள் சாப்பிட்டு விடுங்கள். காலையில் செய்த சாதம், சாம்பார், பொறியல், அவியல் எல்லாமே இருக்கிறது.
  என்றார்.

  இரவு நேரம் வந்தது. அண்ணாவும் என்னைப் பார்த்தார். என்ன நீ சாப்பாடு தானா என்றார். ஆமாம் என்றேன்.ஒரு
  அபாலஜெடிக்காக.

  நான் டிஃபன் மட்டும் தான். வாரத்திற்கு ஒரு நாளாவது விரதம் இருப்பது நல்லது அல்லவா என்றார்.

  நான் தலையை மட்டும் ஆட்டினேன்.

  அவரது விரத உணவு வந்தது.
  ஒரு மாதிரி மிளகு ரசம். அபிடைசராம்.
  முதலிலே பாசிப்பருப்பு கஞ்சி. ஏலக்காய், மிந்திரி, பாதாம்பருப்பு போட்டு.
  அதற்கப்பறம் ரவா உப்புமா, அதுலேயே பாதி ரவாவில் கேசரி.
  அத்ற்குப்பிறகு ஒரு ஆப்பிள். இரண்டு வாழைப்பழம்.
  ஒரு டம்ளர் பாதாம்பால்.

  அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன.
  எனக்கு வாழை இலை போட்டார் மன்னி.
  மன்னி, என்றேன். என்னடா என்றார்.
  அண்ணாவைப் பார்த்தபின் தான் எனக்கும் விரத மகிமை புரிந்தது.
  இன்னிக்கு நானும் விரதம் என்றேன்.

  நானும் என்றாள் என் மனைவி.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in
  www.vazhvuneri.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. சார்,
   உங்கள் முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

   உங்கள் விரிவான கருத்துரை மிக மிக சுவாரஸ்யம் .உங்கள் அண்ணன்
   போல விரதம் இருப்பதனால் எனக்கும் கூட உபவாசம் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

   //அவரது விரத உணவு வந்தது.
   ஒரு மாதிரி மிளகு ரசம். அபிடைசராம்.
   முதலிலே பாசிப்பருப்பு கஞ்சி. ஏலக்காய், மிந்திரி, பாதாம்பருப்பு போட்டு.
   அதற்கப்பறம் ரவா உப்புமா, அதுலேயே பாதி ரவாவில் கேசரி.
   அத்ற்குப்பிறகு ஒரு ஆப்பிள். இரண்டு வாழைப்பழம்.
   ஒரு டம்ளர் பாதாம்பால்.//

   அது என்ன// அபிடைசராம்//? புரியவில்லை.
   நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தாலே சாப்பிடத் தூண்டுகிறது.
   தொடர்ந்து வாருங்கள் சார்.

   Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்