Showing posts with label வேம்பு. Show all posts
Showing posts with label வேம்பு. Show all posts

Friday, 23 September 2016

பழைய பஞ்சாங்கம்.

google image




 சென்ற வாரத்தில் எனக்கு  பல்லில் வலியான வலி.  கைவைத்தியமாக  கிராம்புத் தைலத்தை  உபயோகித்ததில்  சறறே நிவாரணம் தெரிந்தது. வலியை மறக்க டிவி பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்......
  டிவியில் எனக்காகவே காத்திருந்தாற்போல்,  திருமதி காஜல் அகர்வால் வந்து  "உங்கள் பற்பசையில்  உப்பு இருக்கிறதா?"  என்று கேட்டார்.

"என் பேஸ்ட்டில் உப்பு இல்லையோ. அது தான் வலியோ"  என்கிற  சந்தேகம் வந்தது.

ஒரு சில நாட்களுக்கு முன்பாக," உங்கள் பற்பசையில் கரி இருக்கிறதா என்று வேறு ஒரு நடிகை கேட்டதாக நினைவு.

மார்கெட் உத்தி எப்படியெல்லாம் இருக்கிறது பாருங்கள்.

நான் பள்ளியில் படிக்கும் போது பற்பசையை வீட்டிற்கு, சில விருந்தினர் ,வரும் போது அவர்கள் கையில் மட்டுமே பார்த்ததாக நினைவு.

"ஏன்  நீங்கள் எல்லோரும் பல் விளக்கியதாக  சரித்திரமே இல்லையா?"என்று கேட்காதீர்கள். நாங்கள் பல் விளக்கியது பற்பொடியில் அதுவும் 'ஹோம்மேட்' பற்பொடி .

"பற்பொடியை  வீட்டில் தயாரிக்க முடியும் "என்கிற செய்தி இளம் தலைமுறையினருக்கு பெருத்த ஆச்சர்யமளிக்கும்  விஷயம் என்பது உண்மை.

வீட்டுத் தயாரிப்பு மட்டுமே  நாங்கள் உபயோகித்தது. எப்படி தயாரித்தோம் என்று சொல்கிறேன்.

பலருக்குத் தெரிந்த விஷயமாகத் தானிருக்கும்.

அருகிலிருக்கும் செட்டியார் கடையில் தான் மளிகை சாமான்கள் வாங்குவோம். (ஸூப்பர் மார்கெட்,  பிக் பாஸ்கெட் இல்லாத காலம் அது.) அங்கே 'உமி'யும்  கிடைக்கும்.
'உமி' என்றால்  என்ன ? என்று கேட்பவர்களுக்கு...... நெல்லில் இருந்து 
அரிசியை எடுத்த பின்பு , மிச்சம் இருப்பது தான் உமி. அது  எட்டணாவிற்கு (ஐம்பது பைசா) இரண்டு அல்லது மூன்று படி கிடைக்கும்.

உமி இரண்டு படி வாங்கி வந்து, ஒரு பெரிய இரும்பு வாணலியில் கொட்டி ,  நெருப்பாய் கணன்று கொண்டிருக்கும் கரித்துண்டு , ஒன்றிரண்டை  உமியின் நடுவில் வைத்து வாணலியைக் காலையில் கொல்லையில் வைத்து விட்டு  மறந்து விடலாம். கொஞ்சம் கொஞ்சமாக உமி புகைந்து ,  கருகும்.

மாலையில்  பார்க்கும் போது , எல்லா உமியும் கருகி விட்டிருக்கும். சூடு ஆறின  பிறகு அதில் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கிராம்பு, எல்லாவற்றையும் கலந்து கல்லுரலில் போட்டு, உலக்கையால் இடித்து பொடியாக்கி ,வாசனைக்கு சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து,  ஒரு பெரிய டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்வோம்.

இது தான் 'ஹோம்மேட்' பற்பொடி.  அப்போதெல்லாம்  பல வீடுகளில் 'ஹோம் மேட், பற்பொடி தான் இருக்கும் .

எல்லாமாக சேர்ந்து,செலவு ஐந்து ருபாய்க்குள் அடங்கும்.

எட்டு பேர் அடங்கிய கூட்டுக் குடும்பத்திற்கு , இது இரண்டு, மூன்று  மாதத்திற்கு மேல் தாராளமாய்  வரும்.

பல்லாண்டு ஆரோக்கியமாய் இருந்தன பற்கள்.

பல்லிற்கும்,பர்சிற்கும்  நண்பனானது 'ஹோம்மேட்' பற்பொடி.

பல், பர்ஸ், பற்பொடி மூவரும்   நண்பர்களாய் இருந்தால் பொறுக்குமா? பலரின் கண்ணை உறுத்தியது. பிரிவினை  செயல்பாடுகள் ஆரம்பித்தன.

ஆகவே, மெதுவாக 'பேஸ்ட்'  பக்கம் நம்மை இழுக்கும் மார்க்கெட் உத்தி நடந்தது.

பல் விளக்குவதற்கு உப்பும், கறியும்,சாம்பலுமா? அவை  எல்லாம் பற்களைக் கெடுத்து விடும் என்று பிரெயின் வாஷ் செய்து, நம் கையில் "பேஸ்ட்டைத் திணித்தனர்  பெரும் தொழிலதிபர்கள்.
 நம் உடல் நலத்தில் தான் அவர்களுக்கு எவ்வளவு அக்கறை!

பேஸ்ட்டின் விலை  நம் பர்சைப் பதம் பார்க்க ஆரம்பித்தது.

வருடங்கள் உருண்டோடி விட்டன. மளிகை சாமான் லிஸ்ட்டில்  டூத்பேஸ்ட் இன்றியமையாத இடத்தை பிடிக்க ஆரம்பித்து விட்டன.

நாம் நம் பழைய  பழக்க வழக்கங்களிளிருந்து வெகு தூரம் வந்த பின்பு, இப்பொழுது பிரபல நடிகைகள் கையில் ஒரு மைக்கைக் கொடுத்து 
" உங்கள் பேஸ்ட்டில், உப்பு இருக்கிறதா? கரி இருக்கிறதா? . இந்தப் பேஸ்ட்டை உபயோகியுங்கள். அதில் கூடுதலாக வேம்பும் இருக்கிறது  ." என்று  விளம்பரப் படுத்துகிறார்கள். ..


 எதையெல்லாம் பல்லிற்குக் கேடு என்று அன்று அவர்கள் சொன்னார்களோ,  அதே உமி சாம்பல், உப்பு, வேம்பு, கூடவே  உடல் நலத்திற்குக் கேடு செய்யும் ரசாயணத்தை சேர்த்து, பிளாஸ்டிக்  ட்யூபில் அடைத்து டூத்பேஸ்ட்  என்று விற்று, நம் பர்சில் இருக்கும் பணத்தைப் பிதுக்கி எடுத்து விடுகிறார்கள்.

  அட... இதைத்தான் அப்பவே செய்தோமே பெரிய பொருட் செலவில்லாமல்! என்று சொன்னால்  பழைய பஞ்சாங்கம்  என்கிற பெயர் தான் மிஞ்சும்.

Wednesday, 6 February 2013

அழகோ அழகு










நம்   நாட்டிலிருந்து   Miss  world, Miss Universe       எல்லாம்    வந்த பிறகு   நம்  ஊர்    பெண்களின்  மனமோ   அழகு  நிலையங்களை   சுற்றியே       வட்டமிட   ஆரம்பித்தன.
முன்பெல்லாம்    அழகு     நிலையங்களை   மேல்தட்டுப்     பெண்கள்  ,   நடிகைகள்    ஏகபோக    உரிமை     கொண்டாடி    வந்தார்கள்.    ஆனால்    இப்பொழுது    நடுத்தர     வர்க்கப்   பெண்களும்    
" பார்லர் "   சென்று  தங்களின்   அழகை   மேலும்   மெருகூட்டிக்    கொண்டிருக்கிறார்கள்.

தெருவுக்குத்     தெரு     காளான்கள்     போல்   முளைத்திருக்கும்   அழகு    நிலையங்களே   அதற்கு     சாட்சி.

அழகு    அவர்களின்    தன்னம்பிக்கையைக்    கூட்டுகிறது.    நல்ல    விஷயம்    தான்.

சில    சமயம்    தரமற்ற    நிலையங்களுக்கு    சென்று     வம்பை  விலைக்   கொடுத்து   வாங்குவதும்    அங்கங்கே    அரங்கேறிக்   கொண்டுதானிருக்கின்றன.

வம்புகளில்  மாட்டிக்   கொள்ளாமல்      இருக்க   இயற்கை   அளித்த   அழகு    சாதனம்   ஒன்றைப்   பற்றிப்   பார்ப்போமா?

வேறென்ன?   .     நம்   பொக்கிஷம்    வேம்பு   தான் .ஒவ்வொரு   வேப்ப  மரமும்   ஒரு  beauty   parlour  தான்.

இணையத்தில்    உலா   வந்துக்   கொண்டிருக்கும்   வேம்பைப்   பற்றிய  ரகசியம்
இதோ

தினமும்    இரண்டு   அல்லது     மூன்று     வேப்பிலைகளை    கண்ணை    மூடிக்  கொண்டு    மென்று     தின்று    விடுங்கள்.   உங்கள்    உடம்பிலுள்ள   அசுத்தங்களை     நீக்கும்    நல்ல    டிடர்ஜன்ட்.  (நன்றாகவே    கசக்கும்.
கண்ணை   மூடினால்  கசப்பு    குறையலாம்  அல்லது  இரண்டு   நாட்களில்   கசப்பு   பழகிவிடும்) 

அப்புறம்  என்ன ,   அகத்தின்    அழகு     முகத்தில்     தெரியும்    பாருங்கள்.

வேப்பிலைகளை   தண்ணிரில்    கொதிக்க வைத்து   அதை  நீங்கள்   குளிக்கும்     நீரோடு   கலந்து  விடுங்கள்.  ஒரு  நல்ல    de-odorant   ஆக  நம்   உடலிற்கு    துர்நாற்றத்திலிருந்து   விடுதலை   கிடைக்கும்.

அழகி    கிளியோபாட்ரா    கழுதைப்    பாலை    பாத்  டப் பில்   நிரப்பி   குளித்தாள்   என்று    கேள்விப்பட்டிருக்கிறேன்.

நாம்    வேப்பிலை    நீரில்    குளிப்போமே?

தோல்  அலர்ஜிக்கு    மிகச்சரியான   மருந்து    இந்த  வேப்பிலை.  வேப்பிலையை    அரைத்து    தோல்  அலர்ஜி   இருக்கும்    இடத்தில்    தடவி    வாருங்கள்.  இரண்டு  மூன்று   நாட்களில்   பலன்  தெரியும்.
இப்பொழுது    நிறைய  பேருக்கு  வருகின்ற    sun  allergy   துண்டைக்   காணோம்   துணியைக்    காணோம்    என்று   ஓடிவிடும்    .

இளம்   பெண்களின்   மிகப்  பெரிய   பிரச்சினையே   பருக்கள்   தான்.
அழகிய    பருவ  மங்கையான   உங்கள்   வீட்டுப்    பெண்களை   வேப்பிலை  பேஸ்ட்   face mask    போட்டுக் கொள்ளச்    சொல்லுங்கள்.

அப்புறம்   பாருங்கள்.  கன்னமா?   தங்ககிண்ணமா?  என்று  உங்கள்  கண்ணே   பட்டு விடும்  .ஜாக்கிரதை.


வேப்பெண்ணை    கூட  ஒரு    மிகப்    பெரிய   கிருமிநாசினி     தான்.   இதை     முகத்தில்    தடவினால்    பருக்கள்    வந்து    சென்ற   தடயமே   இல்லாமல்      இன்ஸ்டன்ட்    ஆக    முகம்  வசீகரிக்கும்.   வெட்டுக்காயம்   தீப்புண்ணிற்கும்    மிகப்பெரிய    ஆறுதலளிக்கும்   இது.


பற்கள்    பளபளக்க  வேண்டுமா?   
கைவசம்    இருக்கவே  இருக்கிறது    வேப்பங்குச்சி..பிறகென்ன ........
பற்களைப்   பார்த்து  முகம்  திருத்திக்  கொள்ளலாம்.

வேப்பிலையைக்    காய   வைத்து   பொடி  செய்து   சின்ன    சின்ன   துணிப்பைகளில்   புடவை  பீரோவில்    போட்டு    வைத்தால்   ,அது     உங்கள்  பட்டுப்    புடவைகளை     பூச்சி      அரிப்பிலிருந்து    காப்பாற்றிக்    கொடுக்கும்     செக்யூரிட்டி     ஏஜன்ட்.  

இதையெல்லாம்     மனதில்     வைத்து     தான்     நம்   முன்னோர்கள்     வேப்பிலையை     தெய்வமாய்     கொண்டாடும்      பாரம்பர்யத்தை      விட்டுச்
சென்றிருக்கிறார்கள்.

அமெரிக்கர்களும்,      ஜப்பானியர்களும் , ஐரோப்பியர்களும்      கூட      வேம்பைப்     பற்றி   தெரிந்து      வைத்திருக்கிறார்கள்.  
அவர்களுக்கெல்லாம்      விட்டுக்     கொடுக்காமல்   நாமே      வேம்புப்      பொருட்களின்    ஆராய்ச்சியில்   முந்திக்  கொண்டு patent  rights   வாங்கிவிட்டால்   நல்லது.


PAATTI   STORIES படித்தீர்களா?
இங்கே   படித்து    நிறை குறை  சொல்லுங்கள். 

image courtesy--google 

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்