Wednesday 5 March 2014

காதல் ,காதல், காதல், போயின்.......

திரு.GMB அவர்களின் வலைத் தளத்தில் வெளியிட்டிருந்த  போட்டிக் கதையை  என்  பாணியில் முடித்திருக்கிறேன்.

கதையின் முதல் பகுதியைப படிக்க  லிங்க் இது....  http://gmbat1649.blogspot.in/2014/02/blog-post_13.html

கதையைத் தொடர .......


' இப்படிக் கண்டதும் காதலில் உனக்கு உடன் பாடா ? ' என்கிற கேள்வியை பாபு கேட்டதும், சந்தியா சட்டென்று  நிமிர்ந்து பார்த்தாள் . " இவன் என்ன லூசா ?  இல்லை நாம் எப்படிப் பட்டவள்? என்பதையறிய  இந்தக் கேள்வி  கேட்கிறானோ.... என்கிற சந்தேகம் சந்தியாவின் மனதுள் ஓடியது.  சந்திக்கலாம்  என்று சொன்னவுடன்  வந்தது தவறோ? நம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயத்திற்கு  இடம் கொடுத்து விட்டோமோ என்று   தன் மேலேயே கோபம் கொண்டாள் சந்தியா.

ஆனாலும் ,தன்  எண்ண  ஓட்டங்களை மறைத்துக் கொண்டு, " எதற்குக் கேட்கிறீர்கள்? " என்று கேட்க

பாபுவோ," சும்மா தான். " என்று சொல்ல

சந்தியா  பதில் சொல்ல ஆர்மபித்தாள்," உங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால்  கண்டதும் காதல் என்பதில் எனக்கு உடன்பாடெல்லாம் இல்லை. நான் இங்கு வந்தது , இனி  என்னை நீங்கள் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளத் தான். அதோடு  இல்லாமல்  என்னைப் பற்றிய உங்கள்  எண்ணம்  தவறானது என்று சொல்லவும் தான். என் குடும்பம் மிகவும் கட்டுக்கோப்பானக் குடும்பம்.  என்  பெற்றோர் சம்மதம் இல்லாமல் நான்  திருமணம் செய்வதாயில்லை.

உங்கள் படிப்பு, வேலை , குடும்பம்  இதைப் பற்றியெல்லாம் விவரமாக என் பெற்றோரிடம் சொல்லி  பெண் கேளுங்கள் . அவர்கள் சம்மதித்தால் , திருமணத்திற்குப் பிறகு காதலைப்  பற்றி யோசிப்போம் .

உங்களுக்கென்று ஒரு எதிர்கால லட்சியம்  இருக்குமே! அதை மனதில் வைத்து  வேறெதுவும் உங்களை  திசை திருப்பாமல்  அதிலேயே முனைந்து வெற்றி பெறுங்கள்.  அதற்குப் பிறகு  என் பெற்றோரைப் பார்த்து பெண் கேட்டால்  வெற்றி நிச்சயம் "என்று முடிக்க

பாபு சந்தியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து க்கொண்டிருந்தான். இப்பொழுது  அவன் ,அவளைப் பார்த்த பார்வையில் அவள் மேல் இருக்கும் காதலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மரியாதை தான் வெளிப்பட்டது.

"சரி , உங்கள் லட்சியம் தான் என்ன ?' என்று சந்தியா கேட்கவும்,

பாபு " லட்சியமா? " என்று திணறிக்  கொண்டே  நான்  M .COM .,  முடித்து விட்டேன் என்று சொல்லவும்.

சந்தியா." மேலே  என்ன செய்வதாய்  உத்தேசம்? என்று கேட்க  , "ஒரு வேலைத் தேடிக் கொள்ளப் போகிறேன்  "என்று பாபு சொல்ல ,

" வேலையே  இனிமேல் தானா? எந்தத் தைரியத்தில் என்னிடம் காதல் கடிதம் கொடுத்தீர்கள்?பிடியுங்கள் உங்கள் கடிதத்தை.உங்களை நம்பி  உங்கள் பின்னால்  நான் எப்படி வருவேன் ? உங்களுக்கு என்று ஒரு லட்சியம்  தேடிக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள். பிறகு தான் மற்றதெல்லாம்  "என்று சொல்லிக் கொண்டே  திரும்பி நடக்க ஆரம்பித்தாள் . பாபு  பிரமிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. அப்படியே சீட்டில் உட்கார்ந்தான். எதிரே இருந்த விளம்பரப் பலகை ஒன்றையே வெகு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

" நீங்கள் I.A.S ஆக வேண்டுமா?  நாங்கள் பயிற்சித் தருகிறோம்" என்று  அழைத்தது விளம்பரம்.

" லட்சியமாம், லட்சியம். பெரிய கலெக்டர் லட்சியம் "என்று மனதுள் சலித்துக் கொண்டான். .

சட்டென்று தோன்றியது. ஏன்  கலெக்டர்  ஆவதே  இலட்சியமாக்கிக் கொண்டால்  என்ன?  பயிற்சிக் கல்லூரிக்கு சென்று , விவரங்கள் சேகரித்துக் கொண்டு , வீட்டில்  தன்  தந்தையுடன்  ஆலோசித்தான். மறு நாளே பயிற்சி வகுப்பில் சேர்ந்தான்.

பகலென்றும், இரவென்றும் பாராமல்  உழைத்தான். முதல் முறை  அவன் வெற்றி பெறவில்லை. அதற்காகத் தடுமாறவில்லை பாபு . மீண்டுமொரு  முறை  எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று, ட்ரெயினிங் சென்று  சென்னைக் கருகில் கலெக்டர்  பதவியில் அமர்ந்தான்.
சந்தியாவின் நினைவுகள்  மெதுவாக உள்ளேயே கரைந்தன.

சந்தியாவும் அந்த ஊரில் அதிக நாட்கள் இருக்கவில்லை வேறு ஊருக்கு அவள் அப்பாவிற்கு மாற்றலாகி  போய்  விட்டாள் .

வருடங்கள் பல ஓடி விட்டன.  பாபுவிற்கும்  ஆர்த்திக்கும்  திருமணமாகி  இரண்டு குழந்தைகள் .. அன்று  தன்  தோழி   நித்யாவை  வீ ட்டிற்கு அழைத்து வந்திருந்தாள்   பாபுவின்  மகள் நிஷா  .

"எங்கோ பார்த்த  முகமாயிருக்கிறதே"  என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பாபுவிற்கு  சந்தியா நினைவில் வந்து மோதினாள் .

ஆனாலும் எப்படித தெரிந்து கொளவது? என்று  யோசித்துக் கொண்டிருக்கும் போது , ஆர்த்தி பாபுவின் மனைவி, ' இந்தப் பெண் நித்யா   நம் நிஷாவின் கிளாஸ்மேட்.
இவர்கள் வீடு இதே தெருவில் தான். அவர்கள் வீட்டில் இன்று அவளுடைய  பிறந்த நாள் விழா. இதோ பாருங்கள்  இன்விடேஷன். நாமும் போகலாமா? "என்று கேட்க பாபு அவசரமாக ," நான் வரவில்லை. நீயும் நிஷாவும் போங்கள்  " என்று சொல்லி விட்டு  ஆபீஸ் கிளம்பினான்.

மறு நாள் அம்மாவும் பெண்ணும் லேப்டாப்பில் எதையோ ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க  ,என்ன என்று எட்டிப் பார்த்தான் பாபு.

 நித்யாவின் பிறந்த நாள் விழா புகைப் படங்கள். ஒரு போட்டோவில்  நித்யா  அவள் அம்மா அப்பா அருகில் .  வாய் நிறைய சிரித்துக் கொண்டிருக்கும் அவள் அம்மா  சந்தேகமில்லாமல் சந்தியா தான்.

சந்தியாவின்  மேல் இருந்த அன்பு  காதலெல்லாம் இல்லை. வெறும் இனக் கவர்ச்சி.  அப்பொழுதே  அதுக் கருகிப் போனது என்று சொன்னால் ஆர்த்தி நம்புவாளா? இல்லை  சந்தியாவின் கணவர் தான்  ஒத்துக் கொள்வாரா?

எப்படி தானும் , சந்தியாவும் சங்கடத்திலிருந்து விடுபடுவது என்று யோசித்துக் கொண்டே  அலுவலகத்திலிருந்து எடுத்து  வந்த சில  கடிதங்களை  பிரித்து படித்துக் கொண்டிருந்தான். அவன் பிரச்சினைக்கு  தீர்வு கடிதத்தில்  இருந்தது.
ஆமாம் அவனுக்கு  மாற்றலாகியிருந்தது மதுரைக்கு.

மாற்றிய அரசாங்கத்திற்கு நன்றி சொன்னதுடன், சந்தியாவிற்கும் மனதார பெரிய நன்றி சொல்லிக் கொண்டான். M.Com., படித்திருந்தவனை    I.A.S  ஆக்கியது அவள் தானே!

பாபுவிற்கு வந்திருந்தது இனக் கவர்ச்சி மட்டுமே ! தெரிந்தோ ,தெரியாமலோ  சந்தியா  அவனை  சரியான சமயத்தில்  சரியான  வழியில்  திசை திருப்பி விட்டாள் .

23 comments:

  1. அருமையான முடிவு..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  2. பாடமே சொல்லி விட்டீர்கள். நல்ல களம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  3. எப்படியோ I.A.S ஆக்கியது காதல் (இனக் கவர்ச்சி[!]) தான்... பல திரைப்படங்கள் ஞாபகம் வந்தது...!

    முடிவு என்னவென்று பார்ப்போம்...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி தனபாலன் சார்.

      Delete
  4. இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவின் உதவியால் என் தளத்தின் முகவரியை .com என்று மாற்றி விட்டேன் . நன்றி.

      Delete
  5. அருமையான முடிவு தோழி. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ்முகில்

      Delete
  6. எப்படியோ... குடும்பத்தில் குழப்பம் நேராமல் இருந்தால் சரி!..
    எல்லாரும் இப்படித் தெளிவான சிந்தனையுடன் உறுதியாக இருந்து விட்டால் -
    எவ்வளவு நன்றாக இருக்கும்!?.....

    ReplyDelete
  7. ரொம்ப நாளாவே ராசியை இந்தப்பக்கம் காணோமே என்ற ஏக்கத்தை இந்த சிறுகதையின் மூலம் போக்கிவிட்டீர்கள். பாடம் கற்றுக் கொடுத்ததுபோல் இருந்தது. முடிவும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ராசியை நிறைய பேர் கேட்டு விட்டார்கள். ஒரு பதிவு எழுத வேண்டும். உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.

      Delete

  8. தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

    http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளத்திற்கு சென்று submit என்னும் இடத்திற்கு சென்று க்ளிக் செய்தால் sorry error 404 என்று காட்டுகிறது. பலமுறை முயற்சித்து விட்டேன். தோல்வி தான்.வேறு மாதிரி இணைக்க வேண்டுமா என்பதும் புரியவில்லை.

      Delete
  9. அற்புதமாக தொடர்ந்திருக்கிறீர்கள்
    பாஸிட்வாக அருமையாகவும் முடித்திருக்கிறீர்கள்
    ஆனால் ஜி,என் பி சார் அவர் நினைத்துவைத்துள்ள
    முடிவுக்குத்தான் பரிசு எனச் சொல்லி இருக்கிறார்
    என நினைக்கிறேன்
    நல்லவிதமாக தொடர்ந்த கதை என்றால்
    உங்கள் கதைக்குத்தான் பரிசு கிடைக்கும்
    பார்ப்போம்
    வாழ்த்துகளுடன்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி சார்.

      Delete
  10. அருமையான முடிவைக் கொடுத்திருப்பதற்கும், பரிசு கிடைக்கவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி கீதா மேடம்.

      Delete
  11. அருமையான முடிவு....

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. என் வலைத்தளத்துக்கு வருகை தர அழைக்கிறேன்

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்