Monday, 7 January 2013

மனைவியின் மகிழ்ச்சி


ஒரு  விளம்பரம்  பார்த்தேன்  .ஒரு பாயசம்  மிக்ஸ்  விளம்பரம்  என்று நினைக்கிறேன்.தோழிகள்  சிலர்  ஒரு பெண்மணி கொடுக்கும்  பாயசத்தை  சுவைத்துவிட்டு   அவளுடைய  பாயசத்தை  புகழுவார்கள்.புகழ்ந்துவிட்டு  சுவைக்கான  காரணத்தையும்  அவர்களே   கூறுவார்கள். 

'அவளுடை கணவரின் பிறந்தநாளாச்சே .இவள் சாப்பாட்டில்  தினமும் சேர்க்கும் அன்பின் அளவை விட, இன்று , இன்னும் கொஞ்சம்  அதிகமாயிருக்கும் 'என்பார்கள்.

இந்த  விளம்பரத்தை  பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றுவது
 ஆண்களில்   தன்  மனைவியின்  அன்பை  முழுவதுமாக புரிந்துக்  கொண்டிருப்பர்கள் எத்தனை பேர்  ?  தெரியவில்லை.
அவளுக்கு  என்னென்ன  ஆசை   இருக்கும்  என்று தெரியுமா என்றும்  யோசிப்பதுண்டு.

பிறந்த வீட்டை,வளர்த்த  உறவை , ஓடிக் குதித்து  ஆடிய  தெருவை ,  நண்பர்களை ,சொந்தங்களை  எல்லாம்ஒரு நொடியில்  உதறி  விட்டு வந்து
 பாகம் பிரியாளாய்............
இளமையில்  இனிய தோழியாய் ,
மத்திம வயதில்  மதியூக மந்திரியாய்,
ணிவிழாவிற்குப்  பின்னர்  தொடரும்  நிழலாய் ,

இருப்பவளுக்கு   எதிர்பார்ப்புகள்  என்று பெரிதாக  எதுவும்   கிடையாது.
சின்ன  சின்ன  ஆசைகள்  தான்.

சமைலறையில் மனைவி அக்கறையாய்  சமைக்கும் போது  சின்னதாய்  உதவிக்கரம்  நீட்டினால்  போதும்.

அன்புடன்  பரிமாறியதை  ருசிக்கும்  போது  ஆஹா.....  பிரமாதம் .இன்னும் கொஞ்சம்  வேண்டும்  என்று கூறிவிட்டால்  மனைவிக்கு   புளகாங்கிதம் .    

பிறந்தநாள் , திருமணநாள்  அன்று பரிசு எதுவும் வேண்டாம்.
அந்த நாளை   நினைவில்   இருத்தி   அன்போடு   ஒரு   பார்வை  அவளுக்குத்
தான்  எத்தனை   கர்வமாயிருக்கும்.

குடும்ப    விஷயங்களில்      வீட்டு  ஹாலில்  சில  முடிவுகள்   எடுக்க நேரும்போது   னைவியின்  சம்மதத்தை  கண்களால் பெற்ற பின்  எடுக்கலாம்.

வெளியிலிருந்து  வரும்   போது  "   வழியில்  பார்த்தேன் .உனக்குப்  பிடிக்குமே என்று  வாங்கி  வந்தேன்   என்று  பூ,  புடவை   என்று  ஏதாவது  வாங்கிவந்தால்  தன்  கணவன்   மனதில்  தான்  சிம்மாசனம்  போட்டு  உட்கார்ந்திருப்பதை  உறுதிபடுத்திக் கொள்வாள்.

மற்றவர்களிடம்  பேசும்போது   தன்   மனைவியின்   திறமைகளை சமையலாகட்டும்,   வீட்டு  நிர்வாகமோ   எதுவானாலும்   மனம்   விட்டுப்  
பாராட்டலாம்.

வெற்றிகளுக்கு, ,  மனைவியும்  காரணம்  என்று கூறாவிட்டாலும்
 பரவாயில்லை,  சில  சங்கடங்களுக்கு  மனைவியை  நோக்கி   விரல்  நீட்டாமல்   இருந்தாலே  அவள்   விரைவில்  சமாளித்து விடுவாள்.

இவையெல்லாம்  இளம் மற்றும்  நடுத்தர   மனைவியின்  சில சின்ன ஆசைகள்  தான்.

மணி விழா  கண்ட மனைவியின்  ஆசை  என்னவாயிருக்கும்  ?
கணவனுடன்  இன்னும்  நீண்ட நாட்கள்  வாழ்வதே  ஆகும்.அதற்கு  ஏதுவாக  
கணவன்  அவ்வப்பொழுது   health check ups  ம்,மருத்துவ   ஆலோசனைப்படி   உணவும்  மருந்தும்  எடுத்துக் கொண்டாலே  போதும்   மனைவியின்  மனமும்,
உடம்பும் நலமாயிருக்கும்.     

இதையெல்லாம்  ஒரு கணவன்  செய்வது   ஒன்றும்  நிலவிற்கு   ராக்கெட்   விடுவது   போல்  பெரிய  பிளான்   தேவையில்லையே !!  

பிரம்மப்   பிரயத்தனமும்   அவசியமில்லையே !!!!

 னைவியின்  மகிழ்ச்சி  இந்த சின்ன சின்ன  வியங்களில்  தான்  இருக்கிறது.

courtesy    google images.

  

23 comments:

 1. Nice post Raji madam! I think most of the young generation husbands are doing this, but there are always exceptions!

  I have a friend here who is having all the expectations you mentioned! It's very hard to continue life like that!

  ReplyDelete
  Replies
  1. Mahi,
   thankyou mahi for visiting my blog and posting your comments.

   raji

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் , பாராட்டுரைக்கும் நன்றி.
   'கண்டிப்பாய் இந்த tips களை கடைபிடிப்பேன்' என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டதற்கு பாராட்டுக்கள் .
   நன்றி. மீண்டும் வருக !

   ராஜி

   Delete
 3. அருமையாகச் சொன்னீர்கள்
  நிச்சயம் அனைவரும் கடைபிடிக்கவேண்டிய
  எளிய ஆயினும் சக்தி மிக்க செய்தியை
  அழகாகச் சொல்லிச் சென்றமைக்கு மனமார்ந்த நன்றி
  மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார்,

   கவித்துவமான உங்கள் பாராட்டுரைக்கு நன்றி கவிஞரே !!

   நன்றி

   ராஜி

   Delete
 4. மிகவும் பயனுள்ள ஆலோசனைகள் தான்.

  //இதையெல்லாம் ஒரு கணவன் செய்வது ஒன்றும் நிலவிற்கு ராக்கெட் விடுவது போல் பெரிய பிளான் தேவையில்லையே !!

  பிரம்மப் பிரயத்தனமும் அவசியமில்லைவ்யே !!!!//

  ஆமாம். மிகவும் சுலபமானதாகத்தான் உள்ளது படிக்க.

  சிலர், இதைவிட நிலவுக்கு ராக்கெட் விடுவதே சுலபமான வேலை என நினைத்து த்ங்களின் இன்பத்தையும் இழந்து, மனைவியையும் துன்பத்திற்கு ஆளாக்கி விடுகிறார்கள்.

  பகிவுர்க்கு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. வைகோ சார்,

   உங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி சார்.

   சிலர் நீங்கள் சொல்வது போல் தான் உள்ளார்கள் .அவர்கள் கொஞ்சம் மாறினால் நன்றாகத் தான் இருக்கும்.

   ராஜி

   Delete
 5. உண்மை,\\மனைவியின் மகிழ்ச்சி இந்த சின்ன சின்ன விஷயங்களில் தான் இருக்கிறது.//

  ReplyDelete
  Replies
  1. ஐயா ,

   நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   ராஜி.

   Delete
 6. ராஜி,

  இது உணர்வுப்பூர்வமானது.இயல்பாகவே வரவேண்டும்.உண்டாக்கினால் நடிப்பது போலாகிவிடும்.இப்போதெல்லாம் பெரும்பாலும் மாறிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.(மாறாட்டி விட்டுடுவோமா என்ன!)

  அவர்களிடம் கேட்டால்,'சூரியனுக்கே ராக்கெட் விட்டுடலாம்,இது முடியாது',என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.அவ்வளவு வேலை பளு.

  இருந்தாலும் நீங்க சொல்லியுள்ள அந்த சின்னசின்ன ஆசைகள் நிறைவேறும்போது ஒரு சந்தோஷம்தான்.

  ReplyDelete
  Replies
  1. சித்ரா,

   ஆண்கள் இப்படி மாறினால் நிஜமாகவே சந்தோஷமாயிருக்கும் .
   ,'சூரியனுக்கே ராக்கெட் விட்டுடலாம்,இது முடியாது' இதை ரசித்தேன்.

   நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

   ராஜி

   Delete
 7. மனைவியின் மகிழ்ச்சி இந்த சின்ன சின்ன விஷயங்களில் தான் இருக்கிறது.

  பெரிய பெரிய உண்மைகளை எளிமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி,

   ஒற்றை வரியில் ஆனால் அழுத்தமாக உங்கள் கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் .

   உங்களுக்கும் நன்றி.

   ராஜி

   Delete
 8. yes nice post..can understand what a wife really expects from husbands..all husbands should do this

  ReplyDelete
  Replies
  1. Thankyou for your visit and comments.

   keep visiting my blog as time permits.

   thankyou.

   raji

   Delete
  2. sure rajalakshmi paramasivam..i subscribed to feeds..thanks for ur post.

   Delete
 9. //கணவன் அவ்வப்பொழுது health check ups ம்,மருத்துவ ஆலோசனைப்படி உணவும் மருந்தும் எடுத்துக் கொண்டாலே போதும் மனைவியின் மனமும்,
  உடம்பும் நலமாயிருக்கும்.// கூடவே நடைப் பயிற்சியும் என்று சேர்த்துக் கொள்ளுங்கள்.

  போன வாரம்தான் இவரிடம் கெஞ்சி கூத்தாடி health check up -ற்கு அழைத்துப் போனேன்.

  என் மனதை அப்படியே படம் பிடித்தாற்போல எழுதி இருக்கிறீர்கள், ராஜி!

  நம்மைப் போல உணர்ச்சி வசப்பட மாட்டார்கள் ஆண்கள். அவர்களுக்கு நம் ஆவலாதிகளைப் புரிய வைப்பது கடினம் தான்.

  நல்ல பகிர்வு ராஜி!

  ReplyDelete
  Replies
  1. ரஞ்சனி,
   டாக்டரிடம் போகவேண்டுமென்றால் நானும் இங்கே ஒரு பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கும்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி .

   ராஜி.

   Delete
 10. That's the secret of sustaining conjugal bliss... all lies in small and tiny things. Well done Raji ma'am.

  ReplyDelete
 11. sir,

  yes you are right.
  thankyou for your nice words.

  raji

  ReplyDelete
 12. மணி விழா கண்ட மனைவியின் ஆசை என்னவாயிருக்கும் ?
  கணவனுடன் இன்னும் நீண்ட நாட்கள் வாழ்வதே ஆகும்.அதற்கு ஏதுவாக
  கணவன் அவ்வப்பொழுது health check ups ம்,மருத்துவ ஆலோசனைப்படி உணவும் மருந்தும் எடுத்துக் கொண்டாலே போதும் மனைவியின் மனமும்,
  உடம்பும் நலமாயிருக்கும்.

  இதையெல்லாம் ஒரு கணவன் செய்வது ஒன்றும் நிலவிற்கு ராக்கெட் விடுவது போல் பெரிய பிளான் தேவையில்லையே !!

  பிரம்மப் பிரயத்தனமும் அவசியமில்லையே !!!!//

  கணவன் இதை மனதில் வைத்துக் கொண்டால் போதும். அருமையான் பதிவு.
  எங்கள் வீட்டிலும் அப்படித்தான் எனக்கு என்றால் வருவார்கள் டாக்டரிடம் அவர்களுக்கு என்றால் வரமாட்டார்கள். எல்லோர் வீட்டிலும் இதே கதை தான் போலும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
   எல்லா ஆண்களும் இப்படித்தான் போலிருக்கிறது.
   என்ன செய்வது?

   நன்றி.

   ராஜி

   Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்