நம் நாட்டிலிருந்து Miss world, Miss Universe எல்லாம் வந்த பிறகு நம் ஊர் பெண்களின் மனமோ அழகு நிலையங்களை சுற்றியே வட்டமிட ஆரம்பித்தன.
முன்பெல்லாம் அழகு நிலையங்களை மேல்தட்டுப் பெண்கள் , நடிகைகள் ஏகபோக உரிமை கொண்டாடி வந்தார்கள். ஆனால் இப்பொழுது நடுத்தர வர்க்கப் பெண்களும்
" பார்லர் " சென்று தங்களின் அழகை மேலும் மெருகூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தெருவுக்குத் தெரு காளான்கள் போல் முளைத்திருக்கும் அழகு நிலையங்களே அதற்கு சாட்சி.
அழகு அவர்களின் தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது. நல்ல விஷயம் தான்.
சில சமயம் தரமற்ற நிலையங்களுக்கு சென்று வம்பை விலைக் கொடுத்து வாங்குவதும் அங்கங்கே அரங்கேறிக் கொண்டுதானிருக்கின்றன.
வம்புகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இயற்கை அளித்த அழகு சாதனம் ஒன்றைப் பற்றிப் பார்ப்போமா?
வேறென்ன? . நம் பொக்கிஷம் வேம்பு தான் .ஒவ்வொரு வேப்ப மரமும் ஒரு beauty parlour தான்.
இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கும் வேம்பைப் பற்றிய ரகசியம்
இதோ
தினமும் இரண்டு அல்லது மூன்று வேப்பிலைகளை கண்ணை மூடிக் கொண்டு மென்று தின்று விடுங்கள். உங்கள் உடம்பிலுள்ள அசுத்தங்களை நீக்கும் நல்ல டிடர்ஜன்ட். (நன்றாகவே கசக்கும்.
கண்ணை மூடினால் கசப்பு குறையலாம் அல்லது இரண்டு நாட்களில் கசப்பு பழகிவிடும்)
அப்புறம் என்ன , அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பாருங்கள்.
வேப்பிலைகளை தண்ணிரில் கொதிக்க வைத்து அதை நீங்கள் குளிக்கும் நீரோடு கலந்து விடுங்கள். ஒரு நல்ல de-odorant ஆக நம் உடலிற்கு துர்நாற்றத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
அழகி கிளியோபாட்ரா கழுதைப் பாலை பாத் டப் பில் நிரப்பி குளித்தாள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நாம் வேப்பிலை நீரில் குளிப்போமே?
தோல் அலர்ஜிக்கு மிகச்சரியான மருந்து இந்த வேப்பிலை. வேப்பிலையை அரைத்து தோல் அலர்ஜி இருக்கும் இடத்தில் தடவி வாருங்கள். இரண்டு மூன்று நாட்களில் பலன் தெரியும்.
இப்பொழுது நிறைய பேருக்கு வருகின்ற sun allergy துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடும் .
இளம் பெண்களின் மிகப் பெரிய பிரச்சினையே பருக்கள் தான்.
அழகிய பருவ மங்கையான உங்கள் வீட்டுப் பெண்களை வேப்பிலை பேஸ்ட் face mask போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள்.
அப்புறம் பாருங்கள். கன்னமா? தங்ககிண்ணமா? என்று உங்கள் கண்ணே பட்டு விடும் .ஜாக்கிரதை.
வேப்பெண்ணை கூட ஒரு மிகப் பெரிய கிருமிநாசினி தான். இதை முகத்தில் தடவினால் பருக்கள் வந்து சென்ற தடயமே இல்லாமல் இன்ஸ்டன்ட் ஆக முகம் வசீகரிக்கும். வெட்டுக்காயம் தீப்புண்ணிற்கும் மிகப்பெரிய ஆறுதலளிக்கும் இது.
பற்கள் பளபளக்க வேண்டுமா?
கைவசம் இருக்கவே இருக்கிறது வேப்பங்குச்சி..பிறகென்ன ........
பற்களைப் பார்த்து முகம் திருத்திக் கொள்ளலாம்.
வேப்பிலையைக் காய வைத்து பொடி செய்து சின்ன சின்ன துணிப்பைகளில் புடவை பீரோவில் போட்டு வைத்தால் ,அது உங்கள் பட்டுப் புடவைகளை பூச்சி அரிப்பிலிருந்து காப்பாற்றிக் கொடுக்கும் செக்யூரிட்டி ஏஜன்ட்.
இதையெல்லாம் மனதில் வைத்து தான் நம் முன்னோர்கள் வேப்பிலையை தெய்வமாய் கொண்டாடும் பாரம்பர்யத்தை விட்டுச்
சென்றிருக்கிறார்கள்.
அமெரிக்கர்களும், ஜப்பானியர்களும் , ஐரோப்பியர்களும் கூட வேம்பைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் விட்டுக் கொடுக்காமல் நாமே வேம்புப் பொருட்களின் ஆராய்ச்சியில் முந்திக் கொண்டு patent rights வாங்கிவிட்டால் நல்லது.
PAATTI STORIES படித்தீர்களா?
இங்கே படித்து நிறை குறை சொல்லுங்கள்.
image courtesy--google