Wednesday, 23 January 2013

தன்னம்பிக்கை. இணையத்தில்   படித்த கதை.

சுதந்திர தினத்தை ஒட்டி   நடந்த கதை.

குடியரசு தினத்தை நாம் கொண்டாடுகிற வேளையில்   நினைவிற்கு  வந்தது.

கதைக்குப் போவோம்..


வெளிநாட்டு இளைஞன்  ஒருவன்  பட்டப்படிப்பு   படித்து முடித்து  விட்டு

வேலைத் தேடி அலைகிறான்.  ஏற்கனவே நிறைய வேலையில் சேர்ந்து,    ஒத்து வராமல் ஒரு  வேலை விட்டு இன்னொரு  வேலை என்று தாவிக் கொண்டேயிருக்கிறான்.

காரணம்  வேலை   பிடிப்பதில்லை.(உண்மையில்,  வேலையில்  பிடிப்பில்லாமை,,  தன்னம்பிக்கை   இல்லாமை......இப்படி  ' இல்லாமை '  தான் நிறைய.....)

ஒரு நண்பனின் உதவியுடன்  ஒரு பத்திரிகையில்   நிருபராக  சேர்கிறான்.

சேர்ந்தவுடன், அந்தநாட்டின்  சுதந்திர தினம்   வருகிறது.இந்த இளைஞனிற்கு
அந்நாட்டின்   முக்கிய  அலுவலகத்தில்  நடக்கும் சுதந்திர விழாவைப்  பற்றிய   அறிக்கை   சமர்ப்பிக்க   வேண்டிய   பொறுப்பு   அளிக்கப்படுகிறது.

இது அவனுடைய  முதல்  சந்தர்ப்பம்.மிக சிறப்பாக  செய்ய   வேண்டும்.  இந்த வேலையிலாவது   நிலைக்க வேண்டும்  என்பது  அவனுடைய  விருப்பம்.

அதனால் இந்த சந்தர்ப்பம்   தனக்கு கிடைத்தது   அதிர்ஷ்டம்  என்று நினைக்கிறான்.எடுத்தவுடனே  எவ்வளவு பெரிய பொறுப்பு ?

 உற்சாகத்துடனேயே      சென்று   ,நிகழ்ச்சி   தொடங்க   காத்திருக்கிறான்.

நேரம்  ஆகிக் கொண்டேயிருக்கிறது.   விழா ஆரம்பித்த பாடில்லை.  தேசியக்  கொடி,     இன்னும்  ஏற்றப்படவில்லை.

சிறிது நேரம்  கழித்து , ஒரே  சலசலப்பு.   என்னவென்று   புரியவில்லை.  ஒவ்வொருவராய்  அரங்கை  விட்டு சென்று கொண்டிருந்த்தார்கள்  .ஒருவரிடமும் சரியான பதில் இல்லை.

வெகு நேரக்   காத்திருப்புக்கு பின்னர் இன்று விழா நடக்கும்   போல்  தெரியவில்லை.

அவனுடைய  உற்சாகம்  அனைத்தும்   ஆற்று  நீராய்  வடிந்தது.  கொஞ்சமாய்  ஊற்றெடுத்திருந்த.....   நம்பிக்கை   சொல்லாமல் கொள்ளாமல்  விடை பெற்றது.

நம் இளைஞன்  தன்  விதியை நொந்து  கொண்டே   பயங்கர சோகத்துடன்  ஆபீஸ்  செல்கிறான்.நடந்ததை   சொல்கிறான்.

அவனுடைய உயரதிகாரி  அவனை கோபித்துக் கொள்கிறார். எவ்வளவு  அருமையான   சந்தர்ப்பம் ? தவற விட்டு வந்து நிற்கிறாய். எத்தனை விஷயங்கள்.மிஸ்  பண்ணிஇருக்கிறோம்  தெரியுமா?.  யாரிடமாவது, நான்   'press ' என்று  சொல்லிக் கேட்டிருந்தால்    ஒரு முழு  பக்கமே நிரம்பும்   அளவிற்கு    செய்தி கிடைத்திருக்குமே ? கோட்டை  விட்டு விட்டாயே  என்று  வேலையை விட்டு  நீக்குகிறார்.

தன்னுடைய   எதிர்மறை  சிந்தனையால்,  ....மீண்டும் வேலைத்  தேடி அலைவதாக  முடிகிறது  கதை.
விவேகானந்தரின்   150 வது பிறந்த வருடம் கொண்டாடுகிறோம்.விவேகானந்தர் என்ற பெயர்  காதில் விழுந்ததுமே   ஒரு தன்னம்பிக்கை   ஊற்று   நம் எல்லோருக்குள்ளும்    கிளம்புவதை   யாருமே  மறுக்க மாட்டார்கள்.

ஆனால் அவரிடமிருந்த   தன்னம்பிக்கையில்  சிறிதாவது    நமக்கு   யாருக்காவது  இருக்கிறதா?  தெரியவில்லை.

(இல்லை  என்று   சொல்லும் தைரியம்  கூட  இல்லை  என்று தான் சொல்ல வேண்டும் )

தன்னம்பிக்கை   விடுங்கள்.  , தன்னிரக்கம், எதிர்மறை  சிந்தனை  இதெல்லாம் இல்லாமல்,   எத்தனை   பேர்  இருக்கிறோம். ?

  பஸ்   நிலையத்தில்  ஒருவர் அன்று  சொல்லிக் கொண்டிருக்கிறார்."என் அதிர்ஷ்டம்  பற்றி உங்களுக்குத் தெரியாது சார்.  நான் உப்பு  விற்கப்  போனால்  மழை பெய்யும்.  மாவு விற்கப் போனால்  காற்றடிக்கும். பஸ்   கிடைக்காததற்கே    இப்படி என்றால்  மற்ற விஷயங்களில்.........

இந்த எதிர்மறை   சிந்தனை இல்லாமல்  இருந்தாலே நலமாயிருக்கும்.

  நம்  குழந்தைகளுக்கு    சாதத்துடன்   தன்னம்பிக்கையை   ஊட்டி  வளர்ப்போம்

தன்னிரக்கத்தை,எதிர்மறை  சிந்தனையை       இரக்கமின்றி    விரட்டி அடிக்கக்  கற்றுக் கொடுப்போம்..

image courtesy--google

20 comments:

 1. நல்ல சிந்தனை, தெரியாததை தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளாமல், கேட்டுத் தெரிந்துகொள்வதே மேல் சகோ!

  நல்ல சிந்தனையை சொன்னதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஆகாஷ்.
   நன்றி உங்கள் அருமையான கருத்துரைக்கு;

   சகோதரி,
   ராஜி.

   Delete
  2. மிகவும் சிறப்பான பதிவு. தன்னம்பிக்கையளிக்கும் பதிவு. நன்றாக எழுதியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

   Delete
  3. வைகோ சார்,

   உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி .

   வணக்கத்துடன்,
   ராஜி

   Delete
 2. I agree today's youth is rudderless, having no self-confidence. They must all read Swami Vivekananda's books to get themselves inspired. Very nice write.

  ReplyDelete
 3. நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு.

  நம் குழந்தைகளுக்கு சாதத்துடன் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்போம்

  தன்னிரக்கத்தை,எதிர்மறை சிந்தனையை இரக்கமின்றி விரட்டி அடிக்கக் கற்றுக் கொடுப்போம்.//

  ஆம் நன்று சொன்னீர்கள். தன்னம்பிக்கைகொடுத்து வளர்த்தாலே போதும் குழந்தைகளை.
  .
  நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் கெட்டஏண்ணம் தானாக மறையும்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கோமதி,

   நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

   நன்றி.
   ராஜி

   Delete
 4. ராஜலஷ்மி,

  தன்னம்பிக்கையை விதைக்க முற்படும் உங்களுக்கு பாராட்டுக்கள்.அது சம்பந்தமான கதையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.

   ராஜி.

   Delete

 5. அவனுடைய உயரதிகாரி அவனை கோபித்துக் கொள்கிறார். எவ்வளவு அருமையான சந்தர்ப்பம் ? தவற விட்டு வந்து நிற்கிறாய். எத்தனை விஷயங்கள்.மிஸ் பண்ணிஇருக்கிறோம் தெரியுமா?. யாரிடமாவது, நான் 'press ' என்று சொல்லிக் கேட்டிருந்தால் ஒரு முழு பக்கமே நிரம்பும் அளவிற்கு செய்தி கிடைத்திருக்குமே ? கோட்டை விட்டு விட்டாயே என்று வேலையை விட்டு நீக்குகிறார்.//


  அருமையாகச் சொன்னீர்கள்
  தெளிவும் தன்னம்பிக்கையும் தரும்
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டுரைக்கும்.

   ராஜி

   Delete
 6. தன்னம்பிக்கையை அளிக்கும் பதிவு.....பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுரைக்கும்.

   ராஜி

   Delete
 7. எதிர்மறை சிந்தனை இல்லாமல் இருந்தாலே நலமாயிருக்கும்.

  நம் குழந்தைகளுக்கு சாதத்துடன் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்போம்

  மிகவும் சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

   ராஜி.

   Delete
 8. சிறப்பான சிந்தனை. தன்னம்பிக்கை இருந்தால் உலகையே வெல்லலாம்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.

   ராஜி

   Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்