Thursday 31 October 2013

"You Tube"ல் ராசி.





வலையுலகம் எங்கே திரும்பினாலும்   தீபாவளிப்  பற்றிய பதிவுகள் தான்.
சுப்பு  தாத்தா வலைக்கு சென்றால்  அவர் எந்தெந்த பதிவில் என்னென்ன பலகாரங்கள் கிடைக்குமென்கிறார். உஷாவோ  பலகாரப் போட்டி ஒன்று வைத்து  பலகாரம் சுடும் வழி  சொல்லித் தருகிறார். இப்படி எல்லோரும் எதையாவது பற்றி தீபாவளிக்கு  எழுத நாம் மட்டும் விடுவதா  . 

 ராசி  தீபாவளிக்கு  " மைசூர்  பாக் " செய்ததைப் பற்றி எழுதுகிறேன். படித்துப்  பாருங்கள்.

இரண்டு  நாட்களுக்கு முன்பு  விஷ்ணுவிற்கு  பல் வலி இருந்தது.மைலாப்பூரில்   இருக்கும்  பல் டாக்டரிடம்  போய்  ஆலோசனைக் கேட்டதில்,"உங்கள் பல் , " பள்ளிக்  கொண்ட ரங்கநாதரைப்  போல்  கிடக்கிறது."
இப்போதைக்கு  வலி குறைய  மருந்து தருகிறேன். ஆனால் ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு  வாங்க , பல்லை எடுத்து விடுகிறேன் " என்று சொல்லியிருந்தார்,
உடனே  மைசூர்பாக்கினால்  பல் உடைந்து விட்டதா என்று குறுக்கு கேள்வி  கேட்காமல் தொடர்ந்து படியுங்கள் .
கன்னத்தில் கையை வைத்து பல்லைத் தாங்கிக் கொண்டே விஷ்ணு   ,"ராசி ,உனக்குத் தெரியமா. ? இப்பொழுதெல்லாம்  பலகாரம் செய்யும்  முறை  You Tubeஇல்  பதிவேற்றுகிறார்கள். நீ தீபாவளிக்குப்  பலகாரம் செய்வதை நானும்  You Tube இல்  போடுகிறேன். அதனால் செய்முறையை  சொல்லிக் கொண்டே   "மைசூர்  பாக்"  செய் " என்று  சொல்ல

ராசிக்கு  உற்சாகம் தொற்றிக் கொள்ள ,  டிவியில்  ஒளிபரப்புவதாக நினைத்துக் கொண்டாள் . ' நாளைக்கு செய்யட்டுமா 'என்று கேட்டுக் கொண்டே கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

மறு நாள் வெண்டைக்காய் சாம்பார்,  சேனைக்கிழங்கு ரோஸ்ட் , சாலட் எல்லாம் டேபிளில் வைத்தாள் .பின் விஷ்ணுவைப் பார்த்து, ' டைனிங்  டேபிள் மேல் எல்லாம் இருக்கிறது .நீங்களே போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுங்கள்.. மைசூர்பாக்  செய்ய வேண்டுமில்லையா ? அதற்காக நான் பியூட்டி பார்லர் போய் வருகிறேன் . "
என்று சொல்லவும் விஷ்ணு  குழப்பதில் ...

' பார்லருக்கா ? '

"ஆமாம். நீங்கள் தான்  You tube இல் போடுவதாக சொன்னீர்களே. அதற்காகத்  தான்."

பல்வலியுடன் சும்மா இல்லாமல் ,தானே எதையோ சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டதாகப் பட்டது விஷ்ணுவிற்கு.

' ஆனால் இனி மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை '  நினைத்துக் கொண்டார் விஷ்ணு.

கிட்டத்தட்ட  மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வந்தாள் ராசி. அவளைப் பார்த்தால் ஏதோ கல்யாண ரிசப்ஷ்னிற்கு  செல்பவள்
 போல் இருந்தாள்.  நல்ல கரு நீலத்தில் பட்டுப் புடைவை, மேட்சிங்  ப்ளவுஸ், கைகளில் நீல வளையல், கழுத்தில் நீலக்  கல் பதித்த அட்டிகை சகிதமாக வந்து நின்றாள் .

' அழகாகத் தானிருக்கிறாள் . ' நினைத்துக்  கொண்டார்  விஷ்ணு. " ஆனால் 'You Tube" என்று தானே சொன்னேன். அதுவும் மைசூர் பாக்  செய்வதைப் பற்றித் தானே ."

விஷ்ணு  நினைத்துக் கொண்டிருக்கும் போதே .......

டைனிங் டேபிள்  அலங்காரமானது. அதன் மேல்   கடலை  மாவு , சர்க்கரை, நெய் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள்.

இப்பொழுது  விஷ்ணு  வீடியோ ரெக்கார்டிங் ஆரம்பித்தார். 'கிளாப்  'செய்யாதது தான் பாக்கி.
ராசி  கடலை மாவை ,சர்க்கரைப்  பாகில் போட்டு ,நெய்யையும், விட்டு கிளறிக் கொண்டிருக்க விஷ்ணு டைரக்டர் ஆனார் .
அவள் மைசூர்பாக்  செய்வதை விடவும் அட்டிகையை சரி செய்வதற்கும், புடைவைத் தலைப்பு  அழகாய்  தெரிவதற்கும் பிரயத்தனப் பட்டாள் .
' இதில் எங்கே  மைசூர்  பாக்  நன்றாக வரப் போகிறது. இதை எதற்கு அப்லோட் செய்வது ? 'நினைத்துக் கொண்டார். ஆனால் ராசி விட மாட்டாளே .

Ipad உடன் இங்குமங்கும் அலைந்து பல கோணங்களில் "  மைசூர் பாக் " செய்வதைப்  படமாக்க முயற்சி  செய்யலானார்.

மைசூர் பாக் கிளறி, தட்டில் கொட்டி, துண்டு போட்டாகிவிட்டது.அதை ருசி பார்ப்பதையும் வீ டியோ  எடுத்தே ஆக வேண்டும்  என்று ராசி அடம்பிடிக்க  .

ஒரு துண்டை எடுத்து விஷ்ணு கையில் கொடுத்து  வாயில் போடச் சொன்னாள்  ராசி. அவரை  " Guninea Pig "  ஆக்கியதோடு  நிற்கவில்லை ராசி.விஷ்ணு  ருசி பார்ப்பதை இப்பொழுது  ராசி படமாக்கிக் கொண்டிருந்தாள் .
விஷ்ணு மைசூர்பாக்கை  வாயில் வைத்துக் கடிக்க  'கடக்' என்று சத்தம்.

கையால் கன்னத்தைப் பிடித்துக் கொண்டே வாயில் என்னவோ கடிபட்டதே என்று எடுத்துப் பார்க்க , ரத்த வெள்ளத்தில்  பல். வாய் கொப்பளித்து விட்டு  வந்தார் விஷ்ணு.  பல் எடுக்க  மைலாப்பூர்  போக அவசியமில்லாமல் போய் விட்டது .

" மைசூர்பாக் " வில்லனாகி விட்டது பல்டாக்டருக்கு.

ஆனால் அதுவும் பதிவாகி விட்டதே .இதை எப்படி எடிட் செய்வது?  கீழ் வீட்டில் இருக்கும் மணி(software engineer) நினைவிற்கு வர  அவனிடம் ipad ஐக் கொடுத்து ,  எடிட் செய்து அப்லோட் செய்ய சொன்னாள்  ராசி.

சிறிது நேரத்திற்கெல்லாம்  'டிங் டாங்"

பார்த்தால் மணி. " எடிட் செய்து
அப்லோடும் செய்து விட்டேன் " என்று சொல்லிவிட்டு , எப்படி பார்க்க வேண்டும் என்றும்  சொல்லி சென்று விட்டான்.

அதற்குப் பிறகு ராசியை  கையில் பிடிக்க  முடியுமா.தீபாவளி வேலையுடன் அவ்வப்போது  You Tube ஐயும்  பார்த்துக் கொண்டேயிருந்தாள் .

அன்று முழுக்க  ஐம்பது பேர்  பார்த்திருந்தார்கள் என்று  ஹிட்ஸ்  சொல்லியது. அதில் நாற்பத்தி எட்டு முறை  ராசியே பார்த்தது தானிருக்கும்.
வெறுத்துப் போனாள்  ராசி. அதைப் பற்றி  மறந்தும் விட்டாள் .

இரண்டு நாட்களானது. அவளுடைய மெயிலைப் பார்க்கும் போது ஒரு விளம்பர நிறுவனத்திடமிருந்து  "எங்கள்   விளம்பரத்தை  உங்கள் வீடியோவில்  போட்டுக் கொள்கிறோம்  .அதற்கு  சன்மானமும் தரப்படும்.  விருப்பமிருந்தால் தொடர்பு  கொள்ளவும்" என்று எழுதியிருந்தார்கள் 
இதை விஷ்ணுவிடம் சொல்ல இருவரும் திரும்பவும்  youtube பக்கம் செல்ல ,
பார்த்தால்  லட்சோப லட்சம் ஹிட்ஸ். அதில் கமெண்ட்ஸ் வேறு வந்திருந்தது.
"இது என்ன கலாட்டா "  நினைத்தார் விஷ்ணு.
("Gangnam  Style " டான்ஸிற்கு  போட்டியாகிவிடுமோ?)

ஷாலினி என்பவர்," உங்கள் புடைவை  மிகவும் அழகாக இருக்கிறது " என்று கமெண்ட் எழுதியிருந்தார்.

சரோஜா என்பவர்,"இந்த அட்டிகை நன்றாக இருக்கிறது. எந்தக் கடையில் இந்த டிசைன் கிடைக்கும் ? என்று கேட்டிருந்தார்.

லலிதா  என்பவர்  , உங்கள் தோடுகள்  கலர்   சரியில்லை  என்று நக்கீரராய்  மாறியிருந்தார்.

கணேஷ் என்பவர் " உங்கள் கணவர் பல் எப்படி இருக்கிறது "என்று  விசாரிக்க .

பல் டாக்டர் இந்த வீடியோவைத் தடை செய்ய கோர்ட் படி ஏறியிருக்கிறார்.  

திரும்பவும்  வீடியோவைப் பார்த்தால் ,குறும்புக்கார மணி ,எடிட் செய்யாமலே  அப்லோட் செய்தது தெரிய வந்தது.

இது எதைப் பற்றியும் கவலைப் படாத ராசி,  போனை எடுத்து தெரிந்தவர்களுக்கு எல்லாம்   தன்  வீடியோவிற்கு வந்த ஹிட்ஸ் பற்றி  தமுக்கு அடித்ததோடு , விளம்பரக் கம்பனிக்கு வேறு  மெயிலடித்துக் கொண்டிருக்கிறாள்.

" இது எப்படி  இவ்வளவு ஹிட்ஸ் ? " ராசிக்கே  ஆச்சர்யம்  தான்.

ஆனால் விஷ்ணுவிற்கோ  பயம் பிடித்துக்  கொண்டது.
இது  எங்கே போய் முடியப் போகிறதோ  ?  ராசி தன்னை  "வீடியோகிராஃ பராக்கி "விடுவாளே   என்கிற பயத்துடன் இருக்கிறார் விஷ்ணு.

அவர் பயத்தைப் போக்குவீர்களா யாராவது?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்  எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

image courtesy---google.

26 comments:

  1. அதானே....இது எப்படி இவ்வளவு ஹிட்ஸ்....? தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ராசிக்கே ஆச்சர்யம் தான்..நன்றி உங்கள் கருத்துக்கு.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

      Delete
  2. போங்க நீங்க... இவ்வ்வளவும் கொடுத்தீர்கள். அந்தே வீடியோ லிங்க் கொடுக்கவில்லை! எனக்கும் பல் பிரச்னை இருக்கிறது... :)))

    ReplyDelete
    Replies
    1. அந்த வீடியோவிற்கு தான் பல்டாக்டர் ஸ்டே ஆர்டர் வாங்கி விட்டாரே ஸ்ரீராம் சார். நீங்களும் ராசியைப் போல் பல்டாக்டர் பிழைப்பில் மண் போடப்போகிரீர்களா?
      நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  3. பேக் ஐடில நீங்களே ஹிட்டடிச்சுக்கீட்டீங்களா?!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை ராஜி.
      நன்றி என் பதிவைப் படித்து கருத்திட்டதற்கு.
      தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  4. அருமையான நகைச்சுவை பதிவு.
    ஸ்ரீராமுக்கு வீடியோ அனுப்பி வைத்து விடுங்கள்.
    பானுமதியின் அத்தைகாரு சிரிப்பு கதைகள் போல் இருக்கிறது
    உங்களுடைய ராசி பதிவுகள்.
    புத்தகமாய் போடுங்கள்.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும் என்னை பாராட்டுவதற்கும்.
      நீங்கள் ரசித்து சிர்த்ததற்கும், புத்தகம் போடுமளவு என் பதிவு இருப்பதாக புகழ்வதற்கும் மிக்க நன்றி கோமதி.
      தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  5. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நம்பள்கி உங்கள் வருகைக்கும் உங்கள் +1 ற்கும். உங்கள் பதிவிற்கு வந்து கருத்திடுகிறேன்.
      நன்றி.
      தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  6. மிகவும் அருமையாகவும் நகைச்சுவையாகவும் எழுதியுள்ளீர்கள். மீண்டும் மீண்டும் 2 முறை ரஸித்துப்படித்தேன். என் மனைவிக்கும் படித்துக்காட்டினேன்.

    பல் பிரச்சனை பற்றி ஓர் விழிப்புணர்வு ஏற்பட என் “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா” நகைச்சுவை சிறுகதை உதவக்கூடும். விரும்புவோர் படித்து ரசிக்கவும்.

    சிரித்துப் பல் சுளுக்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல
    .
    http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார் ,
      நீங்கள் வருகை தந்து , படித்து, உங்கள் மனைவிக்கும் படித்துக் காட்டி ரசித்து சிரித்தற்கு மிக்க நன்றி சார்.
      உங்கள் பல் பதிவிற்கு வந்து கருத்திட்டு விட்டேன்.
      உயனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
    2. //rajalakshmi paramasivam 1 November 2013 23:32
      வைகோ சார் ,

      //நீங்கள் வருகை தந்து , படித்து, உங்கள் மனைவிக்கும் படித்துக் காட்டி ரசித்து சிரித்தற்கு மிக்க நன்றி சார்.//

      சந்தோஷம்.

      //உங்கள் பல் பதிவிற்கு வந்து கருத்திட்டு விட்டேன்.//

      பார்த்தேன் - மிக்க நன்றி. - அதற்கு நான் பதிலும் அளித்து விட்டேன் - இதோ இங்கேயும் கொடுத்துள்ளேன்.

      rajalakshmi paramasivam October 31, 2013 at 8:01 AM

      வாங்கோ, வணக்கம்/

      //கண்ணில் நீர் வர சிரித்தேன்.//

      சந்தோஷம். ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ தெரியுமோ ? தெரியாவிட்டால் இதோ என்னுடைய மிகக்குட்டியூண்டு கதை ஒன்று உள்ளது:

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html

      // பற்களை கிளீன் செய்யக் கூட பல்டாக்டரிடம் போகக்கூடாது என்ற பேருண்மையைப் புரிந்து கொண்டேன்.//

      ஆஹா, எப்படியோ புரிந்து கொண்டவரையில் நல்லது தான்.

      //பல் டாக்டர்கள் யாரும் உங்கள் மேல் கேஸ் எதுவும் போடவில்லையே//

      இதையெல்லாம் படிக்க அவர்களுக்கு ஏது நேரம்? அவர்கள் நிலமையைப்பற்றியும் ஓர் குட்டியூண்டு கதை எழுதியுள்ளேன் இந்தாங்கோ அதன் இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
    3. rajalakshmi paramasivam October 31, 2013 at 8:07 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பல் செட்டால் படும் கஷ்டங்களை புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //என் அம்மா இந்த மாதிரி நிறைய கஷ்டங்கள் பட்டு வருகிறார். //

      சிலருக்கு செயற்கை பல்செட் செட் ஆகவே ஆகாது. கஷ்டம் தான்.

      //ஆனால் பஞ்சாமி பிறகு என்ன தான் செய்தார்? எப்படி சமாளித்தார்?//

      அவர் என் கதையில் வரும் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் தானே! ;)

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK

      Delete
  7. google+ ல் சுப்பு தாத்தா எழுதியது
    Where is the video ? There is no link in your posting. I need it for immediate reference.
    Rush the link. 2 kg Kadalai maavu, 2 litre ghee, sugar 3 kg, 100 gr.elakkay, 200 cashew , 100 kalkadu, 20 gm kramu are waiting at the table. I have also ignited the stove. .
    subbu thatha.

    ReplyDelete
    Replies
    1. sir,
      The video link is blocked by the court proceedings initiated by the dentist.
      Thankyou for your appreciative comments.

      Delete
  8. விக்ஷ்ணு சார்,

    உங்களை சந்தோஷப்படுத்தப் போவதாக சொல்லி, ராசி என்னிடம் (கெஞ்சி) கேட்டுகிட்டதாலதான் ஆள் வச்சு, பல பெயர்களில் ஹிட் கொடுக்க வச்சேன். அதை அவங்க ஊர் முழுக்க‌ சொல்லி, விளம்பரக் கம்பெனிக்கும் மெயில் அனுப்பி...... இப்படில்லாம் உங்களை பயமுறுத்துவாங்கன்னு தெரிஞ்சிருந்தா.......... !!

    ***********************************

    ராசி,

    'ஹாலோவீன்' இல்ல,அதான், நாளைக்கு சரியாயிடும், (நீங்களும்) பயப்படாதீங்க ராசி !

    இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், நகைச்சுவையான் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா .
      விஷ்ணுவிற்கு தைரியம் கொடுத்து ராசியை சமாதானப் படுத்தி விட்டீர்களே!.
      மிக்க நன்றி சித்ரா.
      இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  9. அப்புறம் ஒன்னு சொல்ல மறந்திட்டேனே, construction காரங்க ராசியின் அப்பாயின்மென்டுக்காக வாசலில் Q ல் நிற்பதாக‌க் கேள்விபட்டேன். கடலை மாவை வைத்து செய்யும் மைசூர்பாக்கையே இவ்வளவு ஸ்ட்ராங்கா செய்யும்போது ......ஹா ஹா ஹா....

    ReplyDelete
    Replies
    1. ஹா.....ஹா....ஹா....
      நன்றி சித்ரா, நன்றாகவே படித்து ரசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.

      Delete
  10. உங்களின் இந்தப் பதிவு சுவையோ சுவை! நகைச்சுவை!

    // கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வந்தாள் ராசி. அவளைப் பார்த்தால் ஏதோ கல்யாண ரிசப்ஷ்னிற்கு செல்பவள்
    போல் இருந்தாள். நல்ல கரு நீலத்தில் பட்டுப் புடைவை, மேட்சிங் ப்ளவுஸ், கைகளில் நீல வளையல், கழுத்தில் நீலக் கல் பதித்த அட்டிகை சகிதமாக வந்து நின்றாள் // .

    இந்தியத் தொலைக்காட்சியில் சமையல் சொல்ல வரும் அம்மணிகள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். கைகளில் இருக்கும் மோதிரங்களை விட்டு விட்டீர்கள்!

    மீண்டும் மீண்டும் படித்தேன். நகைச்சுவை எழுத்தாளர்கள் தேவன், எஸ் வி வி, பாக்கியம் ராமஸ்வாமி ஆகியோர் வரிசையில் உங்களைக் காண்கிறேன்.

    //இப்பொழுது விஷ்ணு வீடியோ ரெக்கார்டிங் ஆரம்பித்தார். 'கிளாப் 'செய்யாதது தான் பாக்கி.//

    // மைசூர் பாக் கிளறி, தட்டில் கொட்டி, துண்டு போட்டாகிவிட்டது.அதை ருசி பார்ப்பதையும் வீ டியோ எடுத்தே ஆக வேண்டும் என்று ராசி அடம்பிடிக்க // .

    //ராசி.விஷ்ணு ருசி பார்ப்பதை இப்பொழுது ராசி படமாக்கிக் கொண்டிருந்தாள் .விஷ்ணு மைசூர்பாக்கை வாயில் வைத்துக் கடிக்க 'கடக்' என்று சத்தம்.//

    // விஷ்ணு. பல் எடுக்க மைலாப்பூர் போக அவசியமில்லாமல் போய் விட்டது .//

    // அன்று முழுக்க ஐம்பது பேர் பார்த்திருந்தார்கள் என்று ஹிட்ஸ் சொல்லியது. அதில் நாற்பத்தி எட்டு முறை ராசியே பார்த்தது தானிருக்கும். //

    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் சார்,//
      //நகைச்சுவை எழுத்தாளர்கள் தேவன், எஸ் வி வி, பாக்கியம் ராமஸ்வாமி ஆகியோர் வரிசையில் உங்களைக் காண்கிறேன்.//நீங்கள் சொல்லியிருக்கும் எழுத்தாளர்கள் எல்லாம் எங்கோ உயரத்தில் இருப்பவர்கள். நான் அவர்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண வாசகி..
      என் எழுத்தை ரசித்து மீண்டும் மீண்டும் படித்ததற்கும், என்னை நகைச்சுவை எழுத்தாளராய் அங்கீகரித்ததற்கும் மிக்க நன்றி சார்.
      இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.

      Delete
  11. ப்ளீஸ் மைசூர்பாக் 50 கிலோ அனுப்பி வைக்கவும்... தோட்டத்து பக்கம்... காம்பவுண்டு சுவர் கொஞ்சம் இடிந்துள்ளது...
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. //உஷா அன்பரசு 1 November 2013 10:12

      //ப்ளீஸ் மைசூர்பாக் 50 கிலோ அனுப்பி வைக்கவும்... தோட்டத்து பக்கம்... காம்பவுண்டு சுவர் கொஞ்சம் இடிந்துள்ளது...//

      Teacher ...... This is too much ! ;)))))

      சுவற்றை மீண்டும் எறும்புகள் அரித்து விடும் ஜாக்கிரதை.

      Delete
    2. பெரிய ஆர்டராய் வந்திருக்கிறதே ராசிக்கு. ராசி மைசூர் பாக்கை வெளஊர் கோட்டை பலகாரப் போட்டிக்கு அனுப்பி வைக்கிறேனே! உங்கள் தாத்தா பாட்டி வேண்டாம். நீங்களே ஜட்ஜ் செயுங்கள். ஓகேயா?
      உங்கள் கருத்துக்கு நன்றி உஷா.
      இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

      Delete
  12. நகைச்சுவை மிளிர அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்