Thursday, 23 May 2013

ஸ்மார்ட் ராசி

வெள்ளிகிமை அன்று  கோவிலுக்கு  போய்   கொண்டிருந்தேன். அமைதியாய்  என் கைப்பிடிக்குள்   இருந்த  மொபைல்  " உயிரே .....
உயிரே.......என்று பாடத் தொடங்கியது.

அவசரமாய் எடுத்து பார்த்தால் " Rasi  Calling ".

" சொல்லுடி ".

" நான் பேசுவது கேட்கிறதா ? "

" கேக்குதே " என்றேன் .

" நல்லா   கேக்குதா "

" இது  என்னடா தொல்லை? ம்.. ரொம்ப நல்லா கேக்குது " என்று நான்  சலித்துக் கொள்ள
அவளோ ." என் பையன்  அன்னையர்  தினத்திற்கு எனக்கு புது போன்  வாங்கிக் கொடுத்திருக்கிறான் "
நான் நாளைக்கு வீட்டிற்கு வந்து  காட்டுகிறேன். " என்று முடித்தாள்  ராசி.

மறு நாள் மாலை வந்தாள்   samsung போனுடன்.

" ஓ ....ஸ்மார்ட்  டச்  போனா? "  கேட்டேன்.

"ஆமாமடி  , என்னைப் போலவே என் போனும் ஸ்மார்ட் "  பெருமையடித்துக் கொண்டாள்.

"எனக்குத் தெரியாதா  நீ எவ்வளவு ஸ்மார்ட் ?"
(மனதிற்குள்   சரித்திரம் படைத்த ராசி   பதிவு  வரி , வரியாக ஓடியது.)

சட்டென்று  அவள்  போன்  "கிணிங் கினிங்  "என்று இனிமையாய்  இசைக்க
ராசியோ அதையே  முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் .

" ஏய் போனை  எடுத்துப் பேசு, யார் போனில்? "என்றது நான்.

ஒரு பதிலும் இல்லை.

எட்டிப் பார்த்தேன்." Husband calling , Husband calling " என்று அலறுவது  போல்  ப்ளாஷ்  அடித்தது.

" என்ன ஆயிற்று? ஏன்  போனை எடுக்கவில்லை?  " என்றேன்.

" அதுவா....... எப்படி எடுப்பது என்பது மறந்து விட்டது "என்றாளே  பார்க்கலாம் .

"என்ன மறந்து விட்டதா?......."

" சரி , இப்ப என்ன செய்வதாக உத்தேசம் ? விஷ்ணுவிற்கு  அவசரமாக ஏதாவது
சொல்ல வேண்டுமென்றால்............"முடிக்கவில்லை நான் .

சட்டென்று கைப்பைக்குள் இருந்த பழைய   போனை எடுத்து கணவருடன் பேச ஆரம்பித்து விட்டாள் . " பக் " என்று சிரித்து விட்டேன்.சிரிப்பை அடக்க முடியவில்லை.
( இதில் இவளும்  இவளுடைய போனும் " ஸ்மார்ட்டாம்  ஸ்மார்ட்.")

"சரி . contact list எல்லாம் யார்  லோட்  செய்தது "என்று கேட்டதற்கு  எல்லாம்  தன்  மகன் செய்து  தந்து விட்டான் என்றாள் கர்வமாக .
(" இதிலொன்றும் குறைச்சலில்லை   " நினைத்துக் கொண்டேன்.)

" சரி அவனிடமே கேளேன்  எப்படி போனை எடுப்பது "   என்றேன்.

" இரு என்னை தொந்திரவு செய்யாதே "என்று எரிச்சல்  பட்டுக் கொண்டு சிறிது நேரம் யோசித்து பின் ,
"ஞாபகம்....  வந்திருச்சு....... " என்று கமலஹாசன்  மாதிரி  ராகம் பாடினாள் .

"என்ன?" என்றேன்
" கால் வந்தால் swipe செய்ய வேண்டும் ," என்று சொல்லிக் கொண்டே  ,

அப்பொழுது பார்த்து வந்த போனிற்கு  பதிலுரைத்தாள்.
யார் என்றதற்கு  "ஒரு பொண்ணு  கிரெடிட்  கார்ட் வாங்கிக்கிறையா"  என்று கேட்டார்  என்றாள் .

"இதை  சரியாக எடு. கணவர்  கூப்பிட்டால்  கோட்டை விடு "நினைத்துக் கொண்டேன்.

" உன்  நம்பரிலிருந்து கால் செய்யேன் எனக்கு  ". என்று சொன்னேன் 
(எனக்கும் இந்த ஸ்மார்ட்  போனை உபயோகித்துப் பார்க்க ஆசை வந்தது)

என் நம்பரை தன்  விரல்களால்  தொட்டாள் .

நானும் என் மொபைலையே  பார்த்துக் கொண்டிருந்தேன்.

ம்ஹூஉம்.........

என்ன ஆச்சு என்று எட்டிப் பார்த்தால், " you dont have an internet connection  to connect to vonage "
என்றிருந்தது.

"இது  என்ன? "

என் பையன் தான்  சொன்னான் ." நீ    பைசா செலவில்லாமல்  இன்டர்நெட் மூலமாக  பேசலாம் "

" ஆனால் என்னுடன் நேற்றெல்லாம் பேசினாயே internet இல்லாமலே   "

" அது தான் எனக்கும்  புரியவில்லை "குழம்பினாள்   ராசி.

நானும் போனை வாங்கி  எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒரு கால்  கூ ட செய்ய முடியவில்லை.என் விரல் பற்றி எரிந்தது தான் மிச்சம். நான் என் தோல்வியை  ஒப்புக் கொண்டு அவளிடமே அவள் ஸ்மார்ட் போனை  கொடுத்தேன்.

என்ன செய்வது ? சரி வா  சூடாக தோசையாவது  சாப்பிடலாம் வா என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனேன்.

" டிங் டாங் "  

காலிங் பெல் ஒலித்தது.

கதவைத் திறந்தால் ,

கீழ வீட்டு மகேஷ்., சாப்ட்வேர் இஞ்சினியர் . "ஆண்டி, அம்மா சாவி கொடுத்தார்களா? என்றான்.

இல்லையே  !

" சரி, அம்மா வரும் வரை உட்காரு "  என்று சொல்லி விட்டு உள்ளே போனேன்.

அவன் உட்கார்ந்து  டிவி பார்த்துக் கொண்டிருக்க , ராசியோ  புது போனைப் பற்றிப் புலம்பி தீர்த்தாள் .

பாவமாய் இருந்தது அவளைப் பார்க்க .

மகேஷிடம் கேட்டுப் பார்க்க  முடிவு செய்து அவனிடம் இந்தப் போனைக் கொடுத்தோம்.

அவனும் முயற்சி செய்து பார்த்து விட்டு  "எனக்குத்  தெரியவில்லை . samsung service centre ற்கு  கொண்டு போனால்  சரியாவதற்கு  சான்ஸ் இருக்கு " என்றான், டாக்டர்   "பேஷண்டை  அட்மிட் செய்யுங்கள் சரியாகி விடும் "  என்பது போல்.

அதற்குள் அவன் அம்மா  வர ,அவன் சென்றான்.

இதுவும் தோல்வியா?

அதற்குள் ராசி,"  இந்த சின்னப் போனை சரி செய்ய முடியல இவனெல்லாம் என்ன  ஸாப்ட் வேர்    இன்ஜினியர் ? " என்று அர்ச்சித்து விட்டு  சுடசுட காபியைக் குடித்தாள் .

போய்விட்டு வருகிறேன் என்று விடை பெறும் சமயத்தில்  மீண்டும்

"டிங் டாங்"

மீண்டும் மகேஷ்.
" ஆண்டி , இப்பொழுது தான் என் நண்பனிடம்  உங்கள் போனைப் பற்றிய தகவலை சொன்னேன்.அவன் எப்படி சரி செய்வது என்று சொன்னான்". 

"நான்  மீண்டும்  முயற்சி செய்யட்டுமா ? "என்று பவ்யமாய் கேட்க , எனக்கு ராசியின் அர்ச்சனை நினவு வந்தது.

"உங்கள் போனை கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி  ஒரு ஐந்து நிமிடம் இங்கேயும் அங்கேயுமாக  கைகளால்  ஸ்வைப்  செய்து,    சரி செய்தான் .

ஒரு கால்  வேறு செய்து  சரியாகி விட்டது என்றன்.

" ரொம்ப  தாங்க்ஸ் " என்று பல தடவை மகேஷிற்கு நன்றி சொல்லத் தவறவில்லை  ராசி .

பிறகு   தன்  கணவரை  போனில் கூப்பிட்டு சொன்னாளே  பார்க்கலாம் , .
" அப்பாடி ஒரு வழியாக  சரி செய்து விட்டேன். நான் ஸ்மார்ட் தானே  " என்றாளே  பார்க்கலாம் .

என்ன......நீ சரி செய்தாயா ........அசந்து போனேன்.

 நிஜமாகவே நீ ஸ்மார்ட் தான்.(பேசுவதில்)......image courtesy--google.

42 comments:

 1. மிகவும் ஸ்மார்ட்டான நகைச்சுவைப்பதிவு கொடுத்து அசத்திட்டீங்க! யூ ஆர் டூஊஊஊஊஊ ஸ்மார்ட்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வைகோ சார்,உங்கள் பாராட்டிற்கு.
   // யூ ஆர் டூஊஊஊஊஊ ஸ்மார்ட்.//
   யார் தருவார் இந்தப் பாராட்டு?
   மிக்க நன்றி வைகோ சார்.

   Delete
  2. ”யா ர்
   த ரு வா ர்
   இ ந் த
   அ ரி யா ச ன ம் ........ ! “

   என்ற பாடல் போலல்லவா சொல்லியுள்ளீர்கள். ;)))))

   தங்கள் நன்றிக்கு நன்றிகள்.

   Delete
 2. நிஜமாகவே ஸ்மார்ட் தான்.(பேசுவதில்)......

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

   Delete

 3. ஸ்மார்ட் ஃபோனுக்கு ஏற்ற ஸ்மார்ட் ராசி. ! தொலை பேசியாகக் கை பேசி வந்தாலும் அதனுள்ளே இண்டெர்நெட் போன்ற ஏகப்பட்ட வசதிகள் செய்தால் உபயோகிக்க தடுமாற்றம் ஏற்படுவது இயற்கையே அல்லவா. எனக்கு என் மக்கள் ஒரு டாப்லெட் வாங்கிக் கொடுத்தார்கள். இருந்தாலும் என் டெஸ்க் டாப்பில் எழுதுவதும் படிப்பதும்தான் எனக்குப் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி GMB சார்.

   Delete
 4. ராசி என்னதான் ஸீன் போட்டாலும் உங்க கிட்ட இல்ல மாட்டிக்கிறாங்க... ஹா ஹா... சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. ராசி ஸீன் போடும்போதெல்லாம் என்னிடம் மாட்டுவதில்லை. அவள் என்னிடம் ஸீன் போடும்போது பதிவாக்கி மாட்டிவிடுகிறேன்.
   நன்றி உஷா படித்து ரசித்ததற்கு.

   Delete
 5. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 6. உங்கள் தோழி நிஜமாகவே நீ ஸ்மார்ட் தான்.(பேசுவதில்)...
  ஸ்மார்ட் போன் பழகி கொள்ளும் வரை கஷ்டம் தான்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி உங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும்.

   Delete
 7. செம ஸ்மார்ட் போங்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஒரே வரியில்" நச்" கமென்ட் கொடுத்திருக்கும் உங்களுக்கு அன்றி தனபாலன் சார்.

   Delete
 8. (" இதிலொன்றும் குறைச்சலில்லை " நினைத்துக் கொண்டேன்.)இப்படியும் சிலபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா. இப்படியும் சில பேர் இல்லை பலர் இருக்கிறார்கள்.
   நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

   Delete
 9. அருமையான நகைச்சுவை பதிவு.வாழ்த்துகள் தோழி !!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி உங்கள் கருத்துக்கு.
   உங்கள் வலையை follow செய்வதற்கு நிறை கேள்விகள் கேட்கிறது உங்கள் வலைப்பூ. மெயிலில் தொடர வசதியிருக்கிறதா?அன்றி

   Delete
 10. ஹா ஹா ஹா.... இப்போதுள்ள சின்னப்பையன்கள்தான் ரொம்ப ஸ்மார்ட்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து சிரித்ததற்கு நன்றி சார்.

   Delete
 11. Ha ha ha. That's nice post laced with humor.To exist in this world, one need to know how to sell one's smartness to others.

  ReplyDelete
  Replies
  1. yes. you are right.. We should market our smartness to survive.
   thanks for visiting my blog and commenting on it.

   Delete
 12. :) ராசியின் அலட்டல்கள் ஜோர்! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகி, உங்கள் கருத்துக்கு.

   Delete
 13. ஸ்மார்ட்போன் படுத்தும் பாடு!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாண்டியன் உங்கள் கருத்துக்கு.

   Delete
 14. நானும் என் பெண் வாங்கிக் கொடுத்தால்
  என்று டெப்லெட்டை வைத்துக் கொண்டு
  இந்த அவஸ்தியெல்லாம் பட்டது
  என் நினைவுக்கு வந்து சிரித்துக் கொண்டேன்
  சொல்லிப்போனவிதம் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் அவஸ்தைப் பட்டீர்களா?
   ஸ்மார்ட் போன் அவஸ்தை ஒரு தொடர்கதையா?
   நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.

   Delete
 15. ஹா...ஹா.... ராசி மாதிரி மனிதர்கள் இருப்பதும் நிஜம். ஸ்மார்ட் ஃபோனின் கஷ்டங்களும் நிஜம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

   Delete
 16. சமீபத்தில்தான் நான் ஸ்மார்ட் போன் வாங்கினேன் , அதை பயன்படுத்தத் தெரியாமல் மரியாதையாக (திருதிரு) விழித்து இப்போது கற்று விட்டேன் என்கிற ராஜரகசியங்களை எப்படியோ ஒற்றர் மூலம் அறிந்து அதை ராசியின் பேரில் பதிவேற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஹி... ஹி...!

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய ராஜ ரகசியங்களைத் தெரிந்துகொண்ட என் ஒற்றர்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர்களால் தான் ஒரு பதிவு கிடைத்தது.ஆனால் அதற்காக எல்லோரும் "ராசி வந்து விட்டாளா?.... கூடவே இம்சையும் " என்று முணுமுணுத்தால் நானோ என் ஸ்பைவேரோ( spyware) யாரும் பொறுப்பில்லை. (சும்மா தமாஷ் தான்)

   உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கணேஷ் சார்.

   Delete
 17. ராசியின் சாமர்த்தியத்தை சுடச்சுட படிக்காமல் விட்டுவிட்டேனே.படிக்கவே ஜாலியா இருந்துச்சு.

  இன்னொரு பதிவும் வேண்டுமே!தெரியாதப்பவே இந்த போடுபோடும் ராசி இப்போது எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டு என்னென்ன அலட்டல் பன்றாங்கன்னு நீங்களே ஒரு எட்டு போய்ட்டு வந்து (இப்போ அவங்க வரமாட்டாங்க,ஸ்மார்ட் ஃபோனுடன் அவ்வளவு பிஸி) ஒரு பதிவு போட்டுடுங்க.

  ReplyDelete
  Replies
  1. சரி சித்ரா. அவளைப் பார்க்கப் போகிறேன்.
   ராசியைப் பார்த்தால் போலவும் ஆச்சு. அவள் பண்ணும் அலப்பரையையும் ஒரு பதிவாக்கி விடுலாம்.

   நன்றி சித்ரா உங்கள் கருத்துக்கு மட்டுமல்ல, ஒரு பதிவிற்கான கருவை சொல்லி ஊக்கப்படுத்துவ்தற்கும் தான்.

   Delete
 18. வணக்கம்

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் சார்
   வாயுவை வந்து சேதி சொல்லியதற்கு நன்றி

   Delete
 19. நல்ல ராசி! நல்ல ஸ்மார்ட் போன்!
  நிறைய பேர்கள் இப்படித்தான் ஸ்மார்ட் போனை எப்படி உபயோகப்படுத்துவது என்பது தெரியாமலேயே ஸ்மார்ட் போன் வாங்கி விடுகிறார்கள்.
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ராஜி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

   Delete
 20. சூப்பர் ராசி மேடம்! வழக்கம் போலை இந்த பதிவும் கலக்கல் தான் ;)

  ReplyDelete
 21. சூப்பர் ராசி மேடம்! வழக்கம் போல இந்த பதிவும் கலக்கல் தான் ;)

  ReplyDelete
  Replies
  1. நன்றி மஹா உங்கள் வருகைக்கும் என் பதிவை ரசித்துப் படித்து கருத்திட்டதற்கும் .
   நன்றி.

   Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்